தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 43:13

நாள் உண்டாகாததற்குமுன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நமக்கு எல்லா நாளிலும் கிறிஸ்து தான் வெளிப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களில் ஓய்வு நாளில் தேவாலயத்தில் எந்த சுமைகளையும் கொண்டுவரக்கூடாது என்பதனை நெகேமியா ஜனங்களுக்கு திட சாட்சியாய் கூறுகிறார் என்றால், நம்முடைய கர்த்தராகிய இயேசு நம்முடைய நாளாக எல்லா நாளிலும் நம் உள்ளத்தில் வெளிப்படுகிறதாகையால் எந்த அழிந்து போகிற பொருட்களால் நம் ஆத்துமாவை கறைபடுத்தக்கூடாது என்பதனை நமக்கு திருஷ்டாந்தத்தோடு எடுத்துக்காட்டிய உள்ளத்திற்கு காவலாக கர்த்தரின் வசனம் நமக்கு கோட்டையாக இருக்க வேண்டும்.  அதற்கு மிஞ்சியும் அவர்கள் அலங்கத்தில் வந்து தங்கினவர்களையும் நெகேமியா திட சாட்சியாய் கடிந்துக் கொண்டு; மீண்டும் அருவருத்தால் உங்கள் மேல் கைபோடுவேன் என்கிறான் என்றால் கர்த்தர் நம்மேல் கோபம் கொண்டு நம்மை அடிப்பார் என்பதனை திருஷ்டாந்தபடுத்தி கூறுகிறதை பார்க்கிறோம்.  அவ்விதம் எச்சரிப்பின் சத்தம் கர்த்தரிடத்தில் இருந்து பெற்றுக் கொள்ளும் போது; நாம் அதற்கு கீழ்படிந்து அருவருக்காதபடி தேவனுடைய ஆலயமாகிய நம்முடைய ஆத்துமாவை பாதுகாத்துக்கொண்டு;   நாம் கர்த்தரை களிப்புடன் பாடி சந்தோஷ சத்தமாய் தேவனை முழு மனதோடு ஆர்ப்பரித்து கர்த்தருக்குள் எப்போதும் மனமகிழ்ச்சியோடோ கர்த்தருக்கு ஆராதனை செய்ய வேண்டும். இப்படியாக நாம் தேவனுக்கு ஆராதனை செய்கிறவர்களாக ஒப்புக் கொடுப்போம்.  மணவாட்டி சபையாகிய நமக்கு எல்லா நாளிலும் கிறிஸ்து தான் வெளிப்பட வேண்டும். கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், 

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா அழிந்துபோகிற பொருட்களால் அருவருக்கபடாதபடி ஜாக்கிரதையாக நம்மை காத்துக்கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நெகேமியா 13 : 19- 21

ஆகையால் ஓய்வுநாளுக்குமுன்னே எருசலேமின் பட்டணவாசலில், மாலைமயங்கும்போது, கதவுகளைப் பூட்டவும், ஓய்வுநாள் முடியுமட்டும் அவைகளைத் திறவாதிருக்கவும் வேண்டுமென்று கட்டளையிட்டு, ஓய்வுநாளிலே ஒரு சுமையும் உள்ளே வராதபடிக்கு வாசலண்டையிலே என் வேலைக்காரரில் சிலரை நிறுத்தினேன்.

அதினால் வர்த்தகரும், சகலவித சரக்குகளை விற்கிறவர்களும், இரண்டொருதரம் எருசலேமுக்குப் புறம்பே இராத்தங்கினார்கள்.

அப்பொழுது நான் அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டு, நீங்கள் அலங்கத்தண்டையிலே இராத்தங்குகிறது என்ன? நீங்கள் மறுபடியும் இப்படிச் செய்தால், உங்கள்மேல் கைபோடுவேன் என்று அவர்களோடே சொன்னேன்; அதுமுதல் அவர்கள் ஓய்வுநாளில் வராதிருந்தார்கள்.

மேற்கூறிய வசனங்களில் ஓய்வு நாள் பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும் என்பதற்காகவே;  அதற்கு முன்னே எருசலேமின் பட்டண வாசலில், மாலை மயங்கும் போது கதவுகளை பூட்டவும், ஓய்வு நாள் முடியுமட்டும் அதனை திறவாதிருக்கவும் வேண்டுமென்று கட்டளையிட்டு, அந்த நாளில் ஒரு சுமையும் வராதபடிக்கு வேலைக்காரரில் சிலரை வாசலண்டையிலே நிறுத்தவும்; அதனால் வர்த்தகரும், சகலவித சரக்குகளை விற்கிறவர்களும் இரண்டொருதரம் எருசலேமுக்கு புறம்பே இரா தங்கினார்கள்.  அப்படியாக இராதங்கினவர்களை நெகேமியா திட சாட்சியாய் கடிந்துக் கொண்டு, அவர்களிடம் அலங்கத்தண்டையிலே இரா தங்கக்கூடாது என்றும்; மறுபடியும் அப்படி செய்தால் உங்கள் மேல் கைபோடுவேன் என்று அவர்களிடத்தில் சொன்னதினால் அவர்கள் பின்பு அவ்விடத்தில் வராதிருந்தார்கள். 

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களில் ஓய்வு நாளில் தேவாலயத்தில் எந்த சுமைகளையும் கொண்டுவரக்கூடாது என்பதனை நெகேமியா ஜனங்களுக்கு திட சாட்சியாய் கூறுகிறார் என்றால், நம்முடைய கர்த்தராகிய இயேசு நம்முடைய நாளாக எல்லா நாளிலும் நம் உள்ளத்தில் வெளிப்படுகிறதாகையால் எந்த அழிந்து போகிற பொருட்களால் நம் ஆத்துமாவை கறைபடுத்தக்கூடாது என்பதனை நமக்கு திருஷ்டாந்தத்தோடு எடுத்துக்காட்டிய உள்ளத்திற்கு காவலாக கர்த்தரின் வசனம் நமக்கு கோட்டையாக இருக்க வேண்டும்.  அதற்கு மிஞ்சியும் அவர்கள் அலங்கத்தில் வந்து தங்கினவர்களையும் நெகேமியா திட சாட்சியாய் கடிந்துக்கொண்டு; மீண்டும் அருவருத்தால் உங்கள் மேல் கைபோடுவேன் என்கிறான் என்றால் கர்த்தர் நம்மேல் கோபம் கொண்டு நம்மை அடிப்பார் என்பதனை திருஷ்டாந்தபடுத்தி கூறுகிறதை பார்க்கிறோம்.  அவ்விதம் எச்சரிப்பின் சத்தம் கர்த்தரிடத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் போது; நாம் அதற்கு கீழ்படிந்து அருவருக்காதபடி தேவனுடைய ஆலயமாகிய நம்முடைய ஆத்துமாவை பாதுகாத்துக்கொண்டு;   நாம் கர்த்தரை களிப்புடன் பாடி சந்தோஷ சத்தமாய் தேவனை முழு மனதோடு ஆர்ப்பரித்து கர்த்தருக்குள் எப்போதும் மனமகிழ்ச்சியோடோ கர்த்தருக்கு ஆராதனை செய்ய வேண்டும். இப்படியாக நாம் தேவனுக்கு ஆராதனை செய்கிறவர்களாக ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.