தேவனுக்கே மகிமையுண்டாவதாக
யோவான் 6:27
அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா அழிந்துபோகிற பொருட்களால் அருவருக்கபடாதபடி ஜாக்கிரதையாக நம்மை காப்போம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேப்பகுதியில்,
மணவாட்டி சபையாகிய நாம் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவர்களாக காணப்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
நெகேமியா 13:14-18
என் தேவனே, நான் என் தேவனுடைய ஆலயத்துக்காகவும் அதின் முறைமைகளுக்காகவும் செய்த நற்கிரியைகளைக் குலைத்துப்போடாமல், இந்தக் காரியத்திலே என்னை நினைத்தருளும்.
அந்த நாட்களில் நான் யூதாவிலே ஓய்வுநாளில் சிலர் ஆலைகளை மிதிக்கிறதையும், சிலர் தானியப் பொதிகளைக் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு வருகிறதையும், திராட்சரசம், திராட்சப்பழம், அத்திப்பழம் முதலானவைகளின் பற்பல சுமைகளை ஓய்வுநாளிலே எருசலேமுக்குக் கொண்டுவருகிறதையும் கண்டு, அவர்கள் தின்பண்டம் விற்கிற நாளைப்பற்றி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டேன்.
மீனையும் சகலவித சரக்குகளையும் கொண்டுவந்து, ஓய்வுநாளிலே யூதா புத்திரருக்கும் எருசலேமில் இருக்கிறவர்களுக்கும் விற்கிற சில தீரியரும் உள்ளே குடியிருந்தார்கள்.
ஆகையால் நான் யூதாவின் பெரியவர்களைக் கடிந்துகொண்டு: நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிற இந்தப் பொல்லாத செய்கையென்ன?
உங்கள் பிதாக்கள் இப்படிச் செய்ததினாலல்லவா, நமது தேவன் நம்மேலும் இந்தநகரத்தின்மேலும் இந்தத் தீங்கையெல்லாம் வரப்பண்ணினார்; நீங்களோவென்றால் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறதினால் இஸ்ரவேலின்மேலிருக்கிற உக்கிரத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்கள் என்று அவர்களுக்குச் சொன்னேன்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் நெகேமியா உண்மையுள்ளவர்களின் கைகளில் தேவாலயத்தின் முக்கியமான காரியங்களை ஒப்படைத்த பின்பு அவன் கர்த்தரிடத்தில் சொன்னவைகள்; தான் செய்த நற்கிரியைகள் குலைத்துப்போடாமல் கர்த்தர் அவனை நினைத்து கொள்ளும்படியாகவும், அவன் ஆலயத்தில் நடந்த தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களைக் குறித்து திடசாட்சியாக கடிந்துக் கொண்டதையும்; மேலும் மீனையும், சகலவித சரக்குகளையும் கொண்டு வந்து, ஓய்வு நாளிலே யூதா புத்திரருக்கும், எருசலேமில் இருக்கிறவர்களுக்கும் விற்கிற சில தீரியரும் உள்ளே குடியிருந்ததினால், யூதாவின் பெரியவர்களை கடிந்துக்கொண்டு; நீங்களோ இந்த ஓய்வு நாளை பரிசுத்த குலைச்சலாக்குகிற இந்த பொல்லாத செய்கையென்ன. பிதாக்கள் செய்த பொல்லாப்பினித்தம் இந்த நகரத்தின் மேலும் இந்த தீங்கையெல்லாம் வரபண்ணினார். நீங்களோவென்றால் ஓய்வு நாளை பரிசுத்த குலைச்சலாக்குகிறதினால், இஸ்ரவேலின்மேலிருக்கிற உக்கிரத்தை அதிகரிக்கப் பண்ணுகிறீர்கள் என்று அவர்களுக்கு சொன்னேன் என்று நெகேமியா கர்த்தரிடத்தில் தன்னை குறித்து அறிவிக்கிறான்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களில் நாம் கர்த்தரின் பார்வைக்கு நற்கிரியைகள் செய்வது மட்டுமல்லாமல், சத்துரு அதனை நம் உள்ளத்தில் பொல்லாத செயல்களால் அழித்து போடாதபடி கர்த்தர் நம்மை நினைத்தருள வேண்டும். அல்லாமலும் சபையாம் ஜனங்கள் பொல்லாப்புகள் செய்யும் போதும், நம் உள்ளத்திலும் தேவ சித்தமில்லாத பொல்லாத சிந்தனைகள் வரும் போதும், கர்த்தர் தம்முடைய வார்த்தைகளைக் கொண்டு திட சாட்சியாய் கடிந்துக்கொள்கிறார் என்பது திருஷ்டாந்தப்படுத்துகிறார். மேலும் கர்த்தர் இந்த பொல்லாத காரியங்களை சிந்திக்கிறதென்ன என்று நம்மிடத்தில் கேட்கிறவராக வெளிப்படுவார். ஏனென்றால் பிதாக்கள் கர்த்தருக்கு விரோதமான செய்கைகள் செய்ததால் அநேக தீங்குகள் நம்மேல் வரபண்ணினார். நாமோ ஓய்வு நாளை பரிசுத்த குலைச்சலாக்குகிறதினால், நம்மேல் உள்ள உக்கிரத்தை அதிகரிக்க பண்ணுகிறோம் என்பதனை உணர்ந்துக்கொண்டு; ஒரு போதும் நம் ஆத்துமா அழிந்து போகிற பொருட்களால் பரிசுத்த குலைச்சலாக்காதபடி காத்துக்கொள்வோமானால் கர்த்தருடைய உக்கிரக கோபம் நம்மில் அதிகரிக்கபண்ணாதபடி கர்த்தர் நம்மை பாதுகாப்பார். அவ்விதமாக நாம் ஒவ்வொருவரும் நம் ஆத்துமாவை கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.