தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 101:6

தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடே வாசம்பண்ணும்படி என் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும்; உத்தமமான வழியில் நடக்கிறவன் என்னைச் சேவிப்பான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவர்களாக காணப்பட வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில்,  மணவாட்டி சபையாகிய நாம் நல்லவர்களின் வழியிலே நடந்து பரிசுத்தவான்களின் பாதைகளை காக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நெகேமியா 13:13

அப்பொழுது நான் ஆசாரியனாகிய செலேமியாவையும், வேதபாரகனாகிய சாதோக்கையும், லேவியரில் பெதாயாவையும், இவர்களுக்குக் கைத்துணையாக மத்தனியாவின் குமாரன் சக்கூரின் மகனாகிய ஆனானையும் பொக்கிஷ அறைகளின்மேல் விசாரிப்புக்காரராக வைத்தேன்; அவர்கள் உண்மையுள்ளவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்; ஆகையால் தங்கள் சகோதரருக்குப் பங்கிடுகிற வேலை அவர்களுக்கு ஒப்புவிக்கப்பட்டது.

மேற்கூறிய வசனங்களில்  குறிக்கப்பட்டவர்களை நெகேமியா பொக்கிஷ அறைகளில் விசாரிப்புக்காரராக வைக்கப்பட்டு, அவர்கள் உண்மையுள்ளவர்களாக எண்ணப்பட்டார்கள். ஆகையால் அவர்கள்  தங்கள் சகோதரருக்கு பங்கிடும் வேலை அவர்களுக்கு ஒப்புவிக்கப்பட்டது.

பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வசனங்கள் கிறிஸ்து நம்முடைய சரீரமாகிய ஆலயத்தில், உள்ளான அறைகளாகிய உள்ளான சரீரத்தில் கரத்தர் தந்திருக்கிற ஆத்துமாவின் சந்தோஷம் எப்படிபட்டதாயிருக்கிறது என்பதனை விசாரிக்கிறதில் எல்லாவற்றிற்கும்  அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார் என்பதனை திருஷ்டாந்தப்படுத்தி காட்டுகிறார்.  ஆதலால் சபையாம் சகோதரருக்கு தேவனுடைய சுதந்திரத்தில் பங்கிடும் வேலை அவருக்கு கொடுக்கப்படுகிறது.  ஆதலால் அவர் உண்மையுள்ளவராக இருக்கிறது போல நாமும் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவர்களாக இருக்கும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம். 

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.