தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நீதிமொழிகள் 2:20
ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்வாயாக.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நல்லவர்களின் வழியிலே நடந்து பரிசுத்தவான்களின் பாதைகளை காப்போமாக.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் புதிய கிருபைகளால் நிரப்பப்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
நெகேமியா 13:10-12
பின்னையும் லேவியருக்கு அவர்கள் பங்குகள் கொடுக்கப்படவில்லையென்பதையும், பணிவிடை செய்கிற லேவியரும் பாடகரும் அவரவர் தங்கள் வெளிநிலங்களுக்கு ஓடிப்போனார்கள் என்பதையும் நான் அறிந்துகொண்டேன்.
அப்பொழுது நான் தலைமையானவர்களோடே வழக்காடி, தேவனுடைய ஆலயம் கைவிடப்பட்டுப்போவானேன் என்று சொல்லி, அவர்களைச் சேர்த்து, அவரவர் நிலையில் அவர்களை வைத்தேன்.
அப்பொழுது யூதர் எல்லாரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளில் தசமபாகத்தைப் பொக்கிஷ அறைகளில் கொண்டுவந்தார்கள்.
மேற்கூறிய வசனங்களில் லேவியருக்கு நிலங்களிலாவது அவர்கள் பங்குகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதையும், பணிவிடை செய்கிற லேவியரும் பாடகரும் அவரவர் தங்கள் வெளிநிலங்களுக்கு ஓடிப்போனார்கள் என்பதையும் நெகேமியா அறிந்துக்கொண்ட பின்பு தலைமையானவர்களோடே வழக்காடப் போவேன் என்று சொல்லி, அவர்களை சேர்த்து அவரவர் நிலையிலே வைத்தேன். அப்பொழுது யூதர் எல்லாரும் தானியம் திராட்ச ரசம் எண்ணெய் என்பவைகளின் தசமபாகத்தை பொக்கிஷ அறைகளில் கொண்டு வைத்தார்கள்.
பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களில் கர்த்தர் லேவியரை ஆசாரியராக்கும்படி வாக்கு அருளியிருக்கிறதை நாம் முந்தின சில மாதங்களுக்கு முன்பு தியானித்ததை நினைவுகூர்ந்துக் கொண்டு, இப்பகுதியை தியானிப்போம். என்னவென்றால் அவர்களுக்கு நிலம் பங்கிடாததின் காரணம், அவர்கள் கர்த்தரின் நித்திய சுதந்தரவாளிகளாக இருப்பார்கள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதலால் இங்கு நாம் பார்க்கும் போது யூதர்கள் தங்கள் உள்ளமாகிய பொக்கிஷ அறைகளில் தானியம், திராட்ச ரசம், எண்ணெய் என்பவைகளின் ஆசீர்வாதங்களால் நிரப்பப்படுவார்கள் என்பதனை திருஷ்டாந்தப்படுத்தி, அவர்கள் அதனை தேவாலயத்தின் பொக்கிஷ அறைகளில் கொண்டு வந்தார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. என்னவென்றால் உள்ளான யூதனானவனே யூதன், புறம்பான யூதனானவன் யூதனல்ல என்பது வேத வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நாம் பார்க்கும் போது சத்திய வசனத்தாலும், கிருபையாலும் அபிஷேகத்தாலும், லேவியர்கள் நிரப்பப்படுவார்கள் என்பது குறிப்பிடதக்கது. ஆதலால் நாமும் நல்லவர்களின் வழியிலே நடந்து பரிசுத்தவான்களின் பாதைகளை காப்போமாக. அப்படியே நம்மையும் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.