தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 71:12

தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்; என் தேவனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய சகல முந்தின ஆத்மீக நன்மைகள் இழந்ததை கர்த்தரின் சந்நதியில் சமர்ப்பிக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய இரட்சிப்புக்காக முழு இரவும் கர்த்தரின் பாதத்தில் காத்திருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நெகேமியா 5: 1-5 

ஜனங்களுக்குள் அநேகரும் அவர்களுடைய ஸ்திரீகளும் யூதராகிய தங்கள் சகோதரர்மேல் முறையிடுகிற பெரிய கூக்குரலுண்டாயிற்று.

அதென்னவென்றால், அவர்களில் சிலர்: நாங்கள் எங்கள் குமாரரோடும் எங்கள் குமாரத்திகளோடும் அநேகரானபடியினால், சாப்பிட்டுப் பிழைக்கும்படிக்கு நாங்கள் தானியத்தைக் கடனாக வாங்கினோம் என்றார்கள்.

வேறு சிலர்: எங்கள் நிலங்களையும் எங்கள் திராட்சத்தோட்டங்களையும் எங்கள் வீடுகளையும் நாங்கள் அடைமானமாக வைத்து, இந்தப் பஞ்சத்திலே தானியம் வாங்கினோம் என்றார்கள்.

இன்னும் சிலர்: ராஜாவுக்குத் தீர்வைசெலுத்த, நாங்கள் எங்கள் நிலங்கள்மேலும் எங்கள் திராட்சத்தோட்டங்கள்மேலும், பணத்தைக் கடனாக வாங்கினோம் என்றும்;

எங்கள் உடலும் எங்கள் சகோதரர் உடலும் சரி; எங்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளும் சரி; ஆனாலும், இதோ, நாங்கள் எங்கள் குமாரரையும் எங்கள் குமாரத்திகளையும் அடிமைத்தனத்திற்கு உட்படுத்தவேண்டியதாயிருக்கிறது; அப்படியே எங்கள் குமாரத்திகளில் சிலர் அடிமைப்பட்டுமிருக்கிறார்கள்; அவர்களை மீட்க எங்களுக்கு நிர்வாகமில்லை; எங்கள் நிலங்களும் எங்கள் திராட்சத்தோட்டங்களும் வேறே மனிதர் கைவசமாயிற்று என்றார்கள்.

மேற்கூறிய வசனங்களில் ஜனங்களில் அநேகரும் அவர்களுடைய ஸ்திரீகளும் யூதராகிய தங்கள் சகோதரர் மேல் முறையிடுகிற பெரிய கூக்குரலுண்டாயிற்று.  அவர்கள் இட்ட கூக்குரல் என்னவென்றால் எங்கள் குமாரர் குமாரத்திகள் அநேகரானபடியினால், சாப்பிட்டு பிழைக்கும்படிக்கு தானியத்தை கடனாக வாங்கினோம்.  வேறு சிலர்: தங்கள் வீடுகளையும், நிலங்களையும் திராட்ச தோட்டங்களையும் அடமானமாக வைத்து, வந்த பஞ்சத்திலே தானியம் வாங்குகிறார்கள்; இன்னும் சிலர் ராஜாவுக்கு தீர்வை செலுத்த தங்கள் நிலங்கள் மேலும், தங்கள் திராட்ச தோட்டங்கள் மேலும் பணத்தை கடனாக வாங்கினோம் என்றும், அவர்கள் சொல்கிறது எங்கள் உடலும் எங்கள் சகோதரர் உடலும் சரி; எங்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளும் சரி; ஆனாலும் இதோ நாங்கள் எங்கள் குமாரரையும், எங்கள் குமாரத்திகளையும் அடிமைதனத்திற்கு உட்படுத்த வேண்டியதாயிருக்கிறது;  அப்படியே எங்கள் குமாரத்திகளில்  சிலர் அடிமைப்பட்டுமிருக்கிறார்கள்;  அவர்களை மீட்க எங்களுக்கு நிர்வாகமில்லை; எங்கள் நிலங்களும் எங்கள் திராட்ச தோட்டங்களும் வேறே மனிதர் கைவசமாயிற்று என்றார்கள்.

பிரியமானவர்களே மேற்கூறபட்ட வசனங்கள் திருஷ்டாந்தப்படுத்தியது எதற்கென்றால் நித்திய ஜீவனாகிய அலங்கம் இடிக்கப்பட்டால் நம்முடைய ஆத்மீக நன்மைகளை இழந்து விடுவோம்; அதோடுகூட நம்முடைய பூமிக்குரிய நன்மைகள் இழக்க நேரிடும்.  ஆதலால் நாம் மீண்டும் நம்முடைய இரட்சிப்பை புதுப்பித்துக் கொள்ளும்போது, கழிந்த நாளில் நம் வாழ்க்கையில் நடந்த சம்பவர்களை கர்த்தரிடத்தில் ஒப்புவித்து மன்றாடி ஜெபிக்கிறவர்களாக இருகும்படியாக ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.