தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 34:6

இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய இரட்சிப்புக்காக முழு இரவும் கர்த்தரின் பாதத்தில் காத்திருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, மணவாட்டி சபையாகிய நாம் இரட்சிப்பின் தடைகளை தகர்த்து ஜெயிக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நெகேமியா 4:10-12 

அப்பொழுது யூதா மனிதர்: சுமைகாரரின் பெலன் குறைந்துபோகிறது; மண்மேடு மிச்சமாயிருக்கிறது; நாங்கள் அலங்கத்தைக் கட்டக் கூடாது என்றார்கள்.

எங்கள் சத்துருக்களோவென்றால்: நாங்கள் அவர்கள் நடுவே வந்து, அவர்களைக் கொன்றுபோடுமட்டும், அவர்கள் அதை அறியாமலும் பாராமலும் இருக்கவேண்டும்; இவ்விதமாய் அந்த வேலையை ஓயப்பண்ணுவோம் என்றார்கள்.

அதை அவர்களண்டையிலே குடியிருக்கிற யூதரும், பல இடங்களிலுமிருந்து எங்களிடத்துக்கு வந்து, பத்துவிசை எங்களுக்குச் சொன்னார்கள்.

மேற்கூறபட்ட வசனங்களில் எருசலேமின் அலங்கம் கட்ட தொடங்கின போது; அதற்கு விரோதமாக எழும்பின வல்லமைகளை தகர்க்கும் படியாக கர்த்தரிடத்தில் ஜெபிக்கிற போது, யூதா மனிதர்;  சுமைக்காரரின் பெலன் குறைந்து போகிறது என்றும்; மண் மேடு மிச்சமாயிருக்கிறது; நாங்கள் அலங்கத்தை கட்டக்கூடாது என்றார்கள்.  எங்கள் சத்துருக்களோவென்றால் சொல்வது நாங்கள் அவர்கள் நடுவே வந்து நின்று அவர்களை கொன்றுபோடுமட்டும், அவர்கள் அதை அறியாமலும் பாராமலும் இருக்கவேண்டும்.  இவ்விதமாய் அந்த வேலையை ஓயப்பண்ணுவோம் என்றார்கள்.  அவர்களண்டையிலே குடியிருக்கிற யூதரும், பல இடங்களிலிருந்து எங்களிடத்திற்கு வந்து பத்து விசை எங்களுக்கு சொன்னார்கள்.  அப்போது அலங்கத்துக்கு பின்னாக இருக்கிற பள்ளமான இடங்களிலும், மேடுகளிலும், பட்டயங்களையும், ஈட்டிகளையும், வில்லுகளையும் பிடித்திருக்கிற ஜனங்களை குடும்பம் குடும்பமாக நிறுத்தினதை வாசிக்க முடிகிறது. அப்போது பிரபுக்களையும், அதிகாரிகளையும்  நோக்கி, அவர்களுக்கு பயப்படாதிருங்கள்.  பின்னும் நெகேமியா சொன்னது நம்முடைய தேவன் மகத்துவமான ஆண்டவர் ; அவரை நினைத்து, உங்கள் சகோதரருக்காகவும், உங்கள் குமாரருக்காகவும், உங்கள் குமாரத்திகளுக்காகவும், உங்கள் மனைவிகளுக்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் யுத்தம் பண்ணுங்கள் என்கிறான். பின்பு வேலைகள் சத்தமாய் கையினால் நடந்தேறும்போது, எல்லாரும் தங்கள் கையினாலே வேலை செய்து, மறு கையினாலே ஆயுதத்தை பிடித்திருந்தார்கள்.  கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தை இடுப்புகளில் கட்டிக்கொண்டவர்களாய் வேலை செய்தார்கள; மறு கையினாலே ஆயுதம் பிடித்திருந்தார்கள். எக்காளம் ஊதுகிறவன் பக்கத்தில் நிற்கிறான்.  பின்பு  

நெகேமியா 4:13-15 

அப்பொழுது நான் அலங்கத்துக்குப் பின்னாக இருக்கிற பள்ளமான இடங்களிலும் மேடுகளிலும் பட்டயங்களையும், ஈட்டிகளையும், வில்லுகளையும் பிடித்திருக்கிற ஜனங்களைக் குடும்பங் குடும்பமாக நிறுத்தினேன்.

அதை நான் பார்த்து எழும்பி, பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; நீங்கள் மகத்துவமும் பயங்கரமுமான ஆண்டவரை நினைத்து, உங்கள் சகோதரருக்காகவும், உங்கள் குமாரருக்காகவும், உங்கள் குமாரத்திகளுக்காகவும், உங்கள் மனைவிகளுக்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் யுத்தம்பண்ணுங்கள் என்றேன்.

எங்களுக்குச் செய்தி தெரியவந்ததென்றும், தேவன் அவர்கள் ஆலோசனையை அபத்தமாக்கினாரென்றும், எங்கள் பகைஞர் கேட்டபோது, நாங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வேலையைச் செய்ய அலங்கத்துக்குத் திரும்பினோம்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் இரட்சிப்பை இழந்து விட்டவர்கள் அநேகராயிருந்தபோது அவர்கள் ஒருவருக்கொருவர் தூரமாயிருந்தார்கள்.  பின்னும் நெகேமியா சொன்னனது எக்காள சத்தம் கேட்கும் போது எல்லாரும் ஒரு இடத்தில் கூடுங்கள் கர்த்தர் நமக்காக யுத்தம் செய்குவார்  என்ற போது அவர்களில் பாதிபேர் கிழக்கு வெளுக்கும் நேரமுதல் நட்சத்திரங்கள் காணுமட்டும் ஈட்டிகளை பிடித்திருக்கும் போது; நெகேமியா சொன்னது இராமாறு நமக்கு காவலுக்கும் பகல்மாறு வேலைக்கும் உதவ எல்லாரும் தங்கள் வேலைக்காரரோடு இராத்தங்க கடவர்கள் என்று சொல்லி ஒருவரும் தங்கள் வஸ்திரங்களை களைந்து போடாதிருந்தோம்; அவர்களுக்கு ஆயுதமும் தண்ணீரும் உண்டாயிருந்தது.  

பிரியமானவர்களே மேற்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது கர்த்தர் நமக்காக நம் நடு நின்று யுத்தம் செய்து நம்முடைய சத்துருவினின்று நம்மை இரட்சிக்க வேண்டுமானால் சத்திய வசனத்தாலும்  அவர் கிருபையினாலும் நாம் நிறைவான அனுபவத்தோடு காணப்பட வேண்டும்.  மேலும் சபையாக கூடி கர்த்தருக்கு ஆராதனை செய்கிறவர்களாகவும், முழு இரவும் கர்த்தரின் சமூகத்தில் காத்திருந்து நாம் கர்த்தரின் வசனங்கள் ஏற்றுக்கொண்டும், தேவனை துதித்து மகிமைப்படுத்திக் கொண்டும் நம்முடைய வஸ்திரமாகிய இரட்சிப்பை காத்துக் கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.