தேவனுக்கே மகிமையுண்டாவதாக

வெளி 19:14

பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக்குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின்சென்றார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவின் பெலனால் குதிரைக்கு ஒப்பாக வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, மணவாட்டி சபையாகிய நாம் விசுவாசத்தில் அனுதினம் வளர்ந்து உறுதிப்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நெகேமியா 3:28-30 

குதிரைவாசல் முதற்கொண்டு ஆசாரியர்கள் அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.

அவர்களுக்குப் பின்னாக இம்மேரின் குமாரன் சாதோக் தன் வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்; அவனுக்குப் பின்னாகக் கிழக்கு வாசலைக் காக்கிற செக்கனியாவின் குமாரன் செமாயா பழுதுபார்த்துக் கட்டினான்.

அவனுக்குப் பின்னாகச் செல்மீயாவின் குமாரன் அனனியாவும், சாலாபின் ஆறாவது குமாரனாகிய ஆனூனும், வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக்கட்டினார்கள்; அவர்களுக்குப் பின்னாகப் பெரகியாவின் குமாரன் மெசுல்லாம், தன் அறைவீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.

மேற்கூறிய வசனங்களில் கிறிஸ்துவினால் நாம் அபிஷேகம்பண்ணபட்டு விசுவாசத்தில் வளர்ந்து உறுதி செய்யப்பட்ட பின்பு, குதிரை வாசல் முதற்கொண்டு ஆசாரியர்கள் தங்கள் வீடுகளுக்கு எதிரேயிருக்கிறதை பழுதுப் பார்த்துக் கட்டினார்கள்.  அவர்களுக்கு பின்னாக சாதோக் தன்  வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுப்பார்த்துக் கட்டினான்; அவனுக்கு பின்னாகக் கிழக்கு வாசலைக் காக்கிற செக்கனியாவின் குமாரன் செமாயா பழுது பார்த்துக் கட்டினான்.  அவனுக்கு பின்னாக செல்மீயாவின் குமாரன் அனனியாவும், சாலாபின் ஆறாவது குமாரனாகிய ஆனூனும், வேறொரு பங்கை பழுது பார்த்துக் கட்டினார்கள்.  அவர்களுக்கு பின்னாக பெரகியாவின் குமாரன் மெசுல்லாம், தன் அறை வீட்டிற்கு எதிரே இருக்கிறதைப் பழுதுப் பார்த்துக் கட்டினான். 

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டவற்றை கர்த்தர் திருஷ்டாந்தப்படுவது எதற்கென்றால்; குதிரை வாசல் எனப்படுவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான்; அவருடைய ஆவியின் பெலன் நம் ஆத்துமாவில் பெற்றுக்கொள்ளும்போது, நம்மை குதிரைக்கு ஒப்பிடுகிறார்; என்னவென்றால் அவர் தம்முடைய சத்துருக்கள் நமக்கு விரோதமாக வரும்போது, அவர் பெலனால் சத்துருக்களோடு நம்மில் இருந்து யுத்தம் செய்கிறார். ஆதலால் தான் 

நீதிமொழிகள் 21:31 

குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.

மேற்கூறிய வசனம் நம்மை குதிரையாக ஆயத்தப்படுத்துகிறார்; ஜெயமோ கர்த்தரால் வரும் .  கர்த்தரின் ஆலயமாக நம்மில் கிறிஸ்து மகிமைப்படும்போது நமக்கு கர்த்தரால் ஜெயம் கிடைக்கும் என்பது நிச்சயம்.  ஆதலால் அநேகர் தங்கள் வாழ்வையும் தங்கள் வீட்டின் எல்லா காரியங்களையும் கர்த்தரின் கரத்தில் முழுமையாக ஒப்படைத்து; அப்படியாக தங்களை ஆயத்தப்படுத்துகிறார்கள்.   நாமும் நம்மை அப்படியே ஆயத்தப்படுத்தி கர்த்தரின் கரத்தில்  ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.