தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபேசியர் 3:12 

அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் விசுவாசத்தில் அனுதினம் வளர்ந்து உறுதிப்பட வேண்டும். 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, மணவாட்டி சபையாகிய நம்முடைய மனகண்கள் பிரகாசிக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நெகேமியா 3: 25-27 

ஊசாயின் குமாரன் பாலால் வளைவுக்கு எதிரேயும், காவல் வீட்டின் முற்றத்துக்கடுத்த ராஜாவின் உயரமான அரமனைக்கு வெளிப்புறமாயிருக்கிற கொம்மைக்கு எதிரேயும் இருக்கிறதைக் கட்டினான்; அவனுக்குப் பின்னாகப் பாரோஷின் குமாரன் பெதாயாவும்,

ஓபேலிலே குடியிருக்கிற நிதனீமியரைச் சேர்ந்த மனிதரும் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசலுக்கு வெளிப்புறமான கொம்மைக்கு எதிரேயிருக்கிற இடமட்டும் கட்டினார்கள்.

அவர்களுக்குப் பின்னாகத் தெக்கோவா ஊரார் வெளிப்புறமான பெரிய கொம்மைக்கு எதிரே ஓபேலின் மதில்மட்டும் இருக்கிற பின்னொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் ஊசாயின் குமாரன் பாலாக் வளைவுக்கு எதிரேயும், காவல் வீட்டின் முற்றத்திற்கடுத்த ராஜாவின் உயரமான அரமனைக்கு வெளிப்புறமாயிருக்கிற கொம்மைக்கு எதிரேயும் இருக்கிறதைக் கட்டினான்; அவனுக்கு பின்னாக பாரோஷின் குமாரன் பெதாயாவும், ஓபேலிலே குடியிருக்கிற நிதனீமியரை சேர்ந்த மனிதரும், கிழக்கே தண்ணீர் வாசலுக்கு வெளிப்புறமான கொம்மைக்கு எதிரேயிருக்கிற இடமட்டும் கட்டினார்கள்.  அவர்களுக்கு பின்னாக தெக்கோவா ஊரார் வெளிப்புறமான கொம்மைக்கு எதிரே ஓபேலின் மதில்மட்டும் இருக்கிற பின்னொரு பங்கைப் பழுதுப் பார்த்து கட்டினார்கள்.  பிரியமானவரகளே, மேற்கூறப்பட்ட வார்த்தைகள் கர்த்தர் நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவினால் உள்ள இரட்சிப்புக்கு பின்பு, நம் நடத்தைகள் எல்லாவற்றிலும் அவருடைய சத்தியத்தின் படி ஆத்மீகத்தை கட்டி எழுப்பும்போது நீதியின் சூரியனாகிய கிறிஸ்து நம்மில் பிரகாசித்து எழும்புவார் என்பது திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது.  அவ்விதம் நம் ஆத்துமா எப்போதும்  அவருடைய அபிஷேகத்தினால் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கும். அவ்விதம் நாம் பெற்ற அபிஷேகம் நம்மை எல்லா காரியங்களிலும் விசுவாசத்தை  உறுதிப்படுத்தும்.  இப்படியாக நாம் விசுவாசத்தில் வளர்ந்து உறுதிப்படும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.