தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோவான் 6:57 

ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினது போலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறது போலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் அனுதினம் நம்மை பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவினால் உள்ள இரட்சிப்பில் மகிழ்ந்திருக்க வேண்டும் என்பதனைக் குறித்துத் தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

11நாளாகமம் 35: 1-6 

அதற்குப் பின்பு யோசியா எருசலேமிலே கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரித்தான்; அவர்கள் முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்.

அவன் ஆசாரியர்களை அவர்கள் முறைவரிசைகளில் வைத்து, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்தில் ஆராதனை செய்யத் திட்டப்படுத்தி,

இஸ்ரவேலையெல்லாம் உபதேசிக்கிறவர்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுமாகிய லேவியரை நோக்கி: பரிசுத்தப் பெட்டியைத் தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலின் ராஜா கட்டின ஆலயத்திலே வையுங்கள்; தோளின்மேல் அதைச் சுமக்கும் பாரம் உங்களுக்குரியதல்ல; இப்போது நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும், அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் ஊழியஞ்செய்து,

இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீது எழுதின கட்டளைக்கும், அவன் குமாரனாகிய சாலொமோன் எழுதின கட்டளைக்கும் ஒத்தபடியே உங்கள் பிதாக்களின் குடும்பத்தாருக்காகக் குறிக்கப்பட்ட வரிசையிலே உங்களை ஆயத்தப்படுத்தி,

ஜனங்களாகிய உங்கள் சகோதரருக்காகப் பரிசுத்த ஸ்தலத்திலே பிதாக்களுடைய வம்சப் பிரிவுகளின்படியேயும், லேவியருடைய வம்சத்தார் வகுக்கப்பட்டபடியேயும் நின்று,

பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்து, உங்களைப் பரிசுத்தம்பண்ணி, மோசேயைக்கொண்டு கர்த்தர் சொன்னபடியே உங்கள் சகோதரர் செய்யும்படி, அவர்களுக்கு அவைகளை ஆயத்தப்படுத்துங்கள் என்றான்.

ஆமோனின் குமாரனாகிய யோசியா எருசலேமில் கர்த்தருக்கு பண்டிகை ஆசரித்தான்; அவர்கள் முதலாம் மாதம் பதினாலாந் தேதியிலே பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்  பின்பு அவன் ஆசாரியர்களை முறை வரிசையில் வைத்து,அவர்களை கர்த்தருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்ய திட்டப்படுத்தி இஸ்ரவேலையெல்லாம் உபதேசிக்கிறவர்களும், கர்த்தருக்கு பரிசுத்தமாக்கப்பட்டவர்களுமாகிய லேவியரை நோக்கி சொன்னது; பரிசுத்தப்பெட்டியை தாவீதின் குமாரனாகிய சாலோமோன் என்னும் இஸ்ரவேலின் ராஜா கட்டின ஆலயத்திலே வையுங்கள்; தோளின் மேல் அவர்கள் சுமக்கும் பாரம் உங்களுக்குரியதல்ல; இப்போது நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும், அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் ஊழியஞ்செய்து, இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீது எழுதின கட்டளைக்கும், அவன் குமாரனாகிய சாலொமோன் எழுதின கட்டளைக்கும் ஒத்தபடியே  பிதாக்களின் குடும்பத்தாருக்காக குறிக்கப்பட்ட வரிசையிலே ஆயத்தப்படுத்தி, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் வகுக்கப்பட்டபடியே நின்று, பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்து உங்களை பரிசுத்தம்பண்ணி, மோசேயேக்கொண்டு கர்த்தர் சொன்னபடியே உங்கள் சகோதரர் செய்யும்படி அவர்களுக்கு  அவைகளை ஆயத்தப்படுத்துங்கள் என்றான்.  வந்திருந்த ஜனங்கள் எல்லாருக்கும் அவர்கள் இலக்கத்தின்படியே  ராஜாவாகிய யோசியா கொடுத்த பஸ்கா பலிக்கேற்ற ஆட்டுக்குட்டியாவது 11நாளாகமம் 35:7 

வந்திருந்த ஜனங்கள் எல்லாருக்கும், அவர்கள் இலக்கத்தின்படியே, பஸ்காபலிக்காக முப்பதினாயிரம் ஆட்டுக்குட்டிகளையும், வெள்ளாட்டுக்குட்டிகளையும், மூவாயிரம் காளைகளையும், ராஜாவாகிய யோசியா தன்னுடைய ஆஸ்தியிலிருந்து கொடுத்தான்.

மேலும் பிரபுக்களும் மனப்பூர்வமான காணிக்கையை ஜனத்திற்கும் ஆசாரியர்க்கும் கொடுத்தார்கள்.  அல்லாமலும் 

11ராஜாக்கள் 35:8-9 

அவனுடைய பிரபுக்களும் மனப்பூர்வமான காணிக்கையாக ஜனத்திற்கும் ஆசாரியருக்கும் லேவியருக்கும் கொடுத்தார்கள்; தேவனுடைய ஆலய விசாரணைக்கர்த்தாவாகிய இல்க்கியாவும் சகரியாவும் யெகியேலும் ஆசாரியர்களுக்குப் பஸ்காபலிக்கென்று இரண்டாயிரத்து அறுநூறு ஆட்டுக்குட்டிகளையும், முந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள்.

கொனானியா, செமாயா, நெதனெயேல் என்னும் அவர்கள் சகோதரரும், அசபியா, ஏயெல், யோசபாத் என்னும் லேவியரின் பிரபுக்களும், லேவியருக்குப் பஸ்கா பலிக்கென்று ஐயாயிரம் ஆட்டுக்குட்டிகளையும் ஐந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள்.

மேற்கூறப்பட்டவர்கள் இந்த வசனங்களில் எழுதப்பட்டுள்ளவைகளின் படியே பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள். ஆசாரியர்கள் அவர்கள் கையிலிருந்து இரத்தத்தை வாங்கி தெளித்தார்கள், லேவியர் தோலுரித்தார்கள்.  அல்லாமலும் மோசேயின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி ஜனங்கள் கர்த்தருக்கு பலிசெலுத்தும்படி, அவர்கள் தகனபலி மிருகங்களை, பிதாக்களின் வம்ச பிரிவுகளின்படியே இவர்களுக்குக் கொடுக்கதக்கதாய் அவைகளை பிரித்து வைத்தார்கள்.  காளைகளையும் அப்படியே செய்தார்கள்.  அவர்கள் பஸ்கா ஆட்டுகுட்டியை நியாயமுறைமையின்படியே அக்கினியால் பொரித்து, பரிசுத்தமாக்கப்பட்ட மற்றவைகளை பானைகளிலும், கொப்பரைகளிலும், சட்டிகளிலும் சமைத்து ஜனங்களுக்கெல்லாம் தீவிரமாய் பங்கிட்டுக் கொடுத்தார்கள்.  பின்பு தங்களுக்காகவும், ஆசாரியர்களுக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள்.  ஆரோனின் புத்திரராகிய ஆசாரியர்கள் சர்வாங்க தகனபலிகளையும், நிணத்தையும் செலுத்துகிறதில் இரவு மட்டும் வேலையாயிருந்தபடியினால், லேவியர் தங்களுக்காகவும், ஆரோனின் புத்திரராகிய ஆசாரியர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணினார்கள்.  அல்லாமலும்  

11நாளாகமம் 35:15

தாவீதும், ஆசாபும், ஏமானும், ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய எதுத்தூனும் கற்பித்தபடியே, ஆசாபின் புத்திரராகிய பாடகர் தங்கள் ஸ்தானத்திலும், வாசல்காவலாளர் ஒவ்வொரு வாசலிலும் நின்றார்கள்; அவர்கள் தங்கள் ஊழியத்தை விட்டு விலகக்கூடாதிருந்தது; லேவியரான அவர்கள் சகோதரர் அவர்களுக்காக ஆயத்தப்படுத்தினார்கள்.

11நாளாகமம் 35:15 -ல் கூறப்பட்டபடியே ஆயத்தப்படுத்தினார்கள்.   அப்படியே ராஜாவாகிய யோசியாவின் கட்டளைபடியே பஸ்காவை ஆசரிக்கிறதற்கும், கர்த்தருடைய பலிபீடத்தின் மேல் சர்வாங்க தகனபலிகளை இடுகிறதற்கும் கர்த்தருடைய ஆராதனையெல்லாம் அன்றையதினம் திட்டமாய் செய்யப்பட்டது.  அக்காலத்தில் அங்கே வந்திருந்த இஸ்ரவேல் புத்திரர், பஸ்காவையும், புளிப்பில்லா அப்பப் பண்டிகையும் ஏழு நாளளவும் ஆசரித்தார்கள்.  பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டவைகள் நமக்கு பரிசுத்தமாகுதலுக்கு கர்த்தர் ராஜாவாகிய யோசியாவை வைத்து திருஷ்டாந்தப்படுத்துகிறார். என்னவென்றால் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பஸ்கா ஆட்டுக்குட்டியாக நமக்காக அடிக்கப்பட்டு, அவருடைய இரத்தம் நம்முடைய சகல பாவங்களையும் கழுவி சுத்திகரிக்குமென்பதையும், அப்படியாக நாம் நம்மை ஆயத்தப்படுத்திக்கொண்டவர்களாக காணப்படவேண்டும் என்றும், மேலும் ஆட்டுக்குட்டியை தோலுரித்தார்கள் என்று எழுதப்பட்டிருப்பது என்பது நம்முடைய பாரம்பரிய வாழ்வை முற்றிலும் களைந்துபோடப்பட வேண்டும் என்பதனையும் நமக்காக கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார். மேலும் நம்முடைய ஆத்துமாவை கர்த்தர் ஆட்டுக்குட்டியாக திருஷ்டாந்தப்படுத்தி, கர்த்தருடைய வார்த்தையினால் கிறிஸ்துவின் ஜீவன் நம்மில் பிரவேசித்து,  கர்த்தரின் வசனமாகிய சத்தம் நம்மில் தொனிக்கும் போது, நம்முடைய பாவங்களும், அக்கிரமங்களும் உணர்த்தப்படும் போது, நாம் அந்த வார்த்தயினால் உள்ளம் உடைந்து நொறுங்கும் போது, அவர் நமக்காக அடிக்கப்பட்டு நொறுக்கப்பட்டது நம்மில் கிரியை செய்து  பின்பு நம்முடைய பாவங்களுக்காக அவர் சரீரத்தில் உள்ள இரத்தம் நம்மை கழுவி நாம் சுத்திகரிக்கப்பட்டு,எல்லா பாரம்பரிய வாழ்க்கைகளையும் அத்தனையும்விட்டு கிறிஸ்துவின் வசனத்திற்கு கீழ்படியும் போது அவர் கிருபை நம்மை தாங்கி வழி நடத்தும் என்பது விளங்குகிறது. இவ்விதமான கிருபை பெற்றவர்கள் தங்கள் வாழ்க்கையில் இரட்சிப்பை பெற்றுக்கொள்ள அவர் கற்பனைகளுக்கு கீழ்படிய வேண்டும்.  அதாவது மூழ்கி ஞானஸ்நானம் பெற்றுக் கொள்வது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவோடு கூட நாம் பாவத்திற்கு மரித்து, அவர் ஆவியினாலும் நீதிக்கு பிழைப்பதாகும்.  இப்படி பிழைக்கிறவர்கள் ஆட்டுகுட்டியானவரின் மாம்சமும், இரத்தமும்  புசிக்கும் போது, நம் ஆத்துமா கிறிஸ்துவின் ஜீவன் பெற்று எழும்புகிறது.  பின்பு நாம் அனுதினம் அவருடைய வசனத்தால் நம்மை சுத்திகரித்து பரிசுத்தப்படுத்திக் கொள்கிறவர்களாக இருக்க வேண்டும்.  அதன் பின்பு நம்மை திடப்படுத்தி கர்த்தருக்கு பரிசுத்த ஆராதனை செய்ய நம்மை ஆயத்தப்படுத்திக்கொண்டவர்களாக காணப்படும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.