தேவனுக்கே மகிமையுண்டாவதாக

கலாத்தியர் 3:12

 நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் இரட்சிப்பில் மகிழ்ந்திருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவினால் உள்ள விசுவாசத்தில் வளர்ந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் நம்மை பரிசுத்தப்படுத்த வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

11 நாளாகமம் 34:15-19 

அப்பொழுது இல்க்கியா சம்பிரதியாகிய சாப்பானை நோக்கி: கர்த்தருடைய ஆலயத்திலே நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைக் கண்டெடுத்தேன் என்று சொல்லி, அந்தப் புஸ்தகத்தைச் சாப்பான் கையில் கொடுத்தான்.

சாப்பான் அந்தப் புஸ்தகத்தை ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய், அவனை நோக்கி: உம்முடைய ஊழியக்காரருக்கு கட்டளையிடப்பட்டவைகளையெல்லாம் அவர்கள் செய்கிறார்கள்.

கர்த்தருடைய ஆலயத்திலே சேர்ந்த பணத்தை அவர்கள் கூட்டி, அதை விசாரிப்புக்காரர் கையிலும், வேலைசெய்கிறவர்கள் கையிலும் கொடுத்தார்கள் என்று ராஜாவுக்கு மறுசெய்திசொன்னதும் அல்லாமல்,

ஆசாரியனாகிய இல்க்கியா என் கையில் ஒரு புஸ்தகத்தைக் கொடுத்தான் என்பதைச் சம்பிரதியாகிய சாப்பான் ராஜாவுக்கு அறிவித்து, ராஜாவுக்கு முன்பாக அதை வாசித்தான்.

நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை ராஜா கேட்டபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,

மேற்கூறிய வசனங்களில் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை ஆசாரியனாகிய இல்க்கியா கண்டெடுத்து சம்பிரதியாகிய சாப்பானை நோக்கி சொன்னது: நியாயப்பிரமாண புஸ்தகத்தை கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுத்தேன் என்று சொல்லி சாப்பானுடைய கையில் கொடுக்கிறான்.  சாப்பான் அந்த புஸ்தகத்தை ராஜாவாகிய யோசியாவினிடத்தில் கொண்டு போய்  சொன்னது;  உம்முடைய ஊழியக்காரருக்கு கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்கிறார்கள்.  கர்த்தருடைய ஆலயத்திலே சேர்த்தப் பணத்தை அவர்கள் கூட்டி, அதை விசாரிப்புக்காரர் கையிலும், வேலை செய்கிறவர்கள் கையிலும் கொடுத்தார்கள் என்று  ராஜாவுக்கு மறு செய்தி சொன்னதுமல்லாமல்; ஆசாரியனாகிய இல்க்கியா என் கையில் ஒரு புஸ்தகத்தை கொடுத்தான் என்று சொல்லி, ராஜாவுக்கு முன்பாக அந்த புஸ்தகத்தை வாசித்தான்.  நியாயப்பிரமாணத்தின் புஸ்தகத்தின் வார்த்தைகளை ராஜா கேட்ட போது அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு 

11நாளாகமம் 34:20 

இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனாகிய அகிக்காமுக்கும், மீகாவின் குமாரனாகிய அப்தோனுக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் கட்டளையிட்டுச் சொன்னது:

மேற்கூறப்பட்டவர்களிடம்  ராஜா சொன்னது

 11நாளாகமம் 34:21-28 

கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தினுடைய வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் இஸ்ரவேலிலும் யூதாவிலும் மீதியானவர்களுக்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்யும்படிக்கு கர்த்தருடைய வார்த்தையை நம்முடைய பிதாக்கள் கைக்கொள்ளாதேபோனபடியினால், நம்மேல் மூண்ட கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்.

அப்பொழுது இல்க்கியாவும் ராஜா அனுப்பின மற்றவர்களும் அஸ்ராவின் குமாரனாகிய திக்வாதின் மகனான சல்லூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப் போனார்கள்; அவள் எருசலேமில் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தாள்; அவளோடே அதைப்பற்றிப் பேசினார்கள்.

அவள் இவர்களை நோக்கி: உங்களை என்னிடத்தில் அனுப்பினவருக்கு நீங்கள் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறதாவது,

இதோ, யூதாவின் ராஜாவுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சகல சாபங்களுமாகிய பொல்லாப்பை நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணுவேன்.

அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபம் உண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபங்காட்டினபடியினால், என் உக்கிரம் அவிந்துபோகாதபடி இந்த ஸ்தலத்தின்மேல் இறங்கும் என்று கர்த்தர் உரைக்கிறார்.

கர்த்தரிடத்தில் விசாரிக்கிறதற்கு உங்களை அனுப்பின யூதாவின் ராஜாவினிடத்தில் நீங்கள் போய்: நீ கேட்ட வார்த்தைகளைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,

இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக தேவன் சொன்ன அவருடைய வார்த்தைகளை நீ கேட்கையில், உன் இருதயம் இளகி, எனக்கு முன்பாக நீ உன்னைத் தாழ்த்தி, எனக்கு முன்பாகப் பணிந்து, உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எனக்கு முன்பாக அழுதபடியினால், நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இதோ, நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணும் எல்லாப் பொல்லாப்பையும் உன் கண்கள் காணாதபடிக்கு, நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்த்துக்கொள்ளப்பட, நான் உன்னை உன் பிதாக்களண்டையிலே சேரப்பண்ணுவேன் என்கிறார் என்று சொன்னாள்; அவர்கள் ராஜாவுக்கு மறுசெய்தி கொண்டுபோனார்கள்.

மேற்கூறியப்பிரகாரம் ராஜா அனுப்பியவர்கள் உல்தாள் என்ற தீர்க்கத்தரிசியானவளிடத்தில்;  பிதாக்கள் கர்த்தருடைய கட்டளைகளை கைக்கொள்ளாததினால் அவருடைய உக்கிரம் பெரிது என்று ராஜா விசாரிக்க அனுப்பினவர்கள் போனார்கள்.  ஆனால் அவள் கூறிய கர்த்தருடைய வார்த்தைகளும் எழுதப்பட்டுள்ளது.  இதனை கேட்ட ராஜா யூதாவிலும், எருசலேமிலுமுள்ள மூப்பரையெல்லாம் அழைப்பித்துக் கூடிவர செய்து ராஜாவும், சகல சபையார் எல்லாரும் பெரியோர் முதல் சிறியோர் மட்டுமுள்ள சகலருமாய்க் கர்த்தருடைய ஆலயத்திற்கு போனார்கள்.  கர்த்தருடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான்.  ராஜா தன் ஸ்தானத்திலே நின்று அந்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கையின் வார்த்தையின்படியே செய்வதினாலே, கர்த்தரை பின்பற்றி நடப்பேன் என்றும், தன் முழு ஆத்துமாவோடும், முழு இருதயத்தோடும், அவருடைய கற்பனைகளையும், அவருடைய சாட்சிகளையும், அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளுவேன் என்றும் கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கைப்பண்ணி, எருசலேமிலும், பென்யமீனிலும் காணப்பட்ட யாவரையும் அதற்கு உட்படபண்ணினான்.  எல்லா எருசலேம் குடிகளும், தங்கள் பிதாக்களின் தேவனுடைய உடன்படிக்கையின்படியே செய்தார்கள்.  யோசியா ராஜா இஸ்ரவேல் தேசமெங்குமுள்ள எல்லா அருவருப்புகளையும் அகற்றி, இஸ்ரவேலிலே காணப்பட்டவர்களையெல்லாம் தங்கள் தேவனாகிய கர்த்தரை சேவிக்கும்படி செய்தான்; அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டு பின் வாங்கவில்லை. 

பிரியமானவர்களே,மேற்கூறப்பட்ட வார்த்தைகள் நமக்கு திருஷ்டாந்தத்திற்கென்று எழுதப்பட்டுள்ளது.  அல்லாமலும் நம் பிதாக்களின் தேவன் என்பது; ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு  என்பவர்களின் தேவன் நம்முடைய தேவன்.  நாம் ஒரு போதும் விக்கிரகங்களை பின்பற்றக்கூடாது என்பதும், மோசேயை வைத்து கர்த்தர் நமக்கு எழுதி தந்திருக்கிற ஒவ்வொரு நியாயப்பிரமாணத்தின் கற்பனைகள் கட்டளைகள், சாட்சிகள் இவைகளை சபையார் யாவரும், முழுமனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு இருதயத்தோடும் கைக்கொள்வோம் என்று ராஜாவாகிய கிறிஸ்து நம் உள்ளத்திற்குள் தேவனோடு உடன்படிக்கை செய்வது திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது.  ஆதலால் நமக்காக கிறிஸ்து உடன்படிக்கை செய்து நம் முன்னோர்கள் விக்கிரகங்களை பின்பற்றினதினால்  நமக்கு வந்த தேவனுடைய உக்கிர கோபம் நம்மேல் வராமல், நம் இரட்சிப்பில் கிறிஸ்து நமக்காக கர்த்தரிடத்தில் பரிந்து பேசி நம்மை பாதுகாக்கிறார். நாமும் இந்த பிரகாரம் நமக்கு தந்திருக்கிற கர்த்தரின் நியாயபிரமாண கற்பனைகள் கட்டளைகள் சாட்சிகள் இவைகள் எல்லாவற்றின்படியும் நடப்போம் என்று முழு இருதயத்தோடும், முழு பலத்தோடும், முழு ஆத்துமாவோடும் ஒப்புக்கொடுப்போம்.  கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.