தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1தெசலோனிக்கேயர் 5:17,18

இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.

எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளம் சாத்தானால் வஞ்சிக்கப்படாமல் எப்போதும் ஸ்துதியும், ஸ்தோத்திரமும் நிறைந்ததாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் செய்த குற்றங்களுக்கு தக்கதாக கர்த்தரிடத்தில் கெஞ்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால், 

11நாளாகமம் 33:21-25 

ஆமோன் ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.

அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய மனாசே பண்ணுவித்திருந்த விக்கிரகங்களுக்கெல்லாம் ஆமோன் பலியிட்டு, அவைகளைச் சேவித்தான்.

தன் தகப்பனாகிய மனாசே தன்னைத் தாழ்த்திக்கொண்டதுபோல, இந்த ஆமோன் என்பவன் கர்த்தருக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தாமல் மேன்மேலும் அக்கிரமம் செய்துவந்தான்.

அவன் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் அரமனையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்.

அப்பொழுது தேசத்து ஜனங்கள் ஆமோன் என்னும் ராஜாவுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணின யாவரையும் வெட்டிப்போட்டு, அவன் குமாரனாகிய யோசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் மனாசேயின் குமாரன் ஆமான் ராஜாவாகிற போது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.  அவன் தன் தகப்பன் செய்தது போல கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தான்.  தன் தகப்பன் செய்த விக்கிரகங்களுக்கெல்லாம் ஆமான் பலியிட்டு, அதனை சேவித்து வந்தான்.  அவன் தன் தகப்பனாகிய மனாசே தாழ்த்திக்கொண்டது போல தன்னை தாழத்தாமல் மென்மேலும் அக்கிரமங்களை செய்து வந்தான்..  அவன் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாக கட்டுபாடுபண்ணி, அரமனையிலே அவனைக் கொன்று போட்டார்கள்.  அப்பொழுது தேசத்து ஜனங்கள் ஆமானுக்கு விரோதமாக கட்டுப்பாடு பண்ணினவர்கள் யாவரையும் வெட்டிப்போட்டி, அவன் குமாரனாகிய யோசியாவை ராஜாவாக்குகிறார்கள்.  

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது, நம்முடைய ஆத்துமாவுக்குள் சத்துரு விதைக்கிற விதையினால் நம்மில் அனுதினம் வருகிற சிந்தைகளும், அதன் நல்ல சிந்தைகளும், பொல்லாத சிந்தைகளையும் கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்தி நமக்கு ராஜாக்கள் அவர்களின்  குமாரர்கள் என்று வரிசையாக எழுதப்பட்டுள்ளது. ஆதலால் நாம் நம்முடைய அனுதின ஜீவிதத்தில் மிகவும் கவனத்தோடும், எச்சரிப்போடும் கரத்தருக்கு கீழ்படிந்து, பயத்தோடும் , நடுக்கத்தோடும் அவரை சேவித்துக்கொண்டு, நம்முடைய சபையாம் குடும்பங்களையும் கர்த்தருக்கு உகந்த பிரகாரம் நடத்த வேண்டும், நாமும் அதன் பிரகாரம் நடக்கிறவர்களாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நம்முடைய ஆத்துமா கொலை செய்யப்படுகிறது.  ஆதலால்  சத்துரு ஒரு நாளிலும் நம்முடைய உள்ளத்தில் விதை விதைக்காமல் நாம் கிறிஸ்துவின் சிந்தையில் தேறினவர்களாகவும், எப்போதும் ஜெபத்தாலும், ஸ்தோத்திரத்தாலும், துதியாலும் நம் உள்ளம் நிறைந்ததாக காணப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.