தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 11:5 

உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன் துன்மார்க்கத்தினால் விழுவான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டிசபையாகிய நாம் செய்த குற்றங்களுக்காக கர்த்தரிடத்தில் நம்மை தாழ்த்தி கெஞ்சி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளம் ஒருபோதும் பாகாலின் பலிபீடமாக மாறாமல் ஜாக்கிரதையோடு கர்த்தருக்குள் திடப்படவேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,

11 நாளாகமம் 33:12-20 

இப்படி அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான்.

அவரை நோக்கி, அவன் விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்; கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்.

பின்பு அவன் தாவீதுடைய நகரத்தின் வெளி அலங்கத்தைக் கீயோனுக்கு மேற்கேயிருக்கிற பள்ளத்தாக்குதொடங்கி மீன்வாசல்மட்டும் கட்டி, ஓபேலைச் சுற்றிலும் அதை வளைத்து, அதை மிகவும் உயர்த்தி, யூதாவிலுள்ள அரணான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தலைவரை வைத்து,

கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அந்நிய தேவர்களையும் அந்த விக்கிரகத்தையும் எடுத்துப்போட்டு, கர்த்தருடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லாப் பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்குப்புறம்பாகப் போடுவித்து,

கர்த்தருடைய பலிபீடத்தைச் செப்பனிட்டு, அதின்மேல் சமாதானபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் செலுத்தி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கவேண்டும் என்று யூதாவுக்குக் கட்டளையிட்டான்.

ஆகிலும் ஜனங்கள் இன்னும் மேடைகளில் பலியிட்டுவந்தார்கள்; என்றாலும் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கென்றே அப்படிச் செய்தார்கள்.

மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் தன் தேவனை நோக்கிப்பண்ணின விண்ணப்பமும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் அவனோடே பேசின ஞானதிருஷ்டிக்காரரின் வார்த்தைகளும், இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

அவனுடைய விண்ணப்பமும், அவன் கெஞ்சுதலுக்குக் கர்த்தர் இரங்கினதும், அவன் தன்னைத் தாழ்த்தினதற்குமுன்னே பண்ணின அவனுடைய எல்லாப் பாவமும் துரோகமும், அவன் மேடைகளைக் கட்டி விக்கிரகத் தோப்புகளையும் சிலைகளையும் ஸ்தாபித்த இடங்களும், ஓசாயின் பிரபந்தத்தில் எழுதியிருக்கிறது.

மனாசே தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனை அவன் வீட்டிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆமோன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

மேற்கூறிய வசனங்களில் ராஜாவாகிய எசேக்கியாவின் குமாரன் மனாசே கர்த்தருக்கு விரோதமான பொல்லாப்புகளை செய்து பாகாலுக்கு பலிபீடம் கட்டி, அந்நிய தேவர்களுக்கு தூபங்காட்டினதால் கர்த்தர் அசீரியா ராஜாவின் சேனைகளை அனுப்பி நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக தன்னை தாழ்த்தினான்.  அப்போது அவன் கர்த்தரிடத்தில் கெஞ்சினதினால் கர்த்தர் இரங்கி, அவன் ஜெபத்தை கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரபண்ணினார்; கர்த்தரே தேவன் என்று மனாசே அறிந்துக் கொண்டான்.  அவன் தாவீதின்  நகரத்தின் வெளி அலங்கத்தைக் கீயோனுக்கு மேற்கேயிருக்கிற பள்ளதாக்குத் தொடங்கி மீன் வாசல் மட்டும் கட்டி, ஓபேலை சுற்றிலும் அதை வளைத்து, அதை மிகவும் உயர்த்தி, யூதாவிலுள்ள அரணான பட்டணங்களெல்லாம் இராணுவத் தலைவரை வைத்து, பின்பு கர்த்தருடைய ஆலயத்தில் தான் கட்டியிருந்த எல்லா பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்குப் புறம்பாக போடுவித்து, கர்த்தருடைய பலிபீடத்தை செப்பனிட்டு, அதின் மேல் சமாதானபலிகளையும், ஸ்தோத்திரபலிகளையும் செலுத்தி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை சேவிக்க வேண்டும் என்று யூதாவுக்கு கட்டயிட்டான்.  ஆகிலும் ஜனங்கள் மேடைகளின் மேல் பலியிட்டு வந்தார்கள்; ஆகிலும் தங்கள் கர்த்தருக்கென்றே அப்படி செய்தார்கள்.  மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் தன் தேவனை நோக்கி  பண்ணின விண்ணப்பமும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் அவனோடே பேசின ஞானதிருஷ்டிகாரரின் வார்த்தைகளும், இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியுள்ளது.    மேலும் அவன் விண்ணப்பமும், அவன் கர்த்தரிடத்தில் கெஞ்சிதலுகேற்ற கர்த்தர் அவனுக்கு இரங்கினதும், அவன் தன்னை தாழ்த்தினதற்கு முன்னே பண்ணின எல்லா பாவமும், துரோகமும், அவன் மேடைகளை கட்டி விக்கிரக தோப்புகளையும், சிலைகளையும் ஸ்தாபித்த இடங்களும் ஓசாவின் பிரபந்தத்தில் எழுதப்பட்டுள்ளது.  மனாசே தன் பிதாக்களோடே நித்திரையடைந்த பின்பு, அவனை அவன் வீட்டிலே அடக்கம் பண்ணினார்கள்.  பின்பு அவன் குமாரனாகிய ஆமோன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.  

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்கள் நாம் கர்த்தருக்கு விரோதமாக செய்த பாவத்தினால் கர்த்தர் நம்மை நெருக்கத்திற்கு ஒப்புக்கொடுக்கிறார் என்பதும், அந்த நெருக்கத்திலிருந்து நம்மை எப்படி விடுவிக்கிறார் என்பதும்;  நம்மை கர்த்தரின் சந்நிதியில் தாழ்த்தி, நாம் செய்த பாவங்களுக்கு கர்த்தரிடத்தில் கெஞ்சி பாவமன்னிப்புக்கேட்டு, பின்பு எந்த குற்றங்கள் எல்லாம் செய்தோமோ அத்தனையும் நற்கிரியைகளாக நாம் கர்த்தரின் சந்திதியில் செய்து, பாகாலின் பலிபீடங்கள், விக்கிரக தோப்புகள், சிலைகள் எல்லாம் நம்மை விட்டு அகற்றி, கர்த்தருக்கு நம்முடைய உள்ளத்தில் சமாதான பலிகளையும், ஸ்தோத்திர பலிகளையும் செலுத்தும் போது, கர்த்தர் நம்முடைய விண்ணப்பத்தைக் கேட்டு நம்மை ஆசீர்வதிப்பார்.  இவ்விதம் கர்த்தரால் நாம் மனாசேயை போல சங்கிலிகளால் நன்மைகள் காணமுடியாமல் கட்டப்பட்டிருப்போமானால், இதனை வாசிக்கும் போதே நம்முடைய குறைகளை அறிக்கை செய்யும்படி கர்த்தரிடத்தில் கெஞ்சி கேட்டு விண்ணப்பித்து ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.