தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 19:13

துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளம் ஒருபோதும் பாகாலின் பலிபீடமாக மாறாமல் ஜாக்கிரதையோடு கர்த்தருக்குள் திடப்படவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் தாழ்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,

11நாளாகமம 33: 1-3 

 மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்.

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே, அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

அவன் தன் தகப்பனாகிய எசேக்கியா தகர்த்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகால்களுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, விக்கிரகத்தோப்புகளை உண்டாக்கி, வானத்தின் சேனையையெல்லாம் பணிந்துகொண்டு, அவைகளைச் சேவித்து,

மேற்கூறப்பட்ட வசனங்களில் ராஜாவாகிய எசேக்கியாவின் குமாரன் மனாசே ராஜாவாகிற போது பன்னிரண்டு வயதாயிருந்து ஐம்பத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்.  கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்தான்.  தன் தகப்பனாகிய எசேக்கியா தகர்த்துப் போட்ட மேடைகளை திரும்பவும் கட்டி, பாகால்களுக்கு பலிபீடங்களை எடுப்பித்து, விக்கிரக தோப்புகளை உண்டாக்கி, வானத்தின் சேனையையெல்லாம் பணிந்துக்கொண்டு,அவைகளை சேவித்து, மேலும் செய்த பொல்லாப்புகள் என்னவென்றால்,

 11நாளாகமம் 33:4-9 

எருசலேமிலே என் நாமம் என்றென்றைக்கும் விளங்கும் என்று கர்த்தர் சொன்ன தம்முடைய ஆலயத்திலே பலிபீடங்களைக் கட்டி,

கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான்.

அவன் இன்னோம் குமாரரின் பள்ளத்தாக்கிலே தன் குமாரரைத் தீமிதிக்கப்பண்ணி, நாளும் நிமித்தமும் பார்த்து, பில்லிசூனியங்களை அநுசரித்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தான்.

இந்த ஆலயத்திலும், இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் நான் தெரிந்துகொண்ட எருசலேமிலும், என் நாமத்தை என்றென்றைக்கும் விளங்கப்பண்ணுவேன் என்றும்,

நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும் கட்டளைகளுக்கும் நியாயங்களுக்கும் ஒத்தபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யச் சாவதானமாய் இருந்தார்களேயாகில், நான் இனி அவர்கள் காலை அவர்கள் பிதாக்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகப்பண்ணுவதில்லையென்றும், தேவன் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் பண்ணுவித்த விக்கிரகமாகிய சிலையை ஸ்தாபித்தான்.

அப்படியே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப்பார்க்கிலும், யூதாவும் எருசலேமின் குடிகளும் பொல்லாப்புச் செய்யத்தக்கதாய், மனாசே அவர்களை வழிதப்பிப்போகப்பண்ணினான்.

மேற்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம் மனாசே ; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப் பார்க்கிலும், யூதாவும் எருசலேம் குடிகளும் பொல்லாப்பு செய்யதக்கதாய் மனாசே அவர்களை வழிதப்பிப் போகப் பண்ணினான்.  கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனங்களோடும் பேசினபோதிலும் அவர்கள் கவனியாதே போனார்கள்.  ஆகையால் கர்த்தர் : அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள் மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச் சங்கிலியால் அவனை கட்டி பாபிலோனுக்குக் கொண்டு போனார்கள். 

பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது, கர்த்தர் திருஷ்டாந்தத்தோடு கூறிய கருத்துக்கள் என்னவென்றால் நாம் கர்த்தரின் அபிஷேகம் பெற்ற பின், நம் ஆத்துமா ஒரு போதும் தான் விரும்பினதை செய்யாமல், கர்த்தருடைய விருப்பத்திற்கேற்ப  நன்மையானவைகளை செய்ய வேண்டும்.  அல்லாமல் உலகத்தின் அசுத்தங்களாகிய பாகாலின் பலிபீடமாகிய விக்கிரக தோப்புகளை உண்டாக்கவோ, வானத்தின் சேனைகளை பணிந்துக் கொண்டு அவைகளை சேவிக்கவோக்கூடாது. அவ்விதம் செய்து நாம் வழி தப்பி போனாலோ அல்லது  தேவனுடைய ஜனங்களை வழி தப்ப பண்ணினாலோ, கர்த்தர் நம்மை எச்சரிப்பார்.  அவ்வாறு எச்சரிக்கும் போது அதற்கு நாம் செவிக்கொடுத்து கீழ்படிவோமானால் கர்த்தர் நம்மை தீமையினின்று விலக்கி இரட்சிப்பார்.  ஆனால் கீழ்படியாமற் போனால் பின்னும் அசீரியா ராஜாவின் சேனைகளிடத்தில் (உலக அதிபதியானவனிடத்திலும் அவன் ஊழியக்காரர்களிடத்திலும் ) ஒப்புக் கொடுத்து, நம்மை வெண்கல விலங்குகளால் கட்டி பாபிலோனாகிய பாதாள அனுபவத்தில் தள்ளுவிடுவார்; அப்போது நம்முடைய வாழ்வில் வேதனை அதிகரிக்கும். ஆதலால் நாம் எப்போதும் ஜாக்கிரதையோடு கர்த்தரின் சித்தம் நிறைவேற்றுகிறவர்களாக மாற வேண்டும்.  இப்படியாக நம்மை கர்த்தருக்காய் மட்டும் ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.