தேவனுக்கே மகிமையுண்டாவதாக

 யாக்கோபு 4:10 

கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் தாழ்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,மணவாட்டி சபையாகிய நாம் உலகத்தின் அதிபதியாகிய பிசாசினால் வஞ்சிக்கப்படாமல் நம்மை ஜாக்கிரதையோடு காத்துக் கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,

11நாளாகமம் 32:24-27 

அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அவன் கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணும்போது, அவர் அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணி, அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டார்.

எசேக்கியா தனக்குச் செய்யப்பட்ட உபகாரத்திற்குத்தக்கதாய் நடவாமல் மனமேட்டிமையானான்; ஆகையால் அவன்மேலும், யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் கடுங்கோபமூண்டது.

எசேக்கியாவின் மனமேட்டிமையினிமித்தம் அவனும் எருசலேமின் குடிகளும் தங்களைத் தாழ்த்தினபடியினால், கர்த்தருடைய கடுங்கோபம் எசேக்கியாவின் நாட்களிலே அவர்கள்மேல் வரவில்லை.

எசேக்கியாவுக்கு மிகுதியான ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; வெள்ளியும் பொன்னும் இரத்தினங்களும் கந்தவர்க்கங்களும் கேடகங்களும் விநோதமான ஆபரணங்களும் வைக்கும்படியான பொக்கிஷசாலைகளையும்,

மேற்கூறப்பட்ட வசனங்களில் எசேக்கியா கர்த்தருடைய சித்தம் செய்து மேன்மைபட்டவனான போது வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அவன் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணின போது கர்த்தர் அவனுக்கு வாக்குதத்தப்பண்ணி ஒரு அற்புதத்தை கட்டளையிட்டார்.  எசேக்கியா கர்த்தர் செய்த உபகாரத்திற்கு தக்கதாக நடவாமல் அவன் மனம் மேட்டிமையடைந்தது.  ஆதலால் யூதாவின் மேலும் எருசலேமின் குடிகள் மேலும் கர்த்தருக்கு கடுங்கோபம் மூண்டது. அவ்விதம் கர்த்தர் கடும் கோபமுள்ளவராகயிருந்தபடியால் எசேக்கியாவும், எருசலேமின் குடிகளும் தங்களை தாழ்த்தினபடியினால் கர்த்தரின் கடுங்கோபம் அவர்கள் மேல் வரவில்லை. எசேக்கியாவுக்கு மிகுதியான ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; வெள்ளியும் பொன்னும் இரத்தினங்களும் கந்தவர்க்கங்களும் கேடகங்களும் விநோதமான ஆபரணங்களும் வைக்கும்படியான பொக்கிஷசாலைகளையும், மேலும்,

11நாளாகமம் 32:28 

 தனக்கு வந்துகொண்டிருந்த தானியமும் திராட்சரசமும் எண்ணெயும் வைக்கும்படியான பண்டகசாலைகளையும், சகல வகையுள்ள மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களையும், மந்தைகளுக்குத் தொழுவங்களையும் உண்டாக்கினான்.

இந்த வசனங்களில் உள்ளவைகளையும் எசேக்கியா உண்டாக்கினான்.  அல்லாமலும் தனக்கு பட்டணங்களை கட்டுவித்து, ஏராளமான ஆடுமாடுகளை வைத்திருந்தான்; தேவன் அவனுக்கு திரளான ஆஸ்தியைக் கொடுத்தார். எசேக்கியா கீயோன் என்னும் ஆற்றிலே அணைகட்டி, அதன் தண்ணீரை மேற்கேயிருந்து தாழ தாவீதின் நகரத்திற்கு நேராக திருப்பினான்; எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது.  ஆகிலும் பாபிலோன் பிரபுக்களின் ஸ்தானாபதிகள் தேசத்திலே நடந்த அற்புதத்தை கேட்க அவனிடத்திற்கு அனுப்பப்பட்ட விஷயத்தில், அவன் இருதயத்தில் உள்ள எல்லாவற்றையும் அறியும்படி கர்த்தர் அவனை கைவிட்டார்.  எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன்செய்தவை  நன்மை யாவும் ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலும், யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகம புஸ்தகத்திலும் எழுதப்பட்டுள்ளது.    அவன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்த பின்பு, அவனை தாவீது வம்சத்தாரின் கல்லறைகளில் பிரதானமான கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்: யூதாவனைத்தும், எருசலேமின் குடிகளும் அவன் மரித்தபோது அவனை கனம் பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.  

பிரியமானவர்களே,  மேற்கூறப்பட்ட கர்த்தரின் வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது நாம் கர்த்தருக்கு உகந்த பிரகாரம் வாழ்ந்தாலும் கர்த்தர் நம்முடைய  விசுவாசத்தை சோதிக்கிறவராயிருக்கிறார்.  அதைக்குறித்து தான் யாக்கோபு 1:12-ல் எழுதப்பட்டிருக்கிறது. அவ்விதம் கர்த்தர் நம்மை சோதித்து நாம் சோதனை ஜெயிக்க கர்த்தர் கிருபையளிக்கும் போது நமக்குள் பெருமை வராதபடி நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவ்விதம் பெருமை நமக்குள் வருமானால் கர்த்தருடைய கோபம் நம்மேல் வரும்.  ஆதலால் நாம் எப்போதும் மன தாழ்மை தரித்துக்கொள்ள வேண்டும்.  அப்படியானால் கர்த்தர் நம்மை எல்லாவித ஆசீர்வாதங்களினாலும் கர்த்தர் நிரப்புவார். அவ்விதம் ஆசீர்வதிக்கப்படும் போது, கிறிஸ்துவின் வசனத்திற்கு நேராக நம்முடைய உள்ளம் திருப்ப வேண்டும்.  ஆனால் பெருமையடைந்தால்  நம் உள்ளத்தை முழுமையும் பாபிலோனிடமாக திறந்துக்கொடுக்க அவர் நம்மை சோதிக்கிறவருமாயிருக்கிறார். ஆதலால் பிரியமானவர்களே, கர்த்தர் நமக்கு அற்புதம் செய்து உபகாரமாகயிருந்தால் நாம் ஒரு போதும் மனமேட்டிமையடையக்கூடாது. அவ்விதம் நாம் மனமேட்டிமையானால் கர்த்தர் நம்மில் கோபமுள்ளவராகுவார். நமக்கு எத்தனை  ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள், மற்றும் பூமிக்குரிய ஆசீர்வாதங்கள் தந்தாலும், எந்தவிதத்திலும் நாம் மனமேட்டிமையடையாமல் தன்னை தாழ்த்தி கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டு, அவர் சித்தம் செய்து, அவர் வசனங்களை இரவும் பகலும் தியானித்து,  அதன் பிரகாரம் நடப்போமானால், அவர் நம்மில் கிருபையுள்ளவராகயிருந்து,  நாம் செய்கிற எல்லா காரியங்களும்  நமக்கு வாய்க்க செய்வார்..  ஆதலால் நாம் எப்போதும் கர்த்தரின் வசனத்திற்கு  கீழ்படிந்து தாழ்மையுள்ளவர்களாக வாழ்வோமானால், நாம் கர்த்தரை கனம்பண்ணுகிறவர்களாயிருப்போம்; நம்மையும் கர்த்தர் ஜனங்கள் மத்தியில் கனம் பண்ணுவார்.  இப்படியாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக் கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.