தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 10:12

ஆதலால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும், அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும் நான் விசாரிப்பேன் என்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் அசீரியாவின் கிரியைகளிலிருந்து நம் ஆத்துமாவை தப்புவித்துக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் உலகத்தின் அதிபதியாகிய பிசாசினால் வஞ்சிக்கப்படாமல் நம்மை ஜாக்கிரதையோடு காத்துக் கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால், 

11நாளாகமம் 32:21-23 

 அப்பொழுது கர்த்தர் ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் பாளயத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும் அதம்பண்ணினான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாய்த் தன் தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தேவனுடைய கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்.

இப்படிக் கர்த்தர் எசேக்கியாவையும் எருசலேமின் குடிகளையும் அசீரியருடைய ராஜாவாகிய சனகெரிபின் கைக்கும் மற்ற எல்லாருடைய கைக்கும் நீங்கலாக்கி இரட்சித்து, அவர்களைச் சுற்றுப்புறத்தாருக்கு விலக்கி ஆதரித்து நடத்தினார்.

அநேகம்பேர் கர்த்தருக்கென்று எருசலேமுக்குக் காணிக்கைகளையும், யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்கு உச்சிதங்களையும் கொண்டுவந்தார்கள்; அவன் இதற்குப்பிற்பாடு சகல ஜாதிகளின் பார்வைக்கும் மேன்மைப்பட்டவனாயிருந்தான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் அசீரியா ராஜா கர்த்தருக்கும், எசேக்கியாவுக்கும் விரோதமாக துரோகம் பண்ணி ஜனங்களை வழிதப்பிவிடுவதற்கு காரணமாக பேசினதினால், ராஜாவாகிய எசேக்கியாவும், ஏசாயா தீர்க்கதரிசியும் கர்த்தரை நோக்கி அபயமிட்டார்கள்.  அவர்கள் கர்த்தரை நோக்கி அபயமிட்ட காரணத்தினால் கர்த்தர் ஒரு தூதனை அனுப்பி அசீரியரின் பாளயத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும், அதம்பண்ணினான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாய் தன் தேசத்திற்கு திரும்பினான்.  அங்கே தன் தேவனுடைய கோவிலுக்குள் பிரவேசிக்கிற போது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனை வெட்டிப்போட்டார்கள்.  இப்படி கர்த்தர் எசேக்கியாவையும்,  எருசலேமின் குடிகளையும், அசீரியருடைய ராஜாவின் சனகெரிப்  கைக்கும் மற்ற எல்லாருடைய கைக்கும் நீங்கலாக்கி இரட்சித்து, அவர்களை சுற்றுப்புறத்தார்க்கு விலக்கி ஆதரித்து நடத்தினார்.  அநேகம் பேர் கர்த்தருக்கென்று எருசலேமுக்கு காணிக்கைகளையும்,யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்கு உச்சிதங்களையும் கொண்டு வந்தார்கள்;  அதன் பிற்பாடு சகல ஜாதிகளின் பார்வைக்கு மேன்மைப்பட்டவனாயிருந்தான். 

பிரிமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களில் அசீரியா ராஜாவாகிய உலகத்தின் அதிபதியாகிய பிசாசானவன் நம்முடைய உள்ளத்தில் பல விதமான உலக ஆசை மோக இன்பங்களையும்,ஆடை ஆபரண அலங்காரங்களால் ஜனங்களை சத்துரு வஞ்சித்து  சிறைப்படுத்தி வைத்திருக்கும் போது;  தேவனுடைய ஜனங்களிடத்திலிருந்து அசீரியரின் கிரியைகளை அழிக்கும் படியாக கர்த்தர் தம்முடைய வார்த்தையாகிய பட்டயத்தை  அனுப்பி அதன்  கிரியைகளை அழிக்கும் போது, சத்துருவின் கைக்கு நம்முடைய ஆத்துமாவை விடுதலையாக்கி இரட்சிக்கிறார்.  அவ்விதம் நம் வாழ்வில் இரட்சிப்பு வரும் போது சுற்றுப்புறத்தாருக்குள் கர்த்தர் நம்மை ஆதரித்து நடத்துகிறார். மேலும் நாம் கர்த்தருக்கென்று நம்மை காணிக்கையாக அர்ப்பணிப்போமானால், கர்த்தராகிய தேவன் நம்மில் ஜாதிகளின் நடுவில் மேன்மையுள்ளவராக விளங்குவார்.  இப்படி கர்த்தர் நம்மிலிருந்து மேன்மைப்படும்படியாக நம்மில் உள்ள உலகத்தின் அலங்காரத்தில் முக்கியமான  ஆபரணங்கள்,  ஆடைகள்,  இவ்விதமான இச்சைக்குரிய காரியங்களை அழிக்கும்படி ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.