தேவனுக்கே மகிமையுண்டாவதாக

 Iகொரிந்தியர் 2:12

நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் உலகத்தின் அதிபதியாகிய பிசாசினால் வஞ்சிக்கப்படாமல் நம்மை ஜாக்கிரதையோடு காத்துக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் மாம்ச பெலத்தின் மேல் நம்பிக்கை வைக்காமல் ஆவிக்குரிய பெலத்தின் மேல் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால், 

11நாளாகமம் 32:8-20 

அவனோடிருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்.

இதின்பின்பு அசீரியா ராஜாவாகிய சனகெரிப் தன் முழுச் சேனையுடன் லாகீசுக்கு எதிராய் முற்றிக்கைபோட்டிருக்கையில், யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவிடத்துக்கும், எருசலேமிலுள்ள யூதா ஜனங்கள் யாவரிடத்துக்கும் தன் ஊழியக்காரரை அனுப்பி:

அசீரியா ராஜாவாகிய சனகெரிப் சொல்லுகிறது என்னவென்றால், முற்றிக்கை போடப்பட்ட எருசலேமிலே நீங்கள் இருக்கும்படிக்கு, நீங்கள் எதின்மேல் நம்பிக்கையாயிருக்கிறீர்கள்?

நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மை அசீரியருடைய ராஜாவின் கைக்குத் தப்புவிப்பார் என்று எசேக்கியா சொல்லி, நீங்கள் பசியினாலும் தாகத்தினாலும் சாகும்படி உங்களைப் போதிக்கிறான் அல்லவா?

அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் தள்ளிவிட்டவனும், ஒரே பலிபீடத்திற்கு முன்பாகப் பணிந்து, அதின்மேல் தூபங்காட்டுங்கள் என்று யூதாவுக்கும் எருசலேமியருக்கும் சொன்னவனும் அந்த எசேக்கியாதான் அல்லவா?

நானும் என் பிதாக்களும் தேசத்துச் சகல ஜனங்களுக்கும் செய்ததை அறியீர்களோ? அந்த தேசங்களுடைய ஜாதிகளின் தேவர்கள் அவர்கள் தேசத்தை நம்முடைய கைக்குத் தப்புவிக்க அவர்களுக்குப் பெலன் இருந்ததோ?

உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிக்கக்கூடும்படிக்கு, என் பிதாக்கள் பாழாக்கின அந்த ஜாதிகளுடைய எல்லா தேவர்களிலும் எவன் தன் ஜனத்தை என் கைக்குத் தப்புவிக்கப் பலவானாயிருந்தான்?

இப்போதும் எசேக்கியா உங்களை வஞ்சிக்கவும், இப்படி உங்களைப் போதிக்கவும் இடங்கொடுக்கவேண்டாம்; நீங்கள் அவனை நம்பவும் வேண்டாம்; ஏனென்றால் எந்த ஜாதியின் தேவனும், எந்த ராஜ்யத்தின் தேவனும் தன் ஜனத்தை என் கைக்கும் என் பிதாக்களின் கைக்கும் தப்புவிக்கக் கூடாதிருந்ததே; உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிப்பது எப்படி என்கிறார் என்று சொல்லி,

அவனுடைய ஊழியக்காரர் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகவும், அவருடைய தாசனாகிய எசேக்கியாவுக்கு விரோதமாகவும் பின்னும் அதிகமாய்ப் பேசினார்கள்.

தேசங்களுடைய ஜாதிகளின் தேவர்கள் தங்கள் ஜனங்களை என் கைக்குத் தப்புவிக்காதிருந்ததுபோல, எசேக்கியாவின் தேவனும் தன் ஜனங்களை என் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நிந்திக்கவும், அவருக்கு விரோதமாகப் பேசவும் அவன் நிருபங்களையும் எழுதினான்.

அவர்கள் அலங்கத்தின்மேலிருக்கிற எருசலேமின் ஜனங்களைப் பயப்படுத்தி, கலங்கப்பண்ணி, தாங்கள் நகரத்தைப்பிடிக்கும்படி, அவர்களைப் பார்த்து: யூதபாஷையிலே மகா சத்தமாய்க் கூப்பிட்டு,

மனுஷர் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூச்சக்கரத்து ஜனங்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தேவர்களைக் குறித்துப் பேசுகிறபிரகாரமாக எருசலேமின் தேவனையும் குறித்துப் பேசினார்கள்.

இதினிமித்தம் ராஜாவாகிய எசேக்கியாவும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியும் பிரார்த்தித்து, வானத்தை நோக்கி அபயமிட்டார்கள்.

மேற்கூறபட்ட வசனங்களில் ராஜாவாகிய எசேக்கியா ஜனங்களிடம்  சொன்ன வார்த்தைகளின் மேல் அவர்கள் நம்பிக்கை வைத்தார்கள்.  அந்த வார்த்தையாவது அசீரியாவோடு இருப்பது மாம்ச புயமும், நம்மோடு கர்த்தராகிய இயேசு துணை நின்று நமக்காக யுத்தம் செய்து, உள்ளத்தில் எழும்புகிற வஞ்சிக்கிற உலகத்தின் அதிபதியாகிய பிசாசினை நம்மை விட்டு மாற்றுகிறார் என்பதனை ராஜாவாகிய எசேக்கியாவையும், நம் உள்ளத்திற்குள் உலகத்தின் அதிபதியாகிய பிசாசானவனும், அவன் தூதர்களையும் , அசீரியா ராஜாவும் அவன் ஊழியக்காரர்கள் என்றும் எழுதப்பட்டு நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  என்னவென்றால், 

பிரியமானவர்களே, நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டு, அவர் இரட்சிப்பை சுதந்தரமாக்கி அவரால் அபிஷேகிக்கபட்டு, கர்த்தருடைய சித்தம் செய்து, ஆவியினால் கர்த்தருக்கு ஆராதனை செய்துக்கொண்டிருக்கும் போது, நம்மை அவர் சமுகத்தினின்று கீழே விழ தள்ளும்படி உலகத்தின் ஆவி நமக்குள் புகுந்து நம் ஆத்துமாவை முற்றிகை போடும், நாம் கர்த்தரை விட்டு  நம்மை அறியாமலே தூரம் நீங்கி விடுவோம். பின்பு இந்த பிரபஞ்சந்திற்குரிய வேஷம் தரித்து விடுவோம்.  கிருபையினின்று  கீழே நம்மையறியாமலே விழுந்து விடுவோம். உலக ஆசீர்வாதங்களை பெற்று கொள்ளும்படியாக நம் உள்ளம் தேவனை தேட தொடங்கும்.  ஆனால் நாம் பாதாளத்தின் வாயில் விழுந்து கிடப்போம்.  உலகத்தின் ஆசீர்வாதத்தை கர்த்தரின் ஆசீர்வாதம் என்று நினைத்து அநேகரிடத்தில் நம்மை நாமே மெச்சிக்கொள்வோம்.  ஆனால் ஆத்துமா மரித்து கிடப்பதை அறியாமல் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம்  என்று நினைத்துக்கொள்வோம். மேலும் உலக ஆடை ஆபரண அலங்காரங்களால் உள்ளம் சிறிது நேரம் மகிழ்ந்து, பின்பு செத்தவனை போல் துக்கத்தில் அமிழ்ந்து கிடப்போம்.  இப்படி அநேகர்  விழுந்து போகிறதை பார்க்க முடிகிறது.  அல்லாமலும் எருசலேமின் தேவனை பூமியின் தேவர்களை குறித்து பேசுகிறது போல் பேசுவோம்.  இப்படிபட்ட எண்ணங்கள் நம்மில் தோன்றாதபடி  கர்த்தரிடத்தில விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் கர்த்தரின் வார்த்தைகளின் மேல் எப்பொழும் முழுமனதோடு நம்பிக்கையாயிருப்போம். மேலும் சாத்தானால் வஞ்சிக்கப்படாதபடி நாம் எப்போதும் ஜாக்கிரதையோடு நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.