தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சகரியா 4:6 

அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் மாம்ச பெலத்தின் மேல் நம்பிக்கை வைக்காமல் ஆவிக்குரிய பெலத்தின் மேல் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்குரிய காணிக்கை காரியத்தில் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

11நாளாகமம் 32:1-6 

இக்காரியங்கள் நடந்தேறிவருகையில் அசீரியா ராஜாவாகிய சனகெரிப் வந்து, யூதாவுக்குள் பிரவேசித்து, அரணான பட்டணங்களுக்கு எதிராகப் பாளயமிறங்கி, அவைகளைத் தன் வசமாக்கிக்கொள்ள நினைத்தான்.

சனகெரிப் வந்து, எருசலேமின்மேல் யுத்தம்பண்ண நோக்கங்கொண்டிருப்பதை எசேக்கியா கண்டபோது,

நகரத்திற்குப் புறம்பேயிருக்கிற ஊற்றுகளைத் தூர்த்துப்போட, தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனைபண்ணினான்; அதற்கு அவர்கள் உதவியாயிருந்தார்கள்.

அசீரியா ராஜாக்கள் வந்து, அதிக தண்ணீரைக் கண்டுபிடிப்பானேன் என்று சொல்லி, அநேகம் ஜனங்கள் கூடி, எல்லா ஊற்றுகளையும் நாட்டின் நடுவில் பாயும் ஓடையையும் தூர்த்துப்போட்டார்கள்.

அவன் திடன்கொண்டு, இடிந்துபோன மதிலையெல்லாம் கட்டி, அவைகளையும் வெளியிலுள்ள மற்ற மதிலையும் கொத்தளங்கள்மட்டும் உயர்த்தி, தாவீது நகரத்தின் கோட்டையைப் பலப்படுத்தி, திரளான ஆயுதங்களையும் கேடகங்களையும்பண்ணி,

ஜனத்தின்மேல் படைத்தலைவரை வைத்து, அவர்களை நகரவாசலின் வீதியிலே தன்னண்டையில் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி:

மேற்கூறப்பட்ட வசனங்களில் யூதாவை அரசாண்ட ராஜாவாகிய எசேக்கியா இஸ்ரவேலருக்குள் பஸ்காவை ஆசரிக்க வைத்து, கர்த்தருக்கு அதிகமான காணிக்கைகளை செலுத்தி, அவர்களால் ஆசாரியர்கள் திருப்தியாய் சாப்பிட்டு, மீதியானதில் ஆசாரியர், லேவியின் குடும்பங்களுக்கு, அவர்கள் செய்கிற பணி விடைகளுக்கு தக்கதாக படியும் கொடுத்து; இவ்விதமாக கர்த்தருக்கு முன்பாக நன்மையும், செம்மையும், உண்மையானதை செய்து, ஜனங்கள் தேவனை தேடுவதில் நியாயப்பிரமாணத்திற்கும், கற்பனைக்கும் அடுத்த காரியத்தில் முழு இருதயத்தோடும் செய்து சித்தி பெற்ற பின்பு அசீரியா ராஜாவாகிய சனகெரிப் வந்து, யூதாவுக்குள் புகுந்து அரணான பட்டணங்களுக்கு  எதிராகப் பாளயமிறங்கி, அவைகளை தன் வசமாக்கிக் கொள்ள நினைத்தான். அவன் எருசலேமின்மேல் யுத்தம்பண்ண நோக்கம் கொண்டிருக்கிறதை எசேக்கியா கண்ட போது; அவன் நகரத்திற்கு புறம்பேயிருக்கிற ஊற்றுகளை தூர்த்துப்போட, தன் பிரபுக்களோடும், பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனைப்பண்ணினான். அவர்கள் அதற்கு உதவியாயிருந்து ; அசீரிய ராஜாக்கள் வந்து அதிக தண்ணீரை கண்டுபிடிப்பானேன் என்று சொல்லி, அநேகர்கூடி வந்து எல்லா ஊற்றுகளையும், நாட்டின் நடுவில் பாயும் துரவுகளையும் தூர்த்துப் போட்டார்கள்.  மேலும் அவன் திடன் கொண்டு, இடிந்து போன மதிலையெல்லாம் கட்டி, அவைகளையும், வெளியிலுள்ள மற்ற மதிலையும் கொத்தளங்கள் மட்டும் உயர்த்தி, தாவீது நகரத்தின் கோட்டையை பலப்படுத்தி, திரளான ஆயுதங்களையும்,  கேடகங்களையும் பண்ணி, ஜனத்தின் மேல் படைதலைவரை வைத்து, அவர்களை நகர வாசலின் வீதியிலே தன்னண்டையிலே கூடிவர செய்து, அவர்களை நோக்கி  சொன்னது; 

11நாளாகமம் 32:7, 8 

நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்.

அவனோடிருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்.

மேற்கூறிய வசனங்கள் மாம்ச பெலத்திற்கும் ஆவியின் பெலத்திற்கும் உரிய வித்தியாசம் கூறப்படுகிறது.  இதனை கேட்ட ஜனங்கள் ஆவியின் பெலத்தின் மேல் நம்பிக்கை வைக்கிறதை வாசிக்க முடிகிறது.  

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களில் நாம் அறிய வேண்டியது என்னவென்றால் கர்த்தரை முழு இருதயத்தோடும் தேடும் போது நம் ஆத்துமாவுக்குள் அசீரியா ராஜா உலக ஆசை , அலங்காரம், ஆடம்பரம் இவ்விதமான பல மோக இச்சைகளோடு உள்ளத்தை கவர்ச்சிக்கும்படி கடந்து வருவான்.  அவ்வித ஆசை , இச்சைகள் அலங்காரம் இவைகள் வருவதற்கு முன்னமே நாம் கவனமாக இருந்து, கர்த்தரிடத்தில் பெற்றுகொண்ட ஆசீர்வாதத்தை அவன் சூறையாடுவதற்கு முன்பாக , கர்த்தரின் வசனத்தாலும், ஜெபத்தாலும், அவருடைய அபிஷேகத்தாலும், அவர் ஆவியினாலும் நிறைந்து நாம் கர்த்தரை துதித்து ஆராதிக்கும் போது கிறிஸ்து நம்மில் எழும்புகிற மாம்ச புயத்தை மேற்கொண்டு, ஆவிக்குரிய பெலனடைய செய்வார்.  இவ்விதம் நாம் மாம்ச சிந்தையோடு போராடி மேற்கொண்டு, ஆவியில் பலப்பட்டு மாம்ச புயத்தை அழித்து கிறிஸ்து நம்மில் ஜெய வீரராக என்றென்றைக்கும் நிலைத்துமிருந்து யுத்த வீரராக செயல்படும்படியாகவும்;   இவ்விதமான நம்பிக்கை நம்மில் வளரும்படியாக ஒப்புக்கொடுப்போம்.  ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.