தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 24:21

என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட; கலகக்காரரோடு கலவாதே.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை பகைக்கிறவர்களோடு நடவாமல் இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா அந்நிய அக்கினியால் கொல்லப்படாதபடி காக்கிறவர்களாக காணப்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால், 

11நாளாகமம் 19:1-6 

யூதாவின் ராஜாவாகிய யோசபாத், எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பிவந்தான்.

அப்பொழுது அனானியின் குமாரனாகிய யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் புறப்பட்டு, அவனைச் சந்தித்து, ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதினிமித்தம் கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது.

ஆகிலும் நீர் விக்கிரகத்தோப்புகளை தேசத்தை விட்டகற்றி, தேவனைத் தேட உம்முடைய இருதயத்தை நேராக்கின விஷயத்தில் நன்மையான காரியங்கள் உம்மிடத்திலே காணப்பட்டது உண்டு என்றான்.

யோசபாத் எருசலேமிலே வாசமாயிருந்து, திரும்பப் பெயர்செபாதொடங்கி, எப்பிராயீம் மலைத்தேசமட்டுமுள்ள ஜனத்திற்குள்ளே பிரயாணமாய்ப்போய், அவர்களைத் தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் இடத்திற்குத் திரும்பப்பண்ணினான்.

அவன் யூதாவின் அரணான பட்டணங்களாகிய ஒவ்வொரு பட்டணத்திலும் நியாயாதிபதிகளை வைத்து,

அந்த நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் செய்கிற காரியத்தைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; நீங்கள் மனுஷனுடைய கட்டளையினால் அல்ல, கர்த்தருடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கிறீர்கள்; நியாயம் விசாரிக்கிற விஷயத்திலே அவர் உங்களுடனே இருக்கிறார்.

மேற்கூறிய வசனங்கள் நமக்கு எதற்காக திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால், துன்மார்க்கர்களுக்கு துணை நின்று, கர்த்தரை பகைக்கிறவர்களை சிநேகித்தால் கர்த்தரின் கடுங்கோபம் நம்மேல் வரும் என்பதனையும், ஆனால் ஆகாப் ராஜாவுக்கு யோசபாத் துணை நின்று, அவன் எதனால் சீரியாவின் ராஜாவினிடத்திலிருந்து எப்படி தப்பினான் என்பதனை கர்த்தர் அனானியின் குமாரனாகிய யெகூ என்கிற ஞானதிருஷ்டிகாரனை அனுப்பி யோசபாத்திடம் காரியத்தை கூறுகிறார்.  என்னவென்றால் அவன் விக்கிரக தோப்புகளை தேசத்தை விட்டு அகற்றி தேவனை தேட இருதயத்தை நேராக்கிக் கொண்டதான நன்மையான காரியங்கள் அவனிடத்தில் காணப்பட்டது என்று யெகூ கூறுகிறதை பார்க்கிறோம்.  பின்னும் அவன் எருசலேமில் வாசமாயிருந்து, திரும்ப பெயர்செபா தொடங்கி, எப்பிராயீம் மலை தேசமட்டுமுள்ள ஜனங்களுக்குள்ளே பிரயாணமாய் போய், அவர்களை தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்கு திரும்ப பண்ணினான். அதனைப்போல் நாம் அநேக நேரங்களில் இவ்விதமாக நாமும் துன்மார்க்கர்களுக்கு துணைநிற்கிறோம், கர்த்தரை பகைக்கிறவர்களிடத்தில் சிநேகிதராயிருக்கிறோம்.  அதனால் கர்த்தர் நம்மை பல விதத்தில் தண்டிக்கிறதை அறியாமல் உணர்வில்லாதவர்களாயிருக்கிறோம்.  மேலும் அவருடைய பெரிதான இரக்கத்தால் பிராணனை சத்துருவின் கையில் ஒப்புக்கொடாமல் மீட்கிறார்.  என்னவென்றால் நாமும் கர்த்தரின் சத்தம் கேட்டு விக்கிரகங்களை நம்மை விட்டு அகற்றியிருக்கிறதால்  சில இடங்களில் நாம் அழிந்துப் போகாதபடி நம்மேல் இரக்கமுள்ளவராயிருக்கிறார்.  அப்படியாக நம்மை இந்நாள்வரையிலும் அவர் கிருபையினால் மட்டும் நம்மை நிலை நிறுத்துகிறார். மேலும் தேவ கோபம் நம்மேல் மூளாதபடி கர்த்தரை பகைக்கிறவர்களோடுகூட நடவாமல் ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.  ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.