தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 89:1 

கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரிடத்தில் ஆணையோடுகூட கர்த்தரை தேட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் வேதமும் உபதேசமும் கேட்டு; அதனை கைக்கொண்டால் அதற்கேற்ற பலனை கர்த்தர் தருவார் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,

11நாளாகமம் 15:8-15 

ஆசா இந்த வார்த்தைகளையும் தீர்க்கதரிசியாகிய ஓதேதின் தீர்க்கதரிசனத்தையும் கேட்டபோது, அவன் திடன்கொண்டு, அருவருப்புகளை யூதா பென்யமீன் தேசம் அனைத்திலும், எப்பிராயீமின் மலைத்தேசத்தில் தான் பிடித்த பட்டணங்களிலுமிருந்து அகற்றி, கர்த்தருடைய மண்டபத்தின் முன்னிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தைப் புதுப்பித்து,

அவன் யூதா பென்யமீன் ஜனங்களையும், அவர்களோடேகூட எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமியோனிலும் இருந்து வந்து அவர்களோடு சஞ்சரித்தவர்களையும் கூட்டினான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருக்கிறதைக் கண்டு, இஸ்ரவேலிலிருந்து திரளான ஜனங்கள் அவன் பட்சத்தில் சேர்ந்தார்கள்.

ஆசா அரசாண்ட பதினைந்தாம் வருஷம் மூன்றாம் மாதத்திலே அவர்கள் எருசலேமிலே கூடி,

தாங்கள் கொள்ளையிட்டு ஓட்டிக்கொண்டு வந்தவைகளில் அந்நாளிலே எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் கர்த்தருக்குப் பலியிட்டு,

தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் தேடுவோம் என்றும்;

சிறியோர் பெரியோர் ஸ்திரீ புருஷர் எல்லாரிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடாதவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும் என்றும் ஒரு உடன்படிக்கை செய்து,

மகா சத்தத்தோடும் கெம்பீரத்தோடும் பூரிகைகளோடும் எக்காளங்களோடும் கர்த்தருக்கு முன்பாக ஆணையிட்டார்கள்.

இந்த ஆணைக்காக யூதா ஜனங்கள் யாவரும் சந்தோஷப்பட்டார்கள்; தங்கள் முழு இருதயத்தோடும் ஆணையிட்டு, தங்கள் முழுமனதோடும் அவரைத் தேடினார்கள்; கர்த்தர் அவர்களுக்கு வெளிப்பட்டு, சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாதபடிக்கு அவர்களை இளைப்பாறப்பண்ணினார்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் ஆசா கர்த்தருடைய வார்த்தைகளை கேட்டப்போது திடன்கொண்டு எல்லா அருவருப்புகளையும் மாற்றினதுபோல் நாமும் நம்முடைய ஆவியிலும் ஆத்துமாவிலும் சரீரத்திலும் படிந்த கறைகள் யாவற்றையும் நம்மை விட்டு அகற்றி, நம்முடைய இருதயமாகிய கர்த்தருடைய பலிபீடத்தை புதுப்பித்து, நம்மோடிருக்கிற சகல ஜனங்களையும் ஒரிடத்தில் கூடி வரசெய்ய வேண்டும்.  அப்போது தேவன் நம்மோடிருக்கிறதை காணும் போது திரளான ஜனங்கள் கர்த்தரிடமாய் சேர்க்கப்படுவார்கள். இப்படியாக நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் கர்த்தருக்காய் வாழ்கிறவர்களாக இருக்க வேண்டும். இப்படியாக முந்தின வேதவசனத்தில் ஆசா அரசாண்ட பதினைந்தாம் வருஷத்தில் மூன்றாம் மாதத்தில் அவர்கள் எருசலேமில் கூடி, தாங்கள் கொள்ளையிட்டு கொண்டு வந்தவைகளில்  கொஞ்சத்தை கர்த்தருக்காக பலியிட்டு, தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் தேடுவோம் என்றும்; சிறியோர், பெரியோர், ஸ்திரீ புருஷர் எல்லாரிலும் இஸ்ரவேலின் தேவனை தேடாதவன் கொலை செய்யபட வேண்டும் என்றும் உடன்படிக்கை செய்து மகா சத்தத்தோடும், கெம்பீரத்தோடும் பூரிகைகளோடும் எக்களாளங்களோடும் கர்த்தருக்கு முன்பாக ஆணையிட்டார்கள். ஆனால் கர்த்தரை தேடாதவர்களுடைய ஆத்துமா கொல்லப்பட்டிருக்கும்.  இவ்விதமாக நாமும் கர்த்தரின் சந்நதியில் ஆணையோடு கர்த்தரை தேடினால், கர்த்தர் நமக்கு வெளிப்பட்டு  நம்முடைய வாழ்வு யுத்தமில்லாமல், நம்முடைய ஆத்துமாவை கர்த்தர் இளைப்பாறப்பண்ணுவார்.  இவ்விதமாக நாம் அனுதினமும் இளைப்பாறுதலை கண்டடையும்படியாக கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.