தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 2:8 

என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் ஜாதிகளின் கிரியைகளை அழித்து இரட்சிப்பைக்கூற வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் எப்போதும் இளைப்பாறுதலும் சமாதானமும் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால், 

11நாளாகமம் 14:7- 15 

அவன் யூதாவை நோக்கி: தேசம் நமக்கு முன்பாக அமர்ந்திருக்கையில், நாம் இந்தப் பட்டணங்களைக் கட்டி, அவைகளுக்கு அலங்கங்கள், கோபுரங்கள், வாசல்கள் உண்டுபண்ணி, தாழ்ப்பாள் போட்டுப் பலப்படுத்துவோமாக; நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் தேடினோம், தேடினபோது, சுற்றிலும் நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார் என்றான்; அப்படியே கட்டினார்கள்; அவர்களுக்குக் காரியம் வாய்த்தது.

யூதாவிலே பரிசையும் ஈட்டியும் பிடிக்கிற மூன்றுலட்சம்பேரும், பென்யமீனிலே கேடகம் பிடித்து வில்லை நாணேற்றுகிற இரண்டுலட்சத்து எண்பதினாயிரம்பேருமான சேனை ஆசாவுக்கு இருந்தது, இவர்களெல்லாரும் பராக்கிரமசாலிகள்.

அவர்களுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம்பேர்கள் சேர்ந்த சேனையோடும் முந்நூறு இரதங்களோடும் புறப்பட்டு மரேசாமட்டும் வந்தான்.

அப்பொழுது ஆசா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; மரேசாவுக்கு அடுத்த செப்பத்தா என்னும் பள்ளத்தாக்கில் யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்.

ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.

அப்பொழுது கர்த்தர் அந்த எத்தியோப்பியரை ஆசாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக முறிய அடித்ததினால் எத்தியோப்பியர் ஓடிப்போனார்கள்.

அவர்களை ஆசாவும் அவனோடிருந்த ஜனங்களும் கேரார்மட்டும் துரத்தினார்கள்; எத்தியோப்பியர் திரும்பப் பலங்கொள்ளாதபடிக்கு முறிந்து விழுந்தார்கள்; கர்த்தருக்கும் அவருடைய சேனைக்கும் முன்பாக நொறுங்கிப்போனார்கள்; அவர்கள் மிகுதியாகக் கொள்ளை அடித்து,

கேராரின் சுற்றுப்பட்டணங்களையெல்லாம் முறிய அடித்தார்கள்; கர்த்தரால் அவர்களுக்குப் பயங்கரம் உண்டாயிற்று; அந்தப் பட்டணங்களையெல்லாம் கொள்ளையிட்டார்கள், அவைகளில் கொள்ளை மிகுதியாய் அகப்பட்டது.

மிருகஜீவன்கள் இருந்த கொட்டாரங்களையும் அவர்கள் இடித்துப்போட்டு, திரளான ஆடுகளையும் ஒட்டகங்களையும் சாய்த்துக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பினார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கையில் கர்த்தர் நம்முடைய ஆத்துமாவுக்கு இளைப்பாறுதலையும், சமாதானத்தையும் கட்டளையிட்ட பின்பு நம்முடைய உள்ளம் மீண்டும் அசுத்தங்களாலும், அருவருப்புகளாலும் நிறையாதபடி எப்போதும் நம் உள்ளத்தை வசனத்தால் வேலியடைத்துக் காத்துக்கொள்ள வேண்டும் அவ்விதமாக தாம் காத்துக்கொண்டு கர்த்தருக்கு ஆவியினால் ஆராதனை செய்யும் போது, கர்த்தரின் வசனம் பரிசையாகவும், ஈட்டியாகவும் நாம் பிடித்து நின்று தேவனுடைய நீதி நியாயங்களால் நாம் நிறைந்தால், கர்த்தர் நம் உள்ளத்தில் பராக்கிரமசாலியாக வெளிப்படுவார்.  அப்படியிருந்தால் ஆசாவும் அவனுடைய சேனையும் எத்தியோப்பியனாகிய சேராவும் பத்துலட்சம் சேனையோடும் முந்நூறு இரதங்களோடும் வந்த போது அவர்களுக்கு எதிர்த்தது போல், நாமும் நம் உள்ளத்தில் எழும்புகிற அத்தனை பொல்லாத செயல்பாடுகளுக்கும் எதிர்த்து நிற்க முடியும்.  அப்படியாக நாம் கர்த்தரை நோக்கி, பலனுள்ளவனுக்காகிலும், பலனற்றவனுக்காகிலும் உதவி செய்கிறது லேசான காரியம், எங்களுக்கு துணை நிற்க வேண்டும், மனுஷர்கள் எவ்விதத்திலும் நம்மை மேற்கொள்ளாமல்  காத்துக்கொள்ள வேண்டும் என்று  கர்த்தரிடம் கெஞ்சினால், நமக்கு விரோதமாக எழும்புகிற சத்துருவை முறிய அடிப்பார் என்பதனை கர்த்தர் ஆசாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக எத்தியர் முறியடிக்கப்பட்டு ஓடிப்போனார்கள் என்பதனை திருஷ்டாந்தப்படுத்தி காட்டுகிறார். இவ்விதமாக கர்த்தர் நமக்கு துணை நின்று நமக்கு எதிராக நம்மிடம் எழும்புகிற சத்துருக்களை கர்த்தர் நொறுக்குகிறார். இவ்விதமாக கர்த்தரால் பயங்கரம் உண்டாகிறபோது நம் வாழ்வில் கொள்ளைகள் அதிகமாகும், அந்த கொள்ளைகளோடுகூட அவர்களெல்லாரும் எருசலேமுக்கு திரும்புவார்கள். இவ்விதமாக கர்த்தரின் சபை ஜனங்களால் நிரப்பப்படும்.  இவ்விதமாக நாமும் கர்த்தருக்காய் நம்மை ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.