தேவனுக்கே மகிமையுண்டாவதாக

கொலொசேயர் 3:15 

தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா எப்போதும் இளைப்பாறுதலும் சமாதானமும் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் ஆவிக்குரிய சபைகள் பெருக காரணமாயிருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

 11நாளாகமம் 14:1-6 

அபியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ஆசா ராஜாவானான்; இவனுடைய நாட்களில் தேசம் பத்து வருஷமட்டும் அமரிக்கையாயிருந்தது.

ஆசா தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்.

அந்நிய தேவர்களின் பலிபீடங்களையும் மேடைகளையும் அகற்றி, சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி,

தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தேடவும், நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்யவும் யூதாவுக்குக் கற்பித்து,

யூதாவுடைய எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மேடைகளையும் விக்கிரகங்களையும் அகற்றினான்; அவனுக்கு முன்பாக ராஜ்யம் அமரிக்கையாயிருந்தது.

கர்த்தர் அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதினால், அந்த வருஷங்களில் அவனுக்கு விரோதமான யுத்தம் இல்லாதிருந்தது; தேசம் அமரிக்கையாயிருந்தபடியினால் யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் அபியாவின் குமாரனாகிய ஆசா ராஜ்யபாரம் செய்த நாட்களில் தேசம் பத்து வருஷமட்டும் அமரிக்கையாயிருந்ததின் காரணம். தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதை செய்து, அந்நிய தேவர்களின் பலிபீடங்களையும் மேடைகளையும் அகற்றி சிலைகளை உடைத்து, விக்கிரக தோப்புகளை வெட்டி, தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை தேடவும், நியாயப்பிரமாணத்தின் படியும் கற்பனைகளின்படியும் செய்யவும் யூதாவுக்கு கற்பித்து, அங்கிருந்து எல்லா பட்டணங்களிலிருந்து மேடைகளையும் விக்கிரகங்களையும் அகற்றினான்.  அவனுக்கு முன்பாக ராஜ்யம் அமரிக்கையாயிருந்தது.  மேலும் அவனுக்கு இளைப்பாறுதலை கட்டளையிட்டதினால் அவனுக்கு விரோதமாக யுத்தம் இல்லாதிருந்தது.  ஆதலால் தேசம் அமரிக்கையாயிருந்தபடியினால் யூதாவிலே பட்டணங்களை கட்டினான்.  

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கையில் நம்முடைய ஆத்துமாவுக்கு அமைதியும், சமாதானமும் கிடைக்க வேண்டுமானால், நம் முன்னோர்கள் அனுசரித்து வந்த வீணான நடத்தைகள் எல்லாம் விட்டு, நம்முடைய தேவனையல்லாமல் வேறொரு நாமத்திற்கும் உள்ளத்தில் இடம் கொடாமல் விக்கிரகமேடைகள், விக்கிரக தோப்புகள் எல்லாம் அழிக்கப்பட்டு, கர்த்தர் கற்பித்து தந்த கர்த்தரின் கற்பனைகள், நியாயங்களின் படியெல்லாம் நாம் நடந்தால் நமக்குள் வருகிற மனகலக்கங்கள் எல்லாம் மாறி, நம்மில் சகல போராட்டங்கள் மாற்றப்பட்டு நாம் செம்மையான பாதையில் நடக்கும் போது நம் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதலும் சமாதானமும் கிடைக்கும்.  இப்படியாக நாம் கர்த்தரின் சமூத்தில்  ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.