தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1கொரிந்தியர் 6:17

அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் ஆவிக்குரிய சபைகள் பெருக காரணமாயிருக்க வேண்டும். 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் மாம்ச கிரியைகள் நம்மில் வளரவிடாமல் ஆவியில் போராடி மேற்கொண்டு ஆவிக்குரிய சிந்தைகளில் வளருகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால், 

11நாளாகமம் 13:8 

இப்போதும் தாவீதுடைய குமாரன் கையிலிருக்கிற கர்த்தருடைய ராஜ்யத்திற்கு விரோதமாக நீங்கள் பெலன்கொள்ளலாமென்று நினைக்கிறீர்கள்; நீங்கள் ஏராளமான கூட்டம்; யெரொபெயாம் உங்களுக்கு தேவர்களாக உண்டாக்கினபொன் கன்றுக்குட்டிகளும் உங்களிடத்தில் இருக்கிறதே.

மேற்கூறிய வசனங்களில் சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாமும் அவனோடிருக்கிறவர்களும் வாலவயதும், திடனற்றவர்களாயிருக்கும்போது, தங்களோடு எதிர்க்க பலப்படுத்தி கொண்டவர்களாகிய யெரொபெயாமிடமும், அவனோடிருக்கிற வீணர்களோடும்  அபியா சொன்னது தாவீதுடைய குமாரன் கையிலிருக்கிற கர்த்தருடைய ராஜ்யத்திற்கு விரோதமாக நீங்கள் பெலன் கொள்ளலாமென்று நினைக்கிறீர்கள்; நீங்கள் ஏராளமான கூட்டம்; யெரொபெயாம் உங்களுக்கு தேவர்களாக உண்டாக்கின பொன் கன்றுகுட்டிகள் உங்களிடத்தில் இருக்கிறதே.  மேலும் அவன் சொன்னது 

11நாளாகமம் 13:9 

நீங்கள் ஆரோனின் குமாரராகிய கர்த்தருடைய ஆசாரியரையும், லேவியரையும் தள்ளிவிட்டு, தேசாதேசங்களின் ஜனங்களைப்போல உங்களுக்கு ஆசாரியர்களை உண்டுபண்ணவில்லையோ? இளங்காளையினாலும், ஏழு கடாக்களினாலும், தன்னைப் பிரதிஷ்டையாக்கும்படி வருகிற எவனும் தெய்வம் அல்லாதவைகளுக்கு ஆசாரியனாகிறானே.

மேற்கூறிய வார்த்தைகளை சொல்லிவிட்டு அவன் சொன்னது, 

11நாளாகமம் 13:10-12 

எங்களுக்கோ கர்த்தரே தேவன்; நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை; கர்த்தருக்கு ஊழியஞ்செய்கிற ஆசாரியர்கள் ஆரோனின் குமாரரும், பணிவிடை செய்கிறவர்கள் லேவியருமாமே.

அவர்கள் தினந்தோறும் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளையும் சுகந்தவாசனையான தூபத்தையும் செலுத்தி, காலையிலும் மாலையிலும் பரிசுத்தமான மேஜையின்மேல் சமுகத்தப்பங்களை அடுக்கிவைக்கிறதையும், பொன் குத்துவிளக்கையும் அதின் விளக்குகளைச் சாயங்காலந்தோறும் ஏற்றுகிறதையும் விசாரிக்கிறார்கள்; நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தரின் காவலைக் காக்கிறோம்; நீங்களோ அவரை விட்டு விலகினீர்கள்.

இதோ, தேவன் எங்கள் சேனாபதியாய் எங்களோடேகூட இருக்கிறார்; உங்களுக்கு விரோதமாகப் பூரிகைகளைப் பெருந்தொனியாய் முழக்குகிற ஆசாரியர்களும் இருக்கிறார்கள்; இஸ்ரவேல் புத்திரரே, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக யுத்தஞ்செய்யாதேயுங்கள்; செய்தால் உங்களுக்குச் சித்திக்காது என்றான்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகளை அபியா சொல்லிவிட்டு, அவன் சொன்னது கர்த்தருக்கு விரோதமாக யுத்தஞ் செய்யாதீர்கள்; யுத்தம் செய்தால் உங்களுக்கு சித்திக்காது என்றான்.  யெரொபெயாம் அவர்களுக்கு பின்னாக வர தக்கதாக பதிவிடையைச் சுற்றிப் போகப்பண்ணினான்.  அப்படியே அவர்கள் யூதாவுக்கு முன் இருந்தார்கள்; அந்த பதிவிடை அவர்களுக்கு பின் இருந்தது. யூதாவுக்கு முன்னும் பின்னும் யுத்தம் நடக்கிறபோது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; ஆசாரியர்கள் பூரிகைகளை ஊதினார்கள்.  யூதா ஆர்ப்பரித்தார்கள்.  அவர்கள் ஆர்ப்பரித்ததில் தேவன் யெரொபெயாமையும், இஸ்ரவேலனைத்தையும்  கர்த்தர் அபியாவுக்கும், யூதாவுக்கும் முன்பாக முறியடித்தார். இஸ்ரவேல் புத்திரர் யூதாவுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தேவன் அவர்களை யூதாவின் கையில் ஒப்புக்கொடுத்தார்.  

பிரியமானவர்களே மேற்கூறிய பகுதிகளை நாம் தியானிக்கும்போது, கன்று குட்டிகளை செய்தவனும், அதனை பினபற்றுகிறவர்களும் விக்கிரகராதனைகாரர்களும், மாம்ச சிந்தயுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்.  ஆனால் அபியாவும், யூதாவும் தேவன் ஒருவர் என்ற ஆவியின் சிந்தைக்கேற்றபடி தேவனை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கிறவர்கள். அவர்கள் தேவனை மட்டும் சார்ந்துக்கொண்டவர்களானதால், அவர்களில் ஆசாரியர்கள் பூரிகைகளாகிய தேவ வசனம் கூறும் போது அதனை கேட்கிறவர்கள் தேவனை ஆர்ப்பரிக்கிறார்கள்.  அந்த ஆர்ப்பரிப்பின் சத்தத்தால் இஸ்ரவேலர்களாகிய விக்கிரகத்தை சேவிக்கிறவர்கள் வெட்டுண்டு விழுகிறார்கள்.  கர்த்தர் இதனை நம் உள்ளத்தில் ஆவிக்குரிய இஸ்ரவேலல்லாதவர்களுடைய  துர்கிரியைகள் எல்லாம் கர்த்தரின் சத்திய வசனத்தால் வெட்டுண்டு அழிந்து போகும் என்பதனை திருஷ்டாந்தப்படுத்துகிறார். இப்படியாக நம் உள்ளத்தில் எழும்புகிற துர் கிரியைகளாகிய விக்கிரக சேவையை கர்த்தர் சங்காரம் பண்ணுகிறார்.  அப்படியானால் மட்டுமே நம்உள்ளம் தேவனுக்கேற்றபடி தூய்மைபடுத்த முடியும்.  இப்படியாக யெரொபெயாமாகிய விக்கிரக கிரியைகள் பலங்கொள்ளாமல் போகும்.  நாம் கர்த்தரின் ஆவியில் பலங்கொள்ள முடியும்.  இவ்விதமாக பலங்கொண்டு கிறிஸ்துவினால் சத்திய சபைகள் பெருக நாம் யாவரும் கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.