தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ரோமர் 8:6

மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் மாம்ச கிரியைகள் வளரவிடாமல் ஆவியில் போராடி மேற்கொண்டு ஆவிக்குரிய சிந்தையில் வளர வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த  நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய இருதயத்தை சீர்திருத்தி நேராக்கி கொள்ளவேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,

11நாளாகமம் 13:1-7 

ராஜாவாகிய யெரொபெயாமின் பதினெட்டாம் வருஷத்தில் அபியா யூதாவின்மேல் ராஜாவாகி,

மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; கிபியா ஊரானாகிய ஊரியேலின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மிகாயாள்; அபியாவுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்தது.

அபியா தெரிந்துகொள்ளப்பட்ட நாலுலட்சம்பேராகிய பராக்கிரம சேவகரின் இராணுவத்தாரை யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணினான்; யெரொபெயாம் தெரிந்துகொள்ளப்பட்ட எட்டுலட்சம்பேராகிய பலத்த பராக்கிரமசாலிகளை அவனுக்கு எதிராக யுத்தத்திற்கு நிறுத்தினான்.

அப்பொழுது அபியா எப்பிராயீம் மலைத்தேசத்திலுள்ள செமராயீம் என்னும் மலையின்மேல் ஏறி நின்று: யெரொபெயாமே, எல்லா இஸ்ரவேலரே, கேளுங்கள்.

இஸ்ரவேலை என்றைக்கும் ஆளும் ராஜ்யபாரத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தாவீதுக்கும் அவன் குமாரருக்கும் மாறாத உடன்படிக்கையாய்க் கட்டளையிட்டதை நீங்கள் அறியீர்களா?

ஆகிலும் தாவீதின் குமாரனாகிய சாலொமோனின் ஊழியக்காரனான யெரொபெயாம் என்னும் நேபாத்தின் குமாரன் எழும்பி, தன் எஜமானுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.

பேலியாளின் மக்களாகிய வீணர் அவனோடேகூடி, சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் அவர்களை எதிர்க்கக்கூடாமல் வாலவயதும் திடனற்ற மனதுமாயிருக்கையில், அவனுக்கு விரோதமாய்த் தங்களைப் பலப்படுத்திக்கொண்டார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது யூதாவின் ராஜாவாகிய அபியாவுக்கும், யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்தது.  அபியா தெரிந்துக்கொள்ளப்பட்ட நாலு லட்சம் பராக்கிரம சேவகரின் இராணுவத்தையும், யெரொபெயாம் எட்டு லட்சம் பேராகிய பலத்த பராக்கிரமசாலிகளையும் யுத்தத்திற்கு ஆயத்தமாக்கினார்கள்.  அப்பொழுது அபியா எப்பிராயீம் மலைதேசத்திலுள்ள செமராயீம் என்னும் மலையின் மேல் ஏறி நின்று யெரொபெயாமிடமும், இஸ்ரவேலிடமும் சொல்கிறான்  இஸ்ரவேலை என்றைக்கும் ஆளும்படி கர்த்தர் தாவீதும் அவன் குமாரருக்கும் மாறாத உடன்படிக்கையை கட்டளையிட்டதை அறியீர்களா? என்ற போதிலும் சாலொமோனின் ஊழியக்காரனாகிய யெரொபெயாம் எழும்பி தன் எஜமானுக்கு விரோதமாக கலகம் பண்ணினான்.  பேலியாளின் மக்களாகிய வீணர் அவனோடுகூடி சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் அவர்களை எதிர்க்கக் கூடாமல் வாலவயதும் திடனற்ற வயதுமாயிருக்கையில் அவனுக்கு விரோதமாக தங்களை பலப்படுத்திக்கொண்டார்கள்.  பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டவைகள் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியை எவ்விதம் வளரவிடாதபடி மாம்சத்தின் செயல்கள் மோதியடிக்கும் என்பதனை கர்த்தர் திருஷ்டந்தப்படுத்துகிறார்.  அல்லாமலும் இளம் வயதில் இருதயம் திடப்படாமல் இருக்கும் போது அதிகமான மாம்ச கிரியைகள் நம்முடைய உள்ளத்தில் மோதியடிக்கும். ஆதலால் நம்மில்  மாம்சக்கிரியைகள் வளராமல் இருக்கும்படி போராடி மேற்கொள்கிறவர்களாகயிருக்கும்படியாகவும் கர்த்தரின் ஆவியில் வளரும்படியாகவும் ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.