தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபேசியர் 2:21

அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது;

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளம் எப்பொழுதும் கிறிஸ்துவின்  பரிசுத்த ஸ்தலமாக விளங்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய சாட்சிகளை கிறிஸ்துவுக்குள்ளாக சத்திய வசனத்தின்மூலம் காத்துக் கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 28: 9-10 

என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.

இப்போதும் எச்சரிக்கையாயிரு; பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்குக் கர்த்தர் உன்னைத் தெரிந்துகொண்டார்; நீ திடன்கொண்டு அதை நடப்பி என்று சொன்னான்.

மேற்கூறிய வசனங்களில் தாவீது சாலொமோனிடம், என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்கு தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர்உன்னை  என்றைக்கும் கைவிடுவார் என்றான். இப்போதும் எச்சரிக்கையாயிரு; பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தை   கட்டுவதற்குக் கர்த்தர் உன்னை தெரிந்துக் கொண்டார், நீ திடன் கொண்டு அதை நடப்பி என்று சொன்னான். 

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களில் உன்னதமான தேவனுடைய குமாரன் கிறிஸ்து என்பதற்கு திருஷ்டாந்தப்படுத்தியது தான் தாவீதும் அவன் குமாரனாகிய சாலொமோன். மேலும் கர்த்தர் தங்கும்படியாக ஆலயத்தை கிறிஸ்து மூலம் நம்முடைய உள்ளத்தில் கட்டும்படியாக கர்த்தர் திருஷ்டாந்தபடுத்தி கூறுகிறார்.  ஆதலால் கிறிஸ்து தான் நம்மில் ஆலயமாக எழும்புகிறார். இதனை நாம் கருத்தில் கொண்டு கர்த்தரை உத்தம இருதயத்தோடும், உற்சாக மனதோடும் சேவிக்க வேண்டும்.  ஏனென்றால் நம்முடைய எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து  நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார். நாம் அவரை தேடுகிறோமா; எப்படி தேடுகிறோம், கருத்தாய் தேடுகிறோமா என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருப்பார்.  ஆதலால் நாம் அவரை தேடினால் அவர் நமக்கு தென்படுவார்;  அவரை விட்டுவிட்டோமானால் நம்மை அவர் விட்டுவிடுவார்.  ஆதலால்  நாம் எப்போதும் எச்சரிக்கையாயிருந்து நம்மில் கிறிஸ்து ஆலயமாக எழுப்பும்படியாகவும்   நம் உள்ளம் எப்போதும் பரிசுத்த ஸ்தலமாக கிறிஸ்துவுக்குள் விளங்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.