தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 119:129 

உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என் ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய சாட்சிகளை கிறிஸ்துவுக்குள்ளாக சத்திய வசனத்தின்மூலம் காத்துக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய தலைமை கிறிஸ்து என்பதனைக் குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 28:1-3

கோத்திரங்களின் தலைவரும், ராஜாவைச் சேவிக்கிற வகுப்புகளின் தலைவரும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும் ராஜாவுக்கும், ராஜகுமாரருக்கும் உண்டான எல்லா ஆஸ்தியையும் மிருகஜீவன்களையும் விசாரிக்கிற தலைவருமாகிய இஸ்ரவேலின் சகல பிரபுக்களையும், பிரதானிகளையும், பலசாலிகளையும், சகல பராக்கிரமசாலிகளையும் தாவீது எருசலேமிலே கூடிவரச்செய்தான்.

அப்பொழுது ராஜாவாகிய தாவீது எழுந்திருந்து காலூன்றி நின்று: என் சகோதரரே, என் ஜனமே, நான் சொல்வதைக் கேளுங்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் நமது தேவனுடைய பாதபடியும் தங்குவதற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நான் என் மனதிலே நினைத்து, கட்டுகிறதற்கு ஆயத்தமும் பண்ணினேன்.

ஆனாலும் தேவன்: நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; நீ யுத்த மனுஷனாயிருந்து, ரத்தத்தைச் சிந்தினாய் என்றார்.

மேற்கூறிய வசனங்களில் கோத்திரங்களின் தலைவரும்  ராஜாவை சேவிக்கிற வகுப்புகளின் தலைவரும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும், ராஜாவுக்கும் ,ராஜகுமாரருக்கும் உண்டான  எல்லா ஆஸ்திகளையும் மிருக ஜீவன்களையும் விசாரிக்கிற தலைவருமாகிய இஸ்ரவேலின் சகல பராக்கிரமசாலிகளையும்,   பலசாலிகளையும் தாவீது எருசலேமிலே கூடிவரச் செய்தான்.  அப்பொழுது  ராஜாவாகிய தாவீது எழுந்திருத்து காலூன்றி நின்று: என் சகோதரரே, என் ஜனமே, நான் சொல்வதை கேளுங்கள்: கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் நமது தேவனுடைய பாதபடியும் தங்குவதற்கு ஒரு ஆலயத்தை கட்ட நான் என் மனதிலே நினைத்து, கட்டுகிறதற்கு ஆயத்தமும் பண்ணினேன்.  ஆனாலும் தேவன்: நீ என் நாமத்திற்கு ஆலயத்தை கட்ட வேண்டாம்; நீ யுத்த மனுஷனாயிருந்து ரத்தத்தை சிந்தினாய் என்றார்.  பின்னும் தாவீது சொன்னது 

1 நாளாகமம் 28: 4-8 

இப்போதும் இஸ்ரவேல் அனைத்தின்மேலும் என்றைக்கும் ராஜாவாயிருக்க, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என் தகப்பனுடைய வீட்டாரிலெல்லாம் என்னைத் தெரிந்துகொண்டார்; அவர் யூதாவையும் யூதாவின் வம்சத்தில் என் தகப்பன் குடும்பத்தையும் தலைமையாகத் தெரிந்துகொண்டு, என்னை எல்லா இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்க, என் தகப்பனுடைய குமாரருக்குள் என்மேல் பிரியம் வைத்தார்.

கர்த்தர் எனக்கு அநேகம் குமாரரைத் தந்தருளினார்; ஆனாலும் இஸ்ரவேலை ஆளும் கர்த்தருடைய ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காருகிறதற்கு, அவர் என்னுடைய எல்லாக் குமாரரிலும் என் குமாரனாகிய சாலொமோனைத் தெரிந்துகொண்டு,

அவர் என்னை நோக்கி: உன் குமாரனாகிய சாலொமோனே என் ஆலயத்தையும் என் பிராகாரங்களையும் கட்டக்கடவன்; அவனை எனக்குக் குமாரனாகத் தெரிந்துகொண்டேன்; நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்.

இந்நாளில் நடக்கிறபடியே அவன் என் கற்பனைகளின்படியும் என் நியாயங்களின்படியும் செய்ய உறுதியாயிருப்பானானால், அவன் ராஜ்யபாரத்தை என்றென்றைக்கும் திடப்படுத்துவேன் என்றார்.

இப்போதும் நீங்கள் என்றென்றைக்கும் இந்த நல்ல தேசத்தைச் சுதந்தரமாய் அநுபவித்து, உங்களுக்குப்பிறகு அதை உங்கள் பிள்ளைகளுக்குச் சுதந்தரமாய்ப் பின்வைக்கும்பொருட்டாக, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு விசாரியுங்கள் என்று கர்த்தரின் சபையாகிய இஸ்ரவேல் அனைத்தின் கண்களுக்குமுன்பாகவும், நமது தேவனுடைய செவிகேட்கவும் உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

மேற்கூறிய வசனங்களை தியானிக்கையில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இஸ்ரவேலுக்கு ராஜாவாக வெளிப்படுவார் என்பதும், அவர் இஸ்ரவேலை தம்முடைய ஜனமாகவும் சகோதரராகவும் மாற்றுகிறார் என்பதனை திருஷ்டாந்தபடுத்தி, அவர் இஸ்ரவேலின் முக்கியமானவர்களை எருசலேமிலே கூடிவர செய்து,  எழுந்து காலூன்றி நிற்பது; இரட்சிக்கப்பட்ட ஆத்துமாவை குறிக்கிறது. நம்முடைய ஆத்தும இரட்சிப்புக்கு பிறகு கிறஸ்துவே எல்லாவற்றிற்கும் அதிபதியாகவும், தலைவராகவும் வெளிப்படுகிறார்; அந்த ஆத்துமாவில் தான் கிறிஸ்துவின் ஜீவன் என்றன்றும் விளங்கும் என்பதனை கர்த்தர் தாவீதைக்கொண்டு திருஷ்டாந்தப்படுத்துகிறார். கர்த்தர் நம்மில் தங்கும்படியாகவும், கர்த்தரின் வசனம் நம்மில் இருக்கும்படியாகவும், நம்மை அவருடைய ஆலயமாக்க நாம் பிறருக்கு முன்பில், நம்முடைய சாட்சிகளில் இரத்த கறையில்லாமல் இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுப்படுத்துகிறார். என்னவென்றால் நம்முடைய சாட்சிகளில் பிறருடைய இரத்தம் சிந்துவதற்கு நாம் காரணமாயிருக்கலாகாது. ஆதலால் பிரியமானவர்களே கர்த்தரின் வசனங்களை தியானிக்கும் போது நம்மை அவருடைய ஆலயமாக்க கர்த்தர் நம்மில் எழுந்தருளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.