தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 3:10 

உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தர் தம்முடைய வேலைக்காக நியமித்தல்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் பரலோகத்தின் பொக்கிஷமாகிய நித்திய ஜீவனைப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 26: 26-32 

ராஜாவாகிய தாவீதும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளுமான பிதாக்களின் தலைவரும், சேனாபதிகளும் யுத்தத்தில் அகப்பட்ட கொள்ளைகளில் எடுத்து,

கர்த்தருடைய ஆலயத்தைப் பரிபாலிக்கும்படிக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட பொருள்களின் பொக்கிஷங்களையெல்லாம் அந்தச் செலோமித்தும் அவனுடைய சகோதரரும் விசாரித்தார்கள்.

ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலும், கீசின் குமாரனாகிய சவுலும், நேரின் குமாரனாகிய அப்னேரும், செருயாவின் குமாரனாகிய யோவாபும், அவரவர் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட அனைத்தும் செலோமித்தின் கையின்கீழும் அவன் சகோதரர் கையின்கீழும் இருந்தது.

இத்சேயாரியரில் கெனானியாவும் அவன் குமாரரும் தேசகாரியங்களைப் பார்க்கும்படி வைக்கப்பட்டு, இஸ்ரவேலின்மேல் விசாரிப்புக்காரரும் மணியகாரருமாயிருந்தார்கள்.

எப்ரோனியரில் அசபியாவும் அவன் சகோதரருமாகிய ஆயிரத்து எழுநூறு பராக்கிரமசாலிகள் யோர்தானுக்கு இப்பாலே, மேற்கே இருக்கிற இஸ்ரவேலின் கர்த்தருடைய எல்லா ஊழியத்திற்கும் ராஜாவின் வேலைக்கும் வைக்கப்பட்டார்கள்.

எப்ரோனியரில் எரியாவும் இருந்தான்; அவன் தன் பிதாக்களின் வம்சங்களான எப்ரோனியரில் தலைமையானவன்; தாவீது அரசாண்ட நாற்பதாம் வருஷத்திலே அவர்கள் தேடப்பட்டபோது அவர்களுக்குள்ளே கீலேயாத்தேசத்து ஏசேரிலே பராக்கிரம வீரர் காணப்பட்டார்கள்.

பலசாலிகளாகிய அவனுடைய சகோதரர் இரண்டாயிரத்து எழுநூறு பிரதான தலைவராயிருந்தார்கள்; அவர்களைத் தாவீது ராஜா தேவனுக்கடுத்த சகல காரியத்திற்காகவும், ராஜாவின் காரியத்கிற்காகவும், ரூபனியர்மேலும், காதியர்மேலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தின்மேலும் வைத்தான்.

மேற்கூறிய வசனங்களில் ராஜாவாகிய தாவீதும், ஆயிரம் பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளுமான பிதாக்களின் தலைவரும், சேனாபதிகளும் யுத்தத்தில் அகப்பட்ட கொள்ளைகளில் எடுத்து கர்த்தருடைய ஆலயத்தை பரிபாலிக்கும்படிக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துக்கொண்ட பொருட்களில் பொக்கிஷங்களையெல்லாம் அந்த செலோமித்தும் அவனுடைய சகோதரரும் விசாரித்தார்கள். ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலும், கீசின் குமாரனாகிய சவுலும், நேரின் குமாரனாகிய அப்னேரும், செரூயாவின் குமாரனாகிய யோவாபும், அவரவர் பரிசுத்தம் என்று நேர்ந்துக்கொண்ட அனைத்தும் செலோமித்தின் கையின் கீழும் அவன் சகோதரர் கையின் கீழும் இருந்தது. இத்சாகாரியரில் கெனனியாவும், அவன் குமாரரும் தேசகாரியங்களைப் பார்க்கும்படி வைக்கப்பட்டு, இஸ்ரவேலின் மேலும், விசாரிப்புக்காரரும், மணியகாரருமாயிருந்தார்கள்.  எப்ரோனியரில் அசபியாவும், அவன் சகோதரருமாகிய ஆயிரத்து எழுநூறு பராக்கிரமசாலிகள் யோர்தானுக்கு இப்பாலே மேற்கே இருக்கிற இஸ்ரவேலின் மேல் கர்த்தருடைய எல்லா ஊழியத்திற்கும் ராஜாவின் வேலைக்கும் வைக்கப்பட்டார்கள்.  எப்ரோனில் எரியாவும் இருந்தான்; அவன் தன் பிதாக்களின் வம்சங்களான எப்ரோனியரில் தலைமையானவன்; தாவீது அரசாண்ட நாற்பதாம் வருஷத்திலே அவர்கள் தேடப்பட்டபோது அவர்களுக்குள்ளே கீலேயாத் தேசத்து ஏசேரிலே பராக்கிரம வீரர் காணப்பட்டார்கள். பலசாலிகளான  அவனுடைய சகோதரர் இரண்டாயிரத்து எழுநூறு பிரதான தலைவராயிருந்தார்கள்; அவர்களை தாவீது தேவனுக்கடுத்த சகல காரியத்திற்காகவும், ராஜாவின் காரியத்திற்காகவும், ரூபனியர்மேலும், காதியர்மேலும்,   மனாசேயின் பாதி கோத்திரத்தின் மேலும் வைத்தான். 

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களின் கருத்துக்கள் என்னவென்றால் நித்திய ஜீவனை நாம் பெற்றுக்கொண்டோமானால், அதனை கர்த்தரின் வார்த்தையால் பரிசுத்தப்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்.  அவ்விதம் பரிசுத்தபடுத்துவோமானால், கர்த்தரின்  கையின் கீழ் அது பாதுகாக்கப்பட்டு, தேசத்து ஜனங்களுக்காக திறப்பிலே நிற்கும் கிருபையை கர்த்தர் தந்தருளுவார்.  பின்பு அவர்கள் பராக்கிரம வீரர்கள் என்று குறிக்கப்பட்டிருப்பது, கிறிஸ்து நம்முடைய பராக்கிரமத்தின் வீரராக எழுந்தருளுவார் என்பதனை திருஷ்டாந்தப்படுத்துகிறார். இவ்விதமாக பலசாலிகளாக  இருக்கிறவர்களை தேவனுக்கடுத்த சகல காரியத்திற்காகவும் கர்த்தர் கிறிஸ்துவினால் நியமிக்கிறார்.  இப்படியாக கர்த்தருடைய வேலைக்காக நாம் நியமிக்கப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.