தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மத்தேயு  6:21 

உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் பரலோகத்தின் பொக்கிஷமாகிய நித்திய ஜீவனைப்பெற்றுக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் வாசலாகிய வசனங்களை காத்து கொள்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம்  26: 6-13 

அவன் குமாரனாகிய செமாயாவுக்கும் குமாரர் பிறந்து, அவர்கள் பராக்கிரமசாலிகளாயிருந்து, தங்கள் தகப்பன் குடும்பத்தாரை ஆண்டார்கள்.

செமாயாவுக்கு இருந்த குமாரர் ஒத்னியும், பலசாலிகளாகிய ரெப்பாயேல், ஓபேத், எல்சாபாத் என்னும் அவன் சகோதரரும், எலிகூவும் செமகியாவுமே.

ஓபேத்ஏதோமின் புத்திரரும் அவர்கள் குமாரரும் அவர்கள் சகோதரருமாகிய ஊழியத்திற்குப் பலத்த பராக்கிரமசாலிகளான அவர்களெல்லாரும் அறுபத்திரண்டுபேர்.

மெஷெலேமியாவின் குமாரரும் சகோதரருமான பராக்கிரமசாலிகள் பதினெட்டுப்பேர்.

மெராரியின் புத்திரரில் ஓசா என்பவனுடைய குமாரர்கள்: சிம்ரி என்னும் தலைமையானவன்; இவன் மூத்தவனாயிராவிட்டாலும் இவன் தகப்பன் இவனைத் தலைவனாக வைத்தான்.

இல்க்கியா, தெபலியா, சகரியா என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் குமாரரானவர்கள்; ஓசாவின் குமாரரும் சகோதரரும் எல்லாம் பதின்மூன்றுபேர்.

காவல்காரரான தலைவரின்கீழ்த் தங்கள் சகோதரருக்கொத்த முறையாய்க் கர்த்தருடைய ஆலயத்தில் வாசல்காக்கிறவர்களாய்ச் சேவிக்க இவர்கள் வகுக்கப்பட்டு,

தங்கள் பிதாக்களின் குடும்பத்தாராகிய சிறியவர்களும் பெரியவர்களுமாய் இன்ன வாசலுக்கு இன்னாரென்று சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.

மேற்கூறிய வசனங்களில்  ஓபேத் ஏதோமின் குமாரனாகிய செமாயாவுக்கும் குமாரர் பிறந்து, அவர்கள் பராக்கிரமசாலிகளாயிருந்து, தங்கள் தகப்பன் குடும்பத்தாரை ஆண்டார்கள்.  செமாயாவுக்கு இருந்த குமாரர் ஒத்னியும், பலசாலிகளான ரெப்பயேல் ஓபேத், எல்சாபாத் என்னும் அவன் சகோதரரும், எலிகூவும் செமகியாவுமே.  ஓபேத் ஏதோமின் புத்திரரும் அவர்கள் குமாரரும் அவர்கள் சகோதரராகிய ஊழியத்திற்கு பலத்த பராக்கிரமசாலிகளான அவர்கள் அறுபத்திரண்டு பேர். மெஷெலேமியாவின் குமாரரும் சகோதரருமான பராக்கிரமசாலிகள் பதினெட்டு பேர்.  மெராரியின் புத்திரரில் ஓசா என்பவனுடைய குமாரரர்கள்; சிம்ரி என்னும் தலைமையானவன்; இவன் மூத்தவனாயிராவிட்டாலும் இவன் தகப்பன் இவனை தலைவனாக வைத்தான்;அல்லாமலும் இல்க்கியா, தெபலியா, சகரியா என்னும் இ ரண்டாம், மூன்றாம், நான்காம் குமாரரானவர்கள்; ஓசாவின் குமாரரும் சகோதரரும் எல்லாரும் பதின்மூன்று பேர்.  தங்கள் பிதாக்களின் குடும்பத்தாராகிய சிறியவர்களும் பெரியவர்களுமாய் இன்ன வாசலுக்கு இன்னாரென்று சீட்டுப்போட்டுக் கொண்டார்கள்.  இப்படியாக ஒவ்வொருவருக்கும் வாசற்புறத்தின் காவலுக்கும் விழுந்த சீட்டு எப்படியென்றால் 

1 நாளாகமம் 26:14-16 

கீழ்ப்புறத்திற்குச் செலேமியாவுக்குச் சீட்டு விழுந்தது; விவேகமுள்ள யோசனைக்காரனாகிய சகரியா என்னும் அவன் குமாரனுக்குச் சீட்டுப் போட்டபோது, அவன் சீட்டு வடபுறத்திற்கென்று விழுந்தது.

ஓபேத்ஏதோமுக்குத் தென்புறத்திற்கும், அவன் குமாரருக்கு அசுப்பீம் வீட்டிற்கும்,

சூப்பீமுக்கும், ஓசாவுக்கும் மண்போட்டு உயர்த்தப்பட்ட வழியும் காவலுக்கு எதிர்காவலும் இருக்கிற மேற்புறமான வாசலுக்கும் சீட்டு விழுந்தது.

மேற்கூறப்பட்ட  சீட்டின் பிரகாரம் ஒவ்வொரு கர்த்தரின் ஊழியத்திற்கென்று அவர்கள் வைக்கபடுகிறார்கள்.  இதனைக் குறித்து 

1 நாளாகமம் 26:17-25

கிழக்கே லேவியரான ஆறுபேரும், வடக்கே பகலிலே நாலுபேரும், தெற்கே பகலிலே நாலுபேரும், அசுப்பீம் வீட்டண்டையில் இரண்டிரண்டுபேரும்,

வெளிப்புறமான வாசல் அண்டையில் மேற்கே இருக்கிற உயர்ந்த வழிக்கு நாலுபேரும், வெளிப்புறமான வழியில் இரண்டுபேரும் வைக்கப்பட்டார்கள்.

கோராகின் புத்திரருக்குள்ளும், மெராரியின் புத்திரருக்குள்ளும், வாசல்காக்கிறவர்களின் வகுப்புகள் இவைகளே.

மற்ற லேவியரில் அகியா என்பவன் தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களின் பொக்கிஷங்களையும் விசாரிக்கிறவனாயிருந்தான்.

லாதானின் குமாரர் யாரென்றால், கெர்சோனியனான அவனுடைய குமாரரில் தலைமையான பிதாக்களாயிருந்த யெகியேலியும்,

யெகியேலியின் குமாரராகிய சேத்தாமும், அவன் சகோதரனாகிய யோவேலுமே; இவர்கள் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷங்களை விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.

அம்ராமியரிலும், இத்சேயாரியரிலும், எப்ரோனியரிலும், ஊசியேரியரிலும், சிலர், அப்படியே விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.

மோசேயின் குமாரனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் பொக்கிஷப் பிரதானியாயிருந்தான்.

எலியேசர் மூலமாய் அவனுக்கு இருந்த சகோதரரானவர்கள், இவன் குமாரன் ரெகபியாவும், இவன் குமாரன் எஷாயாவும், இவன் குமாரன் யோராமும், இவன் குமாரன் சிக்கிரியும், இவன் குமாரன் செலோமித்துமே.

மேற்கூறப்பட்டவர்களில் அகியா என்பவன் தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பிரதீஷ்டையாக்கப்பட்ட பொருட்களின் பொக்கிஷங்களையும் விசாரிக்கிறவனாயிருந்தான்.  

மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது கர்த்தரின் ஆலயத்தில் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறவர்கள் எல்லாரும் கிறிஸ்துவினால் தெரிந்தெடுக்கப்படுவதும், மேலும் ஆலயத்தின் பொக்கிஷங்களின்  திருஷ்டாந்தம் என்னவென்றால்  ஆலயமாகிய நம்முடைய பொக்கிஷம் கிறிஸ்து (நித்திய ஜீவன்).   அல்லாமலும் நம்முடைய எல்லா பொருட்களும் கர்த்தருக்கென்று பிரதீஷ்டைப்பண்ணப்பட வேண்டும் என்பதனை கர்த்தருடைய வசனம் மூலம் தேவன் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆதலால் பிரியமானவர்களே,  நம்முடைய பொக்கிஷம் உலகத்தின் அழிந்து போகிற பொருள்ள, அழியாத நித்திய ஜீவன்; இதனைக் கருத்தில் கொண்டு அழியாத நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள தகுதியாகும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.