தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபிரெயர் 7:17

நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மில் கிறிஸ்து என்றன்றைக்கும் ஆசாரியராக விளங்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் பலிபீடத்து ஊழியத்தில் (கிறிஸ்துவில்) எவ்விதம் பங்குள்ளவர்களாக இருக்க வேண்டுவது என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 24:1-8 

ஆரோன் புத்திரரின் வகுப்புகளாவன: ஆரோனின் குமாரர், நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.

நாதாபும் அபியூவும் குமாரர் இல்லாமல் தங்கள் தகப்பனுக்கு முன்னே மரித்தபடியினால், எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.

தாவீது சாதோக்கைக்கொண்டு எலெயாசாரின் புத்திரரையும், அகிமெலேக்கைக்கொண்டு இத்தாமாரின் புத்திரரையும் அவர்கள் செய்யவேண்டிய ஊழியத்துக்கு முறைப்படி அவர்களை வகுத்தான்.

அவர்களை வகுக்கிறபோது, இத்தாமாரின் புத்திரரைப்பார்க்கிலும் எலெயாசாரின் புத்திரருக்குள்ளே தலைமையானவர்கள் அதிகமானபேர் காணப்பட்டபடியினால், எலெயாசாரின் புத்திரரில் பதினாறுபேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும், இத்தாமாரின் புத்திரரில் எட்டுப்பேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும் தலைமையாக வைக்கப்பட்டார்கள்.

எலெயாசாரின் புத்திரரிலும் இத்தாமாரின் புத்திரரிலும், பரிசுத்த ஸ்தலத்துக்கும், தேவனுக்கு அடுத்த காரியங்களில் பிரபுக்களாயிருக்கும்படிக்கும், இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்பண்ணாமல் சீட்டுப்போட்டு அவர்களை வகுத்தார்கள்.

லேவியரில் சம்பிரதியாகிய செமாயா என்னும் நெதனெயேலின் குமாரன், ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் ஆசாரியனாகிய சாதோக்குக்கும் அபியத்தாரின் குமாரனாகிய அகிமெலேக்குக்கும் ஆசாரியரும் லேவியருமான பிதாக்களின் தலைவருக்கும் முன்பாக அவர்கள் நாமங்களை எழுதினான்; ஒரு பிதாவின் வீட்டுச் சீட்டு எலெயாசாருக்கு விழுந்தது; பின்பு அந்தப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது.

முதலாவது சீட்டு யோயாரீபின் பேர்வழிக்கும், இரண்டாவது யெதாயாவின் பேர்வழிக்கும்,

மூன்றாவது ஆரிமின் பேர்வழிக்கும், நான்காவது செயோரீமின் பேர்வழிக்கும்,

மேற்கூறப்பட்ட வசனங்களில் லேவி கோத்திரமான ஆரோன் புத்திரரின் வகுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.  நாதாபும், அபியூவும் குமாரர் இல்லாமல் தங்கள் தகப்பனுக்கு முன்னே மரித்தபடியினால், எலெயாசாரும், இத்தாமாரும் ஆசாரிய ஊழியமாகிய பலிபீடத்து ஊழியம் செய்தார்கள்.  அவர்களை தாவீது சாதோக்கைக் கொண்டு எலெயாசாரின் புத்திரரையும், அகிமேலெக்கைக் கொண்டு இத்தாமாரின் புத்திரரையும், அவர்கள் செய்யவேண்டிய ஊழியத்துக்கு முறைப்படி அவர்களை வகுத்தான்.  அவர்களை வகுக்கிற போது, இத்தாமாரின் புத்திரரைப் பார்க்கிலும், எலெயாசாரின் புத்திரருக்குள்ளே தலைமையானவர்கள் அதிகமானபேர்களானபடியால் எலெயாசாரின் புத்திரரில் பதினாறு பேர் தங்கள் பிதாக்களி் குடும்பத்துக்கும், எட்டுப் பேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும் தலைமையாக வைக்கப்பட்டார்கள்.  எலெயாசாரின் புத்திரிலும், இத்தாமாரின் புத்திரரிலும், பரிசுத்த ஸ்தலத்துக்கும், தேவனுக்கடுத்த காரியங்களில் பிரபுக்களாயிருக்கும்படிக்கும் இவர்களுக்கும், அவர்களுக்கும் வித்தியாசம் பண்ணாமல் சீட்டு போட்டு அவர்களை வகுத்தார்கள்.   பின்பு செமாயா என்னும் நெதனெயேலின் குமாரன், ராஜாவுக்கும்,  பிரபுக்களுக்கும் ஆசாரியனாகிய சாதோக்குக்கும் அபியத்தாரின் குமாரனாகிய அகிமேலெக்கும் ஆசாரியரும் லேவியருமான பிதாக்களின் தலைவருக்கும் முன்பாக அவர்கள் நாமங்களை எழுதினான்; ஒரு பிதாவின் வீட்டுச் சீட்டு எலெயாசாருக்கு விழுந்தது; பின்பு அந்தபடியே இத்தாமாருக்கும் விழுந்தது. மேலும் 

1 நாளாகமம் 24:7-18 

முதலாவது சீட்டு யோயாரீபின் பேர்வழிக்கும், இரண்டாவது யெதாயாவின் பேர்வழிக்கும்,

மூன்றாவது ஆரிமின் பேர்வழிக்கும், நான்காவது செயோரீமின் பேர்வழிக்கும்,

ஐந்தாவது மல்கியாவின் பேர்வழிக்கும், ஆறாவது மியாமீனின் பேர்வழிக்கும்,

ஏழாவது அக்கோத்சின் பேர்வழிக்கும், எட்டாவது அபியாவின் பேர்வழிக்கும்,

ஒன்பதாவது யெசுவாவின் பேர்வழிக்கும், பத்தாவது செக்கனியாவின் பேர்வழிக்கும்,

பதினோராவது எலியாசீபின் பேர்வழிக்கும், பன்னிரண்டாவது யாக்கீமின் பேர்வழிக்கும்,

பதின்மூன்றாவது உப்பாவின் பேர்வழிக்கும், பதினான்காவது எசெபெயாபின் பேர்வழிக்கும்,

பதினைந்தாவது பில்காவின் பேர்வழிக்கும், பதினாறாவது இம்மேரின் பேர்வழிக்கும்,

பதினேழாவது ஏசீரின் பேர்வழிக்கும், பதினெட்டாவது அப்சேசின் பேர்வழிக்கும்,

பத்தொன்பதாவது பெத்தகியாவின் பேர்வழிக்கும், இருபதாவது எகெசெக்கியேலின் பேர்வழிக்கும்,

இருபத்தோராவது யாகினின் பேர்வழிக்கும், இருபத்திரண்டாவது காமுவேலின் பேர்வழிக்கும்,

இருபத்துமூன்றாவது தெலாயாவின் பேர்வழிக்கும், இருபத்துநான்காவது மாசியாவின் பேர்வழிக்கும் விழுந்தது. 

மேற்கூறப்பட்டவர்கள் சீட்டின் வழியாக தெரிந்தெடுக்கபு்பட்டவர்கள். இவர்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்கள் தகப்பனாகிய ஆரோனுக்கு கற்பித்தபடியே, அவர்கள் அவனுடைய கட்டளையின்படியே, தங்கள் முறை வரிசைகளில் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் அவர்களுடைய ஊழியத்திற்காகப் பண்ணப்பட்ட வகுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.  

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட கர்த்தரின் வார்த்தைகளை தியானிக்கும் போது மேற்கூறிய கர்த்தரின் வசனங்களில் திருஷ்டாந்தப்படுத்துவது கிறிஸ்து பலிபீடத்து ஆசாரியராக நம்முடைய உள்ளங்களில் வெளிப்படுவார் என்பதனை கர்த்தர் லேவிக்கோத்திரத்தில் ஆரோனின் குமாரரின் வம்சங்களில் பிதாக்களின் முன்பாக அவர்கள் நாமங்களை எழுதி சீட்டு போட்டு தெரிந்தெடுத்தார்கள் என்று கூறப்படுகிறது.  சீட்டுப் போடுதல் என்றால் விரோதங்களை ஒழித்து பலவான்கள் நடுவே சிக்கறுக்கும் என்று நீதிமொழிகள் 18:18-ல் வாசிக்கிறோம்.  அல்லாமலும் நீதிமொழிகள் 16:33 -ல் சீட்டு மடியிலே போடப்படும்; காரிய சித்தியோ கர்த்தரால் வரும் என்று கர்த்தர் கூறுகிறார். சீட்டு என்பது கிறிஸ்துவை குறிக்கிறது.  மடி என்பது தேவனுடைய வார்த்தையைக் குறிக்கிறது.  தேவனுடைய வார்த்தையாகிய தேவ மகிமைதான் கிறிஸ்துவாக நம் சரீரமாகிய தேவனுடைய ஆலயத்தில் பிரவேசித்து, நம்மை பரிசுத்தப்படுத்தும்படியாக அவர் என்றன்றைக்கும் நம்மில் பலிபீடத்து ஊழியம் செய்யும் ஆசாரியராக வெளிப்படுகிறார்.  அப்படியாக நம்மில் தேவனுக்கு விரோதமாக இருந்த செயல்களை ஒழித்து, பலவான்கள் நடுவே சிக்கறுக்கிறார். ஆதலால் கிறிஸ்து நம்மோடிருந்து பலிபீடத்தில் என்றன்றைக்கும் ஆசாரியராக இருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.