தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 119:18

உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் பலிபீடத்து ஊழியத்தில் (கிறிஸ்துவில்) பங்குள்ளவர்களாக இருக்க வேண்டுவது எவ்விதம்?

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் உயிர்தெழுந்த கிறிஸ்துவினால் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 23:14-24 

தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் குமாரரோவெனில், லேவிகோத்திரத்தாருக்குள் எண்ணப்பட்டார்கள்.

மோசேயின் குமாரர், கெர்சோம், எலியேசர் என்பவர்கள்.

கெர்சோமின் குமாரரில் செபுவேல் தலைமையாயிருந்தான்.

எலியேசருடைய குமாரரில் ரெகபியா என்னும் அவன் குமாரன் தலைமையாயிருந்தான்; எலியேசருக்கு வேறே குமாரர் இல்லை, ரெகபியாவின் குமாரர் அநேகராயிருந்தார்கள்.

இத்சாரின் குமாரரில் செலோமித் தலைமையாயிருந்தான்.

எப்ரோனின் குமாரரில் எரியா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நாலாவது எக்காமியாம்.

ஊசியேலின் குமாரரில் மீகா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது இஷியா.

மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் குமாரர், எலெயாசார், கீஸ் என்பவர்கள்.

எலெயாசார் மரிக்கிறபோது, அவனுக்குக் குமாரத்திகளே அல்லாமல் குமாரர் இல்லை; கீசின் குமாரராகிய இவர்களுடைய சகோதரர் இவர்களை விவாகம்பண்ணினார்கள்.

மூசியின் குமாரர், மகலி, ஏதேர், எரேமோத் என்னும் மூன்றுபேர்.

தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, பிதாக்களில் தலைமையாயிருந்த லேவி புத்திரரின் பேர்டாப்பின்படியே, தலைதலையாக எண்ணப்பட்ட இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இவர்களுடைய சந்ததியார் கர்த்தருடைய ஆலயத்துப் பணிவிடையைச் செய்தார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் உள்ளவைகளின்படியே  தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் குமாரரோவெனில், லேவிக்கோத்திரத்தாருக்குள் எண்ணப்பட்டவர்கள்;  இவர்களில் தலைமுறை தலைமுறைகளில் தலமையாயிருந்தவர்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளது.  மேலும் இதில் எழுதப்பட்டுள்ள பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, பிதாக்களில் தலைமையாயிருந்த லேவி புத்திரரின் பேர் டாப்பின்படியே தலைதலையாக எண்ணப்பட்ட இருபது வயதிற்கு மேற்பட்ட இவர்களுடைய சந்ததியார் கர்த்தருடைய ஆலயத்து பணிவிடையை செய்தார்கள்.  இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நமது ஜனத்தை இளைப்பாறியிருக்கப் பண்ணினார்.  அவர் என்றன்றைக்கும் எருசலேமில் வாசம் பண்ணுவாரென்றும், இனி லேவியர் வாசஸ்தலத்தையாகிலும், அதின் ஊழியத்திற்க்கடுத்த அதின் பணிமுட்டுகளில் எதையாகிலும் சுமக்கத் தேவையில்லை என்றும் தாவீது  அவர்களை குறித்து சொன்ன கடைசி வார்த்தைகளின் படியே, லேவிப்புத்திரரில் தொகைக்குட்பட்டவர்கள் இருபது வயது முதல் அதற்கு மேற்பட்டவர்களாயிருந்தார்கள்.  அவர்கள் ஆரோனுடைய குமாரரின் கீழ் கர்த்தருடைய ஆலயத்தின் ஊழியமாய் நின்று, பிரகாரங்களையும், அறைகளையும், சகல பரிசுத்த பணிமுட்டுகளின் சுத்திகரிப்பையும், தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்கடுத்த வேலையையும் விசாரிப்பதும்  சமூகதப்பங்களையும், போஜனபலிக்கு மெல்லிய மாவையும், புளிப்பில்லாத அதிரசங்களையும், சட்டிகளிலே செய்கிறதையும் சுடுகிறதையும், திட்டமான சகல நிறையையும் அளவையும் விசாரிப்பதும், நாள்தோறும் காலையிலும் மாலையிலும், கர்த்தரை போற்றி துதித்து, ஓய்வு நாட்களிலும், அமாவாசைகளிலும், பண்டிகைகளிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகள் செலுத்தப்படுகிற சகல வேலைகளிலும், இலக்கத்திற்குள்ளான அவர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்டபடியே, எப்பொழுதும் அந்த பிரகாரமாய்ச் செய்ய கர்த்தருக்கு முன்பாக நிற்பதும், ஆசரிப்புக் கூடாரத்தின் காவலையும், பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் தங்கள் சகோதரராகிய ஆரோனுடைய குமாரரின் காவலையும் காப்பதும், கர்த்தருடைய ஆலயத்தின் பணிவிடையைச் செய்வதும் அவர்கள் வேலையாயிருந்தது. 

பிரியமானவர்களே,  மேற்கூறப்பட்ட வசனங்களின் கருத்துக்கள் என்னவெனில் பலிபீடத்து ஊழியம் கிறிஸ்துவுக்குரியது என்பதனை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்தி, கர்த்தரின் சத்தம் கேட்டு உடனே கீழ்படிந்து தங்களுக்கு சொந்தமாக  எதையும் பூமியில் வைக்காமல், நித்திய சுதந்தரதிற்கென்று தங்களை முழுமையும் ஒப்புக்கொடுத்து, நிலங்களை பதினொன்று கோத்திரத்திற்கு கர்த்தர் மோசே யோசுவா என்பவர்களை வைத்து பங்கிட்டு கொடுத்தபோது, எந்த கவலையும் தங்கள் இருதயங்களில் தோன்றாமல், கர்த்தரே அவர்கள் சுதந்தரம் என்று சொன்ன போது; சந்தோஷத்தோடு அதனை முழு மனதாக ஏற்றுக்கொண்டு; பின்பு அநேக நாட்களுக்கு பிற்பாடு மற்ற கோத்திரத்தார் இவர்கள் மேல் மனதுருகி கொடுத்ததை வாங்கி தாங்களும், தங்கள் தலைமுறைகளும், தங்கியும், புசித்தும் குடித்தும்; இவ்விதமாக ஜீவனம் பண்ணி, கர்த்தரின் வேலையையும் செய்ததாக சில நாட்களுக்கு முன்பு வேத வசனத்தால் தியானித்தோம்.  இவை என்னவென்றால் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எல்லாவற்றையும்; அவர் நமக்காக தம்முடைய ஜீவனையும் தந்தார்.  இவ்விதமாக உள்ளவர்கள் நடுவில் தான் கிறிஸ்து பலிபீடத்தில் ஆசாரியராக செயல்படுகிறார்.  மேலும் கர்த்தருக்கு ஆராதனை செய்ய வேண்டிய விதமும் குறிக்கப்பட்டிருக்கிறது. நாம் எப்போதும் கர்த்தரை போற்றி துதித்து, அவர்  செய்கிற கிரியைகளை மற்றவர்களுக்கு பிரசித்தப்படுத்துகிறவர்களாயிருக்க வேண்டும்.  அப்படியாக கர்த்தருக்கு ஊழியம் செய்கிறவர்கள் ஆராதனைக்கடுத்த காரியங்களில் எல்லாவற்றிலும் பரிசுத்தமாய் இருக்க வேண்டும் என்பதனையும் நமக்கு விளக்குகிறார்.  மேலும் கர்த்தரின் வசனம், கிறிஸ்துவினால் உண்டான புதிய உடன் படிக்கையின் இரத்தம், தேவனுடைய வார்த்தையாகிய நியாயப்பிரமாணம், தேவனுடைய தீர்க்கதரிசன வார்த்தைகள் இவைகள் எல்லாவற்றிலும் கருத்தோடு கைக்கொண்டு கர்த்தருக்கு ஆராதனை செய்வதில் காலையிலும், மாலையிலும் மற்றும் உள்ளத்தில் எப்போதும் போற்றி துதிக்கிறதில் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். இப்படியாக நம்மை கர்த்தருக்காக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.