தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 118:28

நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் உயிர்தெழுந்த கிறிஸ்துவினால் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மில் கிறிஸ்து மகிமையின் ஆலயமாக விளங்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 23:1-13 

தாவீது கிழவனும் பூரண வயதுள்ளவனுமானபோது, தன் குமாரனாகிய சாலொமோனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான்.

இஸ்ரவேலின் எல்லாப் பிரபுக்களையும், ஆசாரியரையும், லேவியரையும் கூடிவரும்படி செய்தான்.

அப்பொழுது முப்பது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர் பேர்பேராக எண்ணப்பட்டார்கள்; தலைதலையாக எண்ணப்பட்ட அவர்களுடைய இலக்கம் முப்பத்தெண்ணாயிரம்.

அவர்களில் இருபத்து நாலாயிரம்பேர் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களும், ஆறாயிரம்பேர் தலைவரும் மணியக்காரருமாயிருக்கவேண்டும் என்றும்,

நாலாயிரம்பேர் வாசல் காக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும், துதிசெய்கிறதற்குத் தான் பண்ணுவித்த கீதவாத்தியங்களால் நாலாயிரம்பேர் கர்த்தரைத் துதிக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும் தாவீது சொல்லி,

அவர்களை லேவியின் குமாரராகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி வகுத்தான்.

கெர்சோனியரில், லாதானும், சிமேயும் இருந்தார்கள்.

லாதானின் குமாரர், யெகியேல், சேத்தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைமையாயிருந்தான்.

சிமேயின் குமாரர், செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்றுபேர்; இவர்கள் லாதான் வம்சப் பிதாக்களில் தலைமையாயிருந்தார்கள்.

யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்னும் நாலுபேரும் சிமேயின் குமாரராயிருந்தார்கள்.

யாகாத் தலைமையாயிருந்தான்; சீனா இரண்டாம் குமாரனாயிருந்தான்; எயூஷுக்கும் பெரீயாவுக்கும் அநேகம் குமாரர் இராதபடியினால், அவர்கள் பிதாக்களின் குடும்பத்தாரில் ஒரே வம்சமாக எண்ணப்பட்டார்கள்.

கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நாலுபேர்.

அம்ராமின் குமாரர், ஆரோன், மோசே என்பவர்கள்; ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்தத்திற்குப் பரிசுத்தமான ஸ்தலத்தை என்றைக்கும் பரிசுத்தமாய்க் காக்கிறதற்கும், என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக தூபங்காட்டுகிறதற்கும், அவருக்கு ஆராதனை செய்கிறதற்கும், அவர் நாமத்திலே ஆசீர்வாதம் கொடுக்கிறதற்கும் பிரித்துவைக்கப்பட்டார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் தாவீது கிழவனும் பூரண வயதுள்ளவனுமான போது, தன் குமாரனாகிய சாலொமோனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான். இஸ்ரவேலின் எல்லா பிரபுக்களையும், ஆசாரியரையும் லேவியரையும் கூடிவரும்படி செய்தான். அப்பொழுது முப்பது வயது முதல் அதற்கு மேற்பட்ட லேவியர் பெயர்பெயராக எண்ணப்பட்டார்கள்; தலைதலையாக எண்ணப்பட்ட அவர்களுடைய இலக்கம் முப்பத்தெண்ணாயிரம்.  அவர்களில் இருபத்து நாலாயிரம்  பேர் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களும், ஆறாயிரம் பேர் மணியக்காரருமாயிருக்க வேண்டுமென்றும், நாலாயிரம் பேர் வாசல்காக்கிறவர்களாயிருக்க வேண்டுமென்றும், துதி செய்கிறதற்கு தான் பண்ணுவித்த கீதவாத்தியங்களால் நாலாயிரம் பேர் கர்த்தரை துதிக்கிறவர்களாகயிருக்க வேண்டும் என்றும் தாவீது சொல்லி அவர்களை லேவியின் குமாரராகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களின் வகுப்புகளின் படி வகுத்தான்.  மேலும் கெர்சோனியரில் லாதானும்  சிமேயும் இருந்தார்கள்.  லாதானின் குமாரர் மூன்று பேரில் முந்தினவன் தலைமையாயிருந்தான். சிமேயின் குமாரர் மூன்று பேர், அவர்களில் லாதான் வம்சப் பிதாக்களில் தலைமையாயிருந்தார்கள். சீமேயின் குமாரரில் நாலு பேரில் யாகாத் தலைமையாயிருந்தான்; சீனா இரண்டாம் குமாரனாயிருந்தான்.எயூசுவுக்கும், பெரீயாவுக்கும் அநேகம் குமாரர் இராதபடியினால், அவர்கள் பிதாக்களின் குடும்பத்தாரில் ஒரே வம்சமாக எண்ணப்பட்டார்கள்.  கோகாத்தின் குமாரர், அம்ராம் இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நாலு பேர்.  அம்ராமின் குமாரர் மோசே, ஆரோன் என்பவர்; ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்தத்திற்குப் பரிசுத்தமான ஸ்தலத்தை என்றைக்கும் பரிசுத்தமாய் காக்கிறதற்கும், என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக தூபங்காட்டுகிறதற்கும், அவருக்கு ஆராதனை செய்கிறதற்கும், அவர் நாமத்திலே ஆசீர்வாதம் கொடுக்கிறதற்கும் பிரித்து வைக்கப்பட்டார்கள்.  

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களை தியானிக்கும் போது கர்த்தர் திருஷ்டாந்தத்துக்கென்று முன் குறித்து இஸ்ரவேல் சபை மோசே, ஆரோன் மற்றும் பன்னிரண்டு கோத்திரங்களை குறித்து சொல்கிறார். இதன் ஒரு கோத்திரமாகிய லேவி கோத்திரத்தில் மோசே ஆரோன் என்பவர்களை வைத்து தேவ சபையை கர்த்தர் நடத்தி வருகிறார்.  ஆனால் அதில் முதற்பலனாக கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தப்படுத்தி லேவியின் முந்தினவர்களை தலைமையாக்குகிறார்.  ஆனால் கிறிஸ்து உயிர்த்தெழுந்ததில் முதற்பேறானவராகையால், அவருக்கு பின்பு யாரும்  தலைவரல்ல என்பதும்; எல்லாவற்றிற்கும் தலை கிறிஸது என்பதனையும் நமக்கு விளக்கி காட்டுகிறார். அல்லாமலும் பரிசுத்த ஸ்தலத்தை எப்போதும் பரிசுத்தமாய் காக்கிறதற்கும், தேவனுக்கு முன்பாக ஜெபமாகிய தூபங்காட்டுதலுக்கும், கர்த்தருடைய நாமத்தினாலே  ஆசீர்வாதம் கொடுக்கிறதற்கும் கிறிஸ்து தான் அதனை செய்கிறவர் என்பதனை திருஷ்டாந்தப்படுத்தி மற்றவர்களை விட்டு அவர்கள்  பிரித்து வைக்கப்படுகிறார்கள்.மேலும் நம்முடைய உள்ளம் எப்போதும் துதி ஆராதனை செய்கிறதாக இருக்க வேண்டும்.   ஆதலால் நாம் எப்போதும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் நம்முடைய  ஆசீர்வாதத்தை  சுதந்தரித்துக் கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.