தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எரேமியா 18:11

இப்பொழுதும், நீ யூதாவின் மனுஷரையும் எருசலேமின் குடிகளையும் நோக்கி: இதோ, நான் உங்களுக்கு விரோதமாக ஒரு தீங்கை உருப்படுத்தி, உங்களுக்கு விரோதமாக ஒரு காரியத்தை யோசிக்கிறேன்; ஆகையால், உங்களில் ஒவ்வொருவரும் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பி, உங்கள் வழிகளையும், உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள் என்று கர்த்தர் உரைக்கிறாரென்று சொல்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் செய்த அக்கிரமத்தை கர்த்தர் மன்னிக்கும்படியாக கர்த்தரின் கையில் விழுவோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாட்களில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் தேவசபையின் ஜனங்களை தொகையிடக்கூடாது என்று தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்ன வென்றால் 

1 நாளாகமம் 21:9-14 

அப்பொழுது கர்த்தர், தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்துடனே பேசி,

நீ தாவீதினிடத்தில் போய்: மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்; அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி:

மூன்று வருஷத்துப் பஞ்சமோ? அல்லது உன் பகைஞரின் பட்டயம் உன்னைப் பின்தொடர நீ உன் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்தோடிப்போகச் செய்யும் மூன்றுமாதச் சங்காரமோ? அல்லது மூன்றுநாள் கர்த்தருடைய தூதன் இஸ்ரவேலுடைய எல்லையெங்கும் சங்காரம் உண்டாகும்படி தேசத்தில் நிற்கும் கர்த்தருடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ? இவைகளில் ஒன்றைத் தெரிந்துகொள் என்று கர்த்தர் உரைக்கிறார். இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறுஉத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை யோசித்துப்பாரும் என்றான்.

அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நான் கர்த்தருடைய கையிலே விழுவேனாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.

ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் இஸ்ரவேலில் எழுபதினாயிரம்பேர் மடிந்தார்கள்.

மேற்கூறிய  வசனங்களில் தாவீது இஸ்ரவேலை தொகையிட சொன்ன காரியம், தான் செய்த  அக்கிரமம் என்று உணர்ந்துக்கொண்டதால்; அவன் தேவனை நோக்கி: நான் பாவஞ்செய்தேன்; இப்போதும் என் அக்கிரமத்தை நீக்கிவிடும்; வெகு புத்தியீனமாய் செய்தேன் என்றான்.  அப்பொழுது கர்த்தர், தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்துடனே பேசி, சொல்ல சொன்ன காரியம் என்னவென்றால்; மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தை தெரிந்துக் கொள்; அதை நான் உனக்கு செய்வேன் என்றுகர்த்தர் உரைக்கிறார் என்று சொல்ல சொல்கிறார்.  காத் என்ற தீர்க்கதரிசியும் தாவீதினிடத்தில் வந்து அவனை நோக்கி மூன்று வருஷத்து பஞ்சமோ? அல்லது உன் பகைஞரின் பட்டயம் பின் தொடர நீ உன் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்தோடி போகச் செய்ய மூன்று மாத சங்காரமோ? அல்லது மூன்று நாள் கர்த்தருடைய தூதன் இஸ்ரவேலுடய எல்லையெங்கும் சங்காரம் உண்டாகும்படி தேசத்தில் நிற்கும் கர்த்தருடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ? இவைகளில் ஒன்றை தெரிந்துக்கொள் என்று கர்த்தர் உரைக்கிறார்.  இப்போதும் என்னை அனுப்பினவருக்கு என்ன மறு உத்தரவு கொண்டு போக வேண்டும் என்பதை யோசித்து பாரும் என்றான்.    அப்போது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கண்ணில் அகப்பட்டு விட்டேன்; இப்பொழுது நான் கர்த்தருடைய கையில் விழுவேனாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது,  மனுஷர் கையில் விழாதிருப்பேனாக என்றதால் கர்த்தர் இஸ்ரவேலிலே கொள்ளை நோயை வரபண்ணினார் ; அதினால் இஸ்ரவேலில் எழுபதினாயிரம் பேர் மடிந்தார்கள். 

பிரியமானவர்களே,  மேற்கூறப்பட்ட கர்த்தரின் வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது, எவ்வளவோ தப்பிதங்கள் நம் வாழ்க்கையில் செய்திருக்கிறோம் என்பதனை சிந்திக்க வேண்டும்.  இந்நாட்களிலும் அவர் சொன்ன வார்த்தைகளில்  நம்முடைய தேவன் மாறாதவர். மேலும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.  ஆனால் நம்மை அழைத்த அழைப்பில் அவர் உண்மையுள்ளவர்; அவர் அப்படியே செய்வார் என்று 1 தெசலோனிக்கேயர் 5:24 ல் கர்த்தரின் வார்த்தை  சொல்கிறது.  ஆனால் அவருடைய அழைப்பிற்கேற்ற பிரகாரம் நம்முடைய வாழ்வின் சாட்சி இல்லாவிட்டால் அவர் மனம் மாறுகிறார்.  இதனைக்குறித்து கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்கு சொல்வது 

எரேமியா 18:6-10  

இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.

பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதமாகவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்னமாத்திரத்தில்,

நான் விரோதமாய்ப் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்.

கட்டுவேன், நாட்டுவேன் என்றும், ஒரு ஜாதியையும் ஒரு ராஜ்யத்தையும் குறித்து நான் சொல்லுகிறதுமுண்டு.

அவர்கள் என் சத்தத்தைக் கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், நானும் அவர்களுக்கு அருள்செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு மனம் மாறுவேன்.

மேற்கூறிய கர்த்தரின் வசனங்கள் நம்முடைய கீழ்படியாமையை சீர்திருத்துகிறதாயிருக்கிறது.  அல்லாமலும் சபை ஜனங்களை தொகையிடுதல் கர்த்தருக்கு அருவருப்பானது. நம்மில் அநேகர் சபையில் கடந்து வருகிறவர்களின் எண்ணிக்கையை தொகையிடுகிறவர்களாக காணப்படுகிறோம்.  அல்லது சபையின் ஜனங்களின் எண்ணிக்கையை நாம் கணக்கு கேட்கிறோம். இப்படியாக நடத்தப்படுகிற சபைகளில் நியாயதீர்ப்பு நிச்சயம் உண்டு என்பதை அறிந்தும் உணராமல் மீண்டும் அதே அக்கிரமத்தை செய்ய துணிகிறோம். இப்படிபட்ட காரியங்கள் உள்ளான கண்கள் திறக்கப்படாமல் இருக்கிறவர்களுக்கு அது மறைவாயிருக்கிறது.  எப்படியென்றால்  மூன்று காரியம் அப்படிபட்டவர்களின் வாழ்வில் வைக்கப்படுகிறது. அவற்றை நாம் கருத்தில் கொண்டால் பஞ்சம், கொள்ளை நோய், சங்காரம்; இவைகள் இந்நாட்களில் (குமாரனுடைய நாட்களில்) ஆத்துமாவில் சம்பவிக்கிறது.   ஏனென்றால் சபை என்பது கிறிஸ்து; அவரைக்குறித்து  

ஏசாயா 60:22 

சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.

இந்த வார்த்தைகளினால் கிறிஸ்து மூலம் நூறத்தைனயாய் ஜனங்களை தேவன் வர்த்திக்கப்பண்ணுகிறவர்.  ஆதலால் நம்முடைய எண்ணிக்கையின் கணக்கில் அடங்கினவர் தேவன் அல்ல.  ஆதலால் நாம் செய்த அக்கிரமத்தை கர்த்தர்  நீக்கும்படியாக கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.  நம்முடைய ஒப்புக்கொடுத்தலின் பிரகாரம் நம் குடும்பமாகிய இஸ்ரவேலருக்கிடையில் இருக்கிற வாதை நிறுத்தப்படும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.