தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 53:12

அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் சபையின் ஜனங்களை தொகையிடக்கூடாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமாவின் இராட்சத கிரியைகளை அழிக்கவேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 21:1-2

சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது.

அப்படியே தாவீது யோவாபையும், ஜனத்தின் சேர்வைக்காரரையும் நோக்கி: நீங்கள் போய், பெயெர்செபாதொடங்கித் தாண்மட்டும் இருக்கிற இஸ்ரவேலை எண்ணி, அவர்கள் இலக்கத்தை நான் அறியும்படிக்கு, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்.

மேற்கூறப்பட்டிருக்கிற வாக்கியங்கள் என்னவென்றால், சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி இஸ்ரவேலை தொகையிடுகிறதற்கு தாவீதை ஏவி விட்டது.  அப்படியே தாவீது யோவாபையும், ஜனத்தின் சேர்வைக்காரரையும் நோக்கி சொன்னது: நீங்கள் போய் பெயர்செபா தொடங்கித் தாண் மட்டும் இருக்கிற இஸ்ரவேலை எண்ணி, அவர்கள் இலக்கத்தை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்று சொன்னது யோவாபுக்கு விருப்பமில்லாதபடியினால் 

1 நாளாகமம் 21:3 

அப்பொழுது யோவாப்: கர்த்தருடைய ஜனங்கள் இப்போது இருக்கிறதைப்பார்க்கிலும் நூறத்தனையாய் அவர் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் ராஜாவாகிய என் ஆண்டவனே, அவர்களெல்லாரும் என் ஆண்டவனின் சேவகரல்லவா? என் ஆண்டவன் இதை விசாரிப்பானேன்? இஸ்ரவேலின்மேல் குற்றமுண்டாக இது நடக்கவேண்டியது என்ன என்றான்.

மேற்கூறப்பட்டிருக்கிற வார்த்தைகளை யோவாப் சொல்லியும், ராஜாவின் வார்த்தை மேலிட்டபடியினால் யோவாப் புறப்பட்டு இஸ்ரவேல் எங்கும் சுற்றி திரிந்து எருசலேமுக்கு வந்து ஜனத்தை இலக்கம் பார்த்து, தொகையை தாவீதினிடத்தில் கொடுத்தான்; இஸ்ரவேலிலெல்லாம் பட்டயம் உருவத்தக்கவர் பதினொருலட்சம் பேரும், யூதாவில் பட்டயம் உருவ தக்கவர் நாலுலட்சத்து எழுபதினாயிரம் பேரும் இருந்தார்கள்.  ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாயிருந்தபடியினால் லேவி, பென்யமீன் கோத்திரத்தில் உள்ளவர்களை அந்த இலக்கத்திற்குட்படுத்த அவன் எண்ணாமற் போனான்.  ஆனால் தாவீது இலக்கம் பார்க்க சொன்னது  தேவனுடைய பார்வைக்கு ஆகாததாய் போனபடியினால் கர்த்தர் இஸ்ரவேலை வாதித்தார்.  அப்போது தாவீது தேவனை நோக்கி: நான் இந்த காரியத்தை செய்ததினால் மிகவும் பாவஞ்செய்தேன்; இப்போதும் உமது அடியேனுடைய அக்கிரமத்தை நீக்கிவிடும்; வெகு புத்தியீனமாய் செய்தேன் என்றான். 

பிரியபானவர்களே மேற்கூறப்பட்ட கர்த்தரின் வார்த்தூகளை  நாம் தியானிக்கும் போது சாத்தான் இஸ்ரவேல் சபையாகிய மணவாட்டி சபையை வீழ்த்தும்படியாக தாவீதின் மனதில் ஏவுகிறான் என்றால்; நாம் எவ்வளவு ஜாக்கிரதையோடு காணப்படவேண்டும்.  ஏனென்றால் தாவீதை கர்த்தர் தைலக்கொம்பால் அபிஷேகித்த நாள் முதற்கொண்டு கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின் மேல் இறங்கியிருந்தார்.  மேலும் தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனை காப்பாற்றுகிறார். அப்படியிருந்தும் அவன் வீழ்ந்து போகிறான்; என்னவென்றால் இஸ்ரவேல் சபையின் ஜனங்களை தொகையிடுவதற்கு சாத்தான் தாவீதின் உள்ளத்தை ஏவிவிட்டது; ஆனால் யோவாபுக்கு அந்த காரியம் அருவருப்பாகயிருந்தது.  ஆனால்  ராஜாவின் வார்த்தை மேலிட்டபடியினால் அவன் தொகையிடுகிறான். ஆகையால் அவன் லேவி, பென்யமீன் கோத்திரத்துள்ளானவர்களை அவன் எண்ணவில்லை.   தாவீது தேவனுடைய பார்வைக்கு ஆகாத காரியம் செய்தபடியினால் கர்த்தர் இஸ்ரவேலை வாதிக்கிறார்.  அவ்விதமாக ஜனங்கள் வாதிக்கபட்டதினால் அவன் உணர்ந்து தான் செய்த அக்கிரமத்தை நினைத்து கர்த்தரிடத்தில் பாவ அறிக்கைச் செய்து, தன் புத்தியீனத்தை உணர்ந்துக்கொள்கிறான்.  இவ்விதமான அக்கிரமத்திலிருந்து நம்மை இரட்சிக்கும்படியாக கர்த்தராகிய இயேசு நமக்காக நொறுக்கப்பட்டார் என்பதை ஏசாயா 53:5-ல் வாசிக்க முடிகிறது.  அவர் நமக்காக நொறுக்கப்பட்டதினால் நமக்காக சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்  ஆதலால் நம் உள்ளத்தில் எழும்புகிற எந்த எண்ணங்களும் கர்த்தருக்குரியவைகளாக இருந்தால் சாத்தான் நம்மில் பொல்லாத களைகளை விதைக்கமாட்டான்.  ஆதலால் நம்மில் எழும்புகிற எண்ணங்கள் எல்லாம் தேவனுக்கு சித்தமா? என்று நம்மை நாமே பலமுறை சிந்தித்து எல்லாவற்றையும் கர்த்தரின் கையில் ஒப்படைக்க வேண்டும்.  இவற்றிலிருந்து தெரிந்துக்கொள்ள வேண்டிய காரியம் என்னவென்றால் கர்த்தருக்காக ஊழியம செய்கிறவர்களுடைய அக்கிரம செயல்களால் சபை ஜனங்களை முழுமையும் கர்த்தர் வாதிக்கிறார்.  மேலும் சபைகூடி வருகிற இஸ்ரவேலர்கள் கர்த்தரின் பார்வைக்குள் இருப்பார்களேயல்லாமல் இதனைக்குறிதது நாம் தொகையிடுவோமானால் அது கர்த்தரின் பார்வைக்கு அருவருப்பானது.  ஆதலால் நாம் கர்த்தருக்கு விரோதமான அக்கிரம செயல்கள் செய்யாமல் ஜாக்கிரதையோடு நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.