தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1 தெசலோனிக்கேயர் 5:19,20                

ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.

தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமாவின் இராட்சத கிரியைகளை அழிக்கவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் கிரீடத்தில் பதித்த முத்துக்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 20:4-8 

அதற்குப்பின்பு கேசேரிலே பெலிஸ்தரோடு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது ஊசாத்தியனாகிய சிபெக்காய் இராட்சத புத்திரரில் ஒருவனான சிப்பாயி என்பவனைக் கொன்றான்; அதினால் அவர்கள் வசப்படுத்தப்பட்டார்கள்.

திரும்பப் பெலிஸ்தரோடு யுத்தம் உண்டாகிறபோது, யாவீரின் குமாரனாகிய எல்க்கானான் காத்தூரானாகிய கோலியாத்தின் சகோதரனான லாகேமியைக் கொன்றான்; அவன் ஈட்டித் தாங்கு நெய்கிறவர்களின் படைமரம் அவ்வளவு பெரிதாயிருந்தது.

மறுபடியும் ஒரு யுத்தம் காத்திலே நடந்தபோது, அங்கே நெட்டையனான ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு அவ்வாறு விரலாக இருபத்துநாலு விரல்கள் இருந்தது, அவனும் இராட்சத சந்ததியாயிருந்து,

இஸ்ரவேலை நிந்தித்தான்; தாவீதின் சகோதரனாகிய சிமேயாவின் குமாரன் யோனத்தான் அவனைக் கொன்றான்.

காத்தூரிலிருந்த இராட்சதனுக்குப் பிறந்த இவர்கள் தாவீதின் கையினாலும் அவன் சேவகரின் கையினாலும் மடிந்தார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் தாவீது எருசலேமுக்குள் வந்த பின்பு கேசேரிலே பெலிஸ்தரோடு யுத்தம் உண்டாயிற்று .  அப்பொழுது ஊசாத்தியனாகிய சிபெக்காய் இராட்சத புத்திரரில் ஒருவனான சிப்பாயி என்பவனை கொன்றான். ; அதினால் அவர்கள் வசப்படுத்தப்பட்டார்கள்.  திரும்ப பெலிஸ்தரோடு யுத்தம் உண்டாகிற போது யாவீரின் குமாரனாகிய எல்க்கானா காத்தூரானாகிய கோலியாத்தின் சகோதரரான லாகேமியைக் கொன்றான்; அவன் ஈட்டி தாங்கு நெய்கிறவர்களின் படைமரம் அளவு பெரிதாயிருந்தது.  மறுபடியும் யுத்தம் காத்தூரிலே நடந்த போது , அங்கே நெட்டையனான ஒரு மனுஷனுக்கு அவ்வாறு விரலாக இருபத்தி நாலு விரல்கள் இருந்தது; அவனும் இராட்சத சந்ததியாயிருந்தான்.  அவன் இஸ்ரவேலை நிந்தித்தான்; தாவீதின் சகோதரனாகிய சீமேயின் குமாரன் யோனத்தான் அவனை கொன்றான்.  காத்தூரிலிருந்த இராட்சதனுக்கு பிறந்த இவர்கள் தாவீதின் கையினாலும், அவன் சேவகரின் கையினாலும் மடிந்தார்கள். 

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களில் இஸ்ரவேலர் பெலிஸ்தரோடு மூன்று முறை யுத்தம் உண்டாகிறதை வாசிக்க முடிகிறது. இந்த மூன்று முறையும் இராட்சதரோடு யுத்தம் செய்யவேண்டியதாயிருந்தது.  இவை என்னவென்றால் நம் உள்ளத்தில் எழும்புகிற இராட்சத கிரியைகள்; இவைகளை சபையாக கிறிஸ்துவின் வல்லமையால் மேற்க்கொள்ள வேண்டும் என்பதனை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார். இதனைக்குறித்து தான் இஸ்ரவேல் புத்திரர்கள் விசுவாச யாத்திரையில்  பிரவேசித்த தேசத்திலே இராட்சத பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம் என்றார்கள்.  அவர்களை கண்ட மாத்திரத்தில் இஸ்ரவேல் புத்திரர் கூக்குரலிட்டு புலம்பினார்கள்; ஜனங்கள் எல்லாரும் அன்று இராமுழுவதும் அழுதுக் கொண்டிருந்தார்கள். அந்த தேசத்தை சுதந்தரிக்க முடியாது என்று துர்செய்தி பரப்பினார்கள்.  ஆனால் யோசுவாவும், காலேபும்  இதனை எளிதில் சுதந்தரிக்க முடியும் என்றார்கள்.  ஆதலால் பிரியமானவர்களே நம்முடைய விசுவாச யாத்திரையில் உள்ளத்தில் பல இராட்சத கிரியைகள் எழும்பும் என்பதனை உணர்ந்துக்கொண்டு, அதோடு வேத வசனத்தால் போராடி வெற்றிப்பெற்றவர்களாக இருக்க வேண்டும்.  மேலும் நம்முடைய மனதில் எழும்புகிற எல்லா துர்கிரியைகளாகிய, சண்டைபண்ணுதல், கோபதாபங்கள்,  வைராக்கியங்கள், பொறாமைகள், பெருமைகள், வீம்புகள், கொலைகள், மதுபான வெறிகளாகிய  நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் எழும்புகிற பலவிதமான தவறான கருத்துக்கள்; இப்படிப்பட்டவைகள் நம்மை கிறிஸ்துவின் உண்மையான வழியிலிருந்து கீழே விழ தள்ளும்.  ஆதலால் நாம் இதனை எளிதில் கர்த்தரால் வெற்றிபெறலாம் என்று மனதில் நினைத்தாலே சாத்தானுடைய வலையாகிய கண்ணியிலிருந்து தப்புவிக்கப்படுகிறோம்.  அப்படி நாம் தப்புவிக்கப்பட்டால் கர்த்தர் மோசேக்கு கொடுத்த வாக்குதத்தம் யோசுவாவுக்கும் கொடுக்கிறார்; மோசே மூலம் செய்யாத பெரியகாரியங்களை யோசுவா மூலம் செய்கிறார்.  மேலும் காலேபுக்கு கர்த்தர் சொன்ன காரியம் அவனுடைய எண்பத்தைந்தாவது வயதில் நிறைவேறுதலோடு பெற்றுக்கொள்கிறான்.  இதன் காரணம் என்னவென்றால் கர்த்தரின் சத்தம் கேட்ட அவன் இடைபட்ட வருஷங்களிலெல்லாம் பொறுமையோடு காத்திருந்தான் என்பதும், அவனோடு வந்த சகோதரர் ஜனத்தின் இருதயத்தை கரையப்பண்ணினாலும், அவன் அதற்கு பயந்து விழுந்து போகாமல் உத்தமமாய்  கர்த்தரை பின்பற்றிக்கொண்ட படியால் கர்த்தர் அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தை, அவனுக்கும், அவன் பிள்ளைகளுக்கும் என்றன்றைக்கும் சுதந்தரமாயிருக்க கடவது என்கிறார்; அல்லாமலும் அவனுடைய நாற்பதுதாவது வயதில் கேட்ட கர்த்தரின் சத்தத்தை, மனுஷருடைய சத்தம் என்று எண்ணாமல் தேவ சத்தம்தான் என்று எண்ணினபடியால் அவனுடைய எண்பத்தைந்தாவது வயதிலும் கர்த்தரின் பெலன் குறையாமல் காக்கப்பட்டு, மலைநாட்டை எனக்கு தாரும் என்று கேட்டுப்பெற்றுக்கொள்கிறான்.  அங்கு ஏனாக்கியராகிய இராட்சதர் இருந்தாலும், அங்கே பெரியப்பட்டணங்களும் உண்டென்று நீர் கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால்  கர்த்தர் சொன்னபடி அவர்களை துரத்திவிடுவேன் என்றான்.  அதனை கேட்ட யோசுவா காலேபை ஆசீர்வதித்து; எபிரோனை அவனுக்கு சுதந்தரமாகக்கொடுத்தான்.  முதலில் நம் உள்ளத்தின் செயல்களை சீர்திருத்தும் போது, கர்த்தர் தம்முடைய வேலையை அவருக்கு சித்தமான இடத்தில் செய்து, நம்மை அவருக்காக சுதந்தரமாக்குகிறார்.  அப்போது தான் நம்முடைய வாழ்வில் யுத்தம் ஓய்ந்து போகும்; நம்முடைய ஆத்துமாவுக்கு அமைதியுண்டாகும்.  ஆதலால் இராட்சத கிரியைகளை நம்மை விட்டு மாற்றி விசுவாசத்தில் உறுதிப்பட்டால் கர்த்தர் என்றன்றைக்கும் நம்மை கைவிடுவதில்லை.  இப்படியாக நம் ஒவ்வொருவரும் நம்மை கர்த்தரின் சமூகத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.