தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சகரியா 9:16

அந்நாளில் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஜனமான மந்தையாகிய அவர்களை இரட்சிப்பார்; அவர்கள் அவருடைய தேசத்தில் ஏற்றப்பட்ட கொடிகளின் கிரீடத்தில் பதிந்திருப்பார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் கிரீடத்தில் பதித்த முத்துக்கள்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளர ஜாக்கிர தையோடு காணப்பட வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 20:1- 3

மறுவருஷம், ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படும் காலம் வந்தபோது, யோவாப் இராணுவபலத்தைக் கூட்டிக்கொண்டுபோய், அம்மோன் புத்திரரின் தேசத்தைப் பாழ்க்கடித்து ரப்பாவுக்குவந்து அதை முற்றிக்கைபோட்டான்; தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்; யோவாப் ரப்பாவை அடித்துச் சங்கரித்தான்.

தாவீது வந்து, அவர்கள் ராஜாவுடைய தலையின்மேல் இருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டான்; அது ஒரு தாலந்து பொன்நிறையும் ரத்தினங்கள் பதித்ததுமாயிருந்தது; அது தாவீதின் தலையில் வைக்கப்பட்டது; பட்டணத்திலிருந்து ஏராளமான கொள்ளையையும் கொண்டுபோனான்.

பின்பு அதிலிருந்த ஜனங்களை அவன் வெளியே கொண்டுபோய், அவர்களை வாள்களுக்கும், இருப்புப்பாரைகளுக்கும், கோடரிகளுக்கும் உட்படுத்தி; இப்படி அம்மோன் புத்திரரின் பட்டணங்களுக்கெல்லாம் தாவீது செய்து, எல்லா ஜனத்தோடுங்கூட எருசலேமுக்குத் திரும்பினான்.

மேற்கூறிய வசனங்களில் நாம் தியானிக்கும் போது அம்மோனியரும், சீரியரும் இஸ்ரவேலருக்கு முன்பாக முறியடிக்கப்பட்டதை சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசரின் சேவகர் கண்டபோது அவர்கள் தாவீதோடே சமாதானம்பண்ணி அவனை சேவித்ததுமட்டுமல்ல; அம்மோனியருக்கு உதவி செய்ய சீரியருக்கு மனதில்லாதிருந்தது .  அதன் பின்பு மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்திற்கு புறப்படும் காலம் வந்த போது யோவாப் தங்களுடைய இராணுவப்பலத்தைக் கூட்டிக்கொண்டு போய், அம்மோன் புத்திரரின் தேசத்தைப் பாழ்க்கடித்து ரப்பாவுக்கு வந்து, அதை முற்றிக்கைப்போட்டான்; தாவீதோ எருசலேமில் இருந்து விட்டான்; யோவாப் ரப்பாவை சங்கரித்தான்.  பின்பு தாவீது வந்து, அவர்கள் ராஜாவுடைய தலையின் மேல் இருந்த கிரீடத்தை எடுத்துக் கொண்டான்,; அது ஒரு தாலந்து பொன் நிறையும் ரத்தினங்கள் பதித்ததுமாயிருந்தது; அது தலையின் மேல் வைக்கப்பட்டது. பட்டணத்தில் இருந்து ஏராளமான கொள்ளையையும் கொண்டுப் போனான்.  பின்பு அதிலிருந்த ஜனங்களை அவன் வெளியே கொண்டு போய், அவர்களை வாள்களுக்கும், இருப்பப்பாரைகளுக்கும், கோடரிகளுக்கும் உட்படுத்தி, இப்படியெல்லாம் அம்மோன்புத்திரரின் பட்டணங்களுக்கெல்லாம் தாவீது செய்து எல்லா ஜனத்தோடுக்கூட எருசலேமுக்கு திரும்பினான்.

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டவைகளின் கருத்துக்கள் என்னவென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொரு உள்ளத்திலும் செய்கிற கிரியையாவது; ராஜாக்கள் மறுஜாதிகளாகிய ஜனங்களை ஆண்டுக்கொண்டிருக்க, அந்த ராஜாக்களை கர்த்தர் சங்கரித்து, அவர்கள் கையாண்டு வந்த பொருட்களை கொள்ளையாக்கி, அந்த கொள்ளையோடுகூட, அந்த  ராஜாவின் கிரீடம் கிறிஸ்துவின் தலையில் வைக்கப்படுவது எப்படியென்றால், புற ஜாதிகளை தம்முடைய பரிசுத்த ரத்தத்திற்கும், பரிசுத்த ஆவிக்கும், பரிசுத்த அபிஷேகத்திற்கும், பரிசுத்தமான வசனங்கள் வார்த்தைகளுக்கும், அவருடைய பரிசுத்த மகிமைக்கும் உட்ப்படுத்திக்கொண்டு அந்த ஜனங்களோடுகூட எருசலேமாகிய கிறிஸ்துவின் சரீரத்திற்குள் வந்தடைய செய்கிறார்.  இவைகள் தான் கிறிஸ்துவின் தலையின் மேல் சூட்டப்பட்ட பொன் நிறையும், ரத்தினங்கள் பதித்ததுமான கிரீடம்.  இவைகள் நம் உள்ளத்தின் செயல்களாக இருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.