தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 53:10
கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரிடத்திலிருந்து நீங்காத நித்திய கிருபையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் பரிசுத்த ஆவியில் நிறைந்தவர்களாகி, மிகுந்த சத்தத்தோடு கர்த்தருக்கு ஆராதனை செய்து, அவரிடத்திலிருந்து ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 சாமுவேல் 7:1-7
கர்த்தர் ராஜாவைச் சுற்றிலும் இருந்த அவனுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி, இளைப்பாறப்பண்ணினபோது, அவன் தன் வீட்டிலே வாசமாயிருக்கையில்,
ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், கேதுருமரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான்.
அப்பொழுது நாத்தான் ராஜாவை நோக்கி: நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும்; கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே என்றான்.
அன்று ராத்திரியிலே கர்த்தருடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:
நீ போய் என் தாசனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் வாசமாயிருக்கத்தக்க ஆலயத்தை நீ எனக்குக் கட்டுவாயோ?
நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும், நான் ஒரு ஆலயத்திலே வாசம்பண்ணாமல், கூடாரத்திலும் வாசஸ்தலத்திலும் உலாவினேன்.
நான் இஸ்ரவேலாகிய என் ஜனத்தை மேய்க்கும்படி கட்டளையிட்ட இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரத்தையாவது நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுருமரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாதிருக்கிறது என்ன என்று நான் இஸ்ரவேல் புத்திரருக்குள் உலாவி வந்த எவ்விடத்திலாவது யாதொரு வார்த்தையைச் சொன்னதுண்டோ?
மேற்கூறப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது தாவீது ராஜா போட்ட கூடாரத்திற்குள் கர்த்தருடைய பெட்டியை, அதற்குரிய ஸ்தானத்திலே வைத்து கர்த்தரின் சந்நிதியில் அவருக்கு சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தின பின்பு , கர்த்தர் தாவீதின் எல்லா சத்துருக்களின் கையிலிருந்து அவனை நீங்கலாக்கி இளைப்பாறபண்ணி, அவனுடைய வீட்டிலே வாசமாயிருக்கும் படி செய்கிறார். அவ்விதம் இளைப்பாறி வீட்டில் வாசமாயிருக்கையில், தாவீது ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், நான் கேதுரு மரங்களால் கட்டப்பட்ட வீட்டில் வாசமாயிருக்கையில், தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான். அப்பொழுது நாத்தான் ராஜாவிடம் நீர் போய் உமக்கு விருப்பமானபடியெல்லாம் செய்யும்; கர்த்தர் உம்மோடுகூட இருக்கிறாரே என்றான். பின்பு அன்று ராத்திரியிலே கர்த்தருடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி; நீ போய் என் தாசனாகிய தாவீதை நோக்கி: நான் வாசமாயிருக்கதக்க ஆலயத்தை நீ எனக்கு கட்டுவாயோ? என்று கர்த்தர் சொல்கிறார் என்றும் நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்தினின்று புறப்பட பண்ணின நாளிலிருந்து இன்றைக்கு வரைக்கும், நான் ஒரு ஆலயத்திலே வாசம் பண்ணாமல், கூடாரத்திலும், வாசஸ்தலத்திலும் உலாவினேன். நான் இஸ்ரவேலராகிய என் ஜனத்தை மேய்க்கும்படி கட்டளையிட்ட எந்த ஒரு கோத்திரத்திலேயாவது நீங்கள் எனக்கு கேதுரு மரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தை கட்டாதிருக்கிறது என்ன என்று நான் இஸ்ரவேல் புத்திரருக்குள் நான் உலாவி வந்த எவ்விடத்திலாவது யாதொரு வார்த்தை சொன்னது இல்லை என்பதையும், அல்லாமலும் கர்த்தர் சொல்ல சொன்ன வார்த்தையாவது
2 சாமுவேல் 7:8-17
இப்போதும் நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என் ஜனங்களுக்கு அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையைவிட்டு எடுத்து,
நீ போன எவ்விடத்திலும் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்.
நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தை ஏற்படுத்தி, அவர்கள் தங்கள் ஸ்தானத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்போலும், நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்வரையில் நடந்ததுபோலும், நியாயக்கேட்டின் மக்களால் இனிச் சிறுமைப்படாமலும் இருக்கும்படி அவர்களை நாட்டினேன்.
உன்னுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் உன்னை நீங்கலாக்கி, இளைப்பாறவும் பண்ணினேன்; இப்போதும் கர்த்தர் உனக்கு வீட்டை உண்டுபண்ணுவார் என்பதைக் கர்த்தர் உனக்கு அறிவிக்கிறார்.
உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைபண்ணும்போது, நான் உனக்குப்பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.
அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.
நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்.
உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடத்திலிருந்து என் கிருபையை விலக்கினதுபோல அவனைவிட்டு விலக்கமாட்டேன்.
உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்கிறார் என்று சொல்லச்சொன்னார்.
நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும், இந்த எல்லாத் தரிசனத்தின்படியும், தாவீதுக்குச் சொன்னான்.
மேற்க்கூறபட்ட வசனங்கள் என்னவெனில் கர்த்தர் தாவீதை இஸ்ரவேல் என்னும் ஜனத்திற்கு அதிபதியாயிருக்கும் படி, ஆடுகளின் பின்னே நடந்த தாவீதை ஆட்டு மந்தையை விட்டு எடுத்து, அவனுக்கு விரோதமாக இருந்த எல்லா சத்துருக்களின் கையினின்று விடுதலையாக்கி பூமியிலுள்ள பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த பெரிய நாமத்தை அவனுக்கு கொடுத்ததையும், இஸ்ரவேலாகிய கர்த்தருடைய ஜனம் இனி அலையாமல், தங்கள் ஸ்தானத்திலே குடியிருக்கவும், என் ஜனமாகிய இஸ்ரவேலின் மேல் நியாயாதிபதிகளை க ட்டளையிட்ட நாள் வரையில் நடந்ததுபோலும், நியாயகேட்டின் மக்களால் இனி சிறுமைப்படுத்தபடாமலும் இருக்கும்படியாக அவர்களை நாட்டினேன். மேலும் எல்லா சத்துருக்களின் கையிலிருந்து நீங்கலாக்கி இளைப்பாற பண்ணினேன்; இப்போதும் கர்த்தர் உனக்கு வீட்டை உண்டு பண்ணுவார் என்பதையும், உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரை பண்ணுகிற, நான் உனக்கு உன் கர்ப்பப்பிறப்பாகிய சந்ததியை எழும்ப பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன். அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தை கட்டுவான்; அவன் ராஜ்யத்தின் சிங்காசனத்தை என்றைன்றைக்கும் நிலைக்கப்பண்ணுவான். அப்போது நான் அவனுக்கு பிதாவாயிருப்பேன், அவன் எனக்கு குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால் நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும், மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன். உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடத்திலிருந்து என் கிருபையை விலக்கினது போல அவனை விட்டு விலக்கமாட்டேன். உன் வீடும் உன் ராஜ்யமும் என்றன்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரபட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றன்றைக்கும் நிலைப்பட்டிருக்கும் என்று சொல்ல சொன்னார். நாத்தான் இந்த எல்லா வார்த்தையின் படியும், இந்த எல்லா தரிசனத்தின் படியும் தாவீதுக்கு சொன்னான்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகளை நாம் கவனத்தோடு தியானிக்க வேண்டும்; என்னவெனில் நம்முடைய வாழ்வில் தாவீதுக்கு வந்தது போல் அநேக போராட்டங்கள் வரும். ஆனல் அதினின்று எல்லாம் வெற்றிப்பெற வேண்டுமானால் கர்த்தரால் நாம் அபிஷேகிக்கப்பட வேண்டும். அவ்விதம் நாம் சத்துருக்களோடு எதிர்த்து யுத்தம் செய்யும் போது, நாம் அல்ல, நமக்காக யுத்தம் செய்கிறவர் நம்முடைய கர்த்தர்; ஆனால் கர்த்தரின் வசனத்தினால் நம்முடைய உள்ளம் நிறைந்திருக்க வேண்டும். மேலும் நாம் நம்மை முழுமையாக கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கும் போது, கர்த்தர் நம்மை சத்துருவின் கையிலிருந்து நீங்கலாக்கி விடுவித்து, நம்முடைய அலைச்சல்களை மாற்றி வீட்டில் இளைப்பாறப்பண்ணுவார். அவ்விதம் இளைப்பாறுதல் அடையும் போது, அந்த வாழ்க்கை போதும் என்று இருந்து விடாதபடி கர்த்தருக்கு நம்முடைய உள்ளத்தில் எல்லாவற்றிலும் முக்கியமான இடத்தை கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும். அப்போது நியாயக்கேட்டின் மக்களால் நாம் சிறுமைப்படாமல் இருக்கும்படியாக கர்த்தர் நம்மை அவருடைய சமுகத்தில் நாட்டுகிறார். பின்பு நம்முடைய உள்ளம் அவருடைய தேவனுடைய வீடாக காணப்படும்; நித்திய வீடு (கிறிஸ்து) அதனை திருஷ்டாந்தபடுத்தியே கர்த்தர் தாவீதுக்கு வீட்டை உண்டுபண்ணுவார் என்று நாத்தான் தீர்க்கதரிசியோடே சொல்லி அனுப்புகிறார். மேலும் நம்முடைய ஆத்துமாவை ஆலயமாக எழுப்பும்படியாக கர்த்தர் திருஷ்டாந்தத்தோடு விளக்கி சொல்வது என்னவென்றால்; நான் உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன். அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தை கட்டுவான்;அவன் ராஜ்யத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன் என்கிறது என்னவென்றால் நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவின் ராஜ்யமாகவும்; அதில் உள்ள ஜீவன் கிறிஸ்துவாகவும் தேவன் நமக்கு தந்து, அவர் நம்முடைய பிதாவாகவும், நாம் அவருடைய குமாரனாகவும் வெளிப்படுத்துகிறார். நாம் அக்கிரமம் செய்தால், மனுஷர்களாலும், இரட்சிக்கப்பட்டவர்களாலும் நெருக்கம் தந்து தண்டிப்பேன் என்று சொல்கிறார். ஆனால் கிறிஸ்துவின் கிருபை ஒரு போதும் நீங்காத கிருபை என்றும், அவருடைய வீடும், ராஜ்யமும், எப்போதும் ஸ்திரப்பட்டிருக்கும், அவருடைய ராஜாசானமும் என்றைக்கும் நிலைப்பெற்றிருக்கும் என்கிறார். ஆதலால் நாம் ஒவ்வொருவரும் நீங்காத நித்திய கிருபையைப் பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.