யாக்கோபை -வேறு பிரித்தல் :

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Jun 08, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம் 22:23

 கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள், யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள், இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை  உங்களனைவரோடுங் கூட இருப்பாதாக. ஆமென். அல்லேலுயா. 

 யாக்கோபை -வேறு பிரித்தல் :

 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,  கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் யாக்கோபும்,  அவன் மனைவிகளும், அவன்  பிள்ளைகளும்,  அவன் மந்தைகளும் எல்லாம் லாபானுடைய வீட்டை விட்டு புறப்பட்டு தன் சொந்த  ஜனத்தாரிடத்திருக்கும்,  தன் பிதாக்களின் தேசத்திற்கும் பிரயாணம் புறப்பட்டதை  பார்க்கிறோம். யாக்கோபு லாபானிடத்தில்  சொல்லாமல் வந்ததினால் லாபான் யாக்கோபை கோபத்துடன் பின் தொடர்கிறான். மேலும் யாக்கோபு கூடாரம் போட்ட அதேயிடத்தில் கூடாரம் போடுகிறான். மேலும் கர்த்தர் லாபானை  யாக்கோபுக்கு தீமை செய்யாதபடி கடிந்து கொள்ளுகிறார். 

 மேலும் யாக்கோபு லாபானுடைய வீட்டில் இருபது  வருஷம் வேலை செய்கிறான். லாபான் பத்து  முறை அவன் சம்பளத்தை மாற்றுகிறான். 

லாபான் மிகவும் கோபமுடையவனாக காணப்படுவதன் ஒரு காரியம் என்னவென்றால் யாக்கோபின் மனைவி ராகேல் தன் தகப்பன் வீட்டிலுள்ள சுரூபங்களை திருடி வந்தாள்.  அதை யாக்கோபு காணவில்லை. லாபானுக்கு அது மிகவும் கோபமாக இருந்ததால் யாக்கோபு கொண்டு வந்த எல்லா தட்டு  முட்டுகளையும் தடவிப்பார்க்கிறான்.  அவன் தட்டு முட்டுகளையெல்லாம் தடவி பார்த்ததும் யாக்கோபுக்கு லாபானிடத்தில் கோபமாகி விட்டது. ஆனால் தடவி  பார்த்தாலும் அவன் கண்டுபிடிக்கக்கூடாமல் ராகேல் அந்த சுரூபங்களை எடுத்து ஒட்டக சேணத்தின்  கீழ் வைத்து,  அதன் மேல் உட்கார்ந்திருந்தாள்.  லாபான் கூடாரம் எங்கும் தடவிப் பார்த்தும் அவைகளை கண்டு பிடிக்கவில்லை.

யாக்கோபு லாபானுடைய வீட்டில் வேலை செய்த இருபது வருஷமும் எந்த வஞ்சனையில்லாமல் உண்மையோடே  செய்தான். கர்த்தர் யாக்கோபின் வேலையில் அவனோடே கூட இருந்தார் என்பது நமக்குத் தெரிய வருகிறது.

 மேலும் நாம் பாரம்பரியம் விட்டு இறங்க வேண்டும் என்பது இந்த வசனங்களில் கூட நமக்கு தேவன் தெளிவாக திருஷ்டாந்தபடுத்துகிறார்.   நம்முடைய பாரம்பரிய வாழ்க்கையை விட்டு நமக்கு தேவன் காட்டியிருக்கிற சொந்த தேசமாகிய கானானை நோக்கி நாம் யாத்திரை செய்ய வேண்டும் மற்றும் நம் முன்னோர்களின் பாரம்பரிய பழக்கங்கள் வழிபாடுகள் எல்லாம் விட்டு இறங்க வேண்டும். ராகேலை போல நாம் எவ்விதத்திலும் அதனோடு செல்லக்கூடாது.அப்படி சென்றால்  நமக்கு போராட்டம் உண்டு. சத்துரு  கோபத்தோடே  நம்மை பின் தொடருவான். இதில் நாம் ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

 கர்த்தர் யாக்கோபிடத்தில் இரக்கம் காட்டினதால் லாபானை கடிந்துக் கொள்கிறார். அதனால் லாபான்  தான் தாழ்மைப்படுகிறான். 

ஆதியாகமம் 31:43-45

அப்பொழுது லாபான் யாக்கோபுக்குப் பிரதியுத்தரமாக: இந்தக் குமாரத்திகள் என் குமாரத்திகள், இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள், இந்த மந்தை என் மந்தை; நீ காண்கிற யாவும் என்னுடையவைகள்; என் குமாரத்திகளாகிய இவர்களையும், இவர்கள் பெற்ற பிள்ளைகளையும் இன்று நான் என்ன செய்யக்கூடும்? 

 இப்பொழுதும் எனக்கும் உனக்கும் சாட்சியாயிருக்கும்பொருட்டு, நீயும் நானும் உடன்படிக்கைபண்ணிக்கொள்ளக்கடவோம் என்றான். 

 அப்பொழுது யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தினான். 

 பின்பு யாக்கோபு தன் சகோதரரை பார்த்து  கற்களை குவியலாகச்  சேருங்கள் என்று சொல்ல, அவர்கள் கற்களை குவியலாக சேர்த்துக் கொள்ளுகிறார்கள்,  அந்த கற்குவியலின் மேல் போஜனம் பண்ணினார்கள்.  அந்த கற் குவியல்களின் மேல் போஜனம் பண்ணுவது என்னவென்றால் சபையால் ஒருமித்து போஜனம் பண்ணவேண்டும் என்பதற்காக தேவன் யாக்கோபை வைத்து    திருஷ்டாந்தபடுத்துகிறார் என்பது தெரிய வருகிறது.

லாபான்  அதற்கு ஜெகர்சகதூதா  என்று பேரிட்டான், பின்பு யாக்கோபு கலயெத் என்று  பேரிட்டான்.

 ஆனால் லாபான் யாக்கோபையும் தன் குமாரத்திகளையும்,  யாக்கோபின் மந்தைகளையும் பின்தொடர்ந்து வந்து, யாக்கோபிடத்தில் இந்த குமாரத்திகள் என் குமாரத்திகளும்,  இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகளும்,  இந்த மந்தைகள் என்  மந்தைகளும் என்று சொல்லி  உடன்படிக்கை பண்ண கடவோம் என்று சொன்னது இவர்களில் அவனுக்கு இருக்கும் உரிமையை காட்டும்படியாக இவ்விதம் கடந்து வருகிறான். மேலும் சபையின் ஆடுகளை வஞ்சிக்கும்படியாகவும்,   நம் ஆத்துமாவை  வஞ்சித்துக் கொள்ளும் படியாக சாத்தான் இவ்விதமாக தந்திரமாக வரும்போது நாம் ஞானமாக நடந்து கொள்ள வேண்டும். 

யாக்கோபு ஞானமாக  நடந்து கொள்ளுகிறான். ஆனால், தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்ன படியால்,  அது மிஸ்பா என்று பெயர் பெற்றது. 

 அதன் பின்பு, 

ஆதியாகமம் 31:51-55

 பின்னும் லாபான் யாக்கோபை நோக்கி: இதோ, இந்தக் குவியலையும் எனக்கும் உனக்கும் நடுவாக நான் நிறுத்தின தூணையும் பார். 

 தீங்குசெய்ய நான் இந்தக் குவியலைக் கடந்து உன்னிடத்துக்கு வராதபடிக்கும், நீ இந்தக் குவியலையும் இந்தத் தூணையும் கடந்து என்னிடத்துக்கு வராதபடிக்கும் இந்தக் குவியலும் சாட்சி, இந்தத் தூணும் சாட்சி. 

 ஆபிரகாமின் தேவனும் நாகோரின் தேவனும் அவர்கள் பிதாக்களின் தேவனுமாயிருக்கிறவர் நமக்குள்ளே நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றான். அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவர்மேல் ஆணையிட்டான். 

பின்பு, யாக்கோபு மலையின்மேல் பலியிட்டு, போஜனம்பண்ணும்படி தன் சகோதரரை அழைத்தான்; அப்படியே அவர்கள் போஜனம்பண்ணி மலையிலே இராத்தங்கினார்கள். 

 லாபான் அதிகாலமே எழுந்திருந்து, தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் முத்தஞ்செய்து, அவர்களை ஆசீர்வதித்தான். பின்பு லாபான் புறப்பட்டு, தன் இடத்துக்குத் திரும்பிப்போனான். 

சங்கீதம் 23:5, 6

 என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. 

 என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். 

இவ்விதமாக தேவன் யாக்கோபையும் ஆசீர்வதித்து தேவனுக்கு முன்பாக எடுத்த உடன்படிக்கையினால் பின்பு லாபான் யாக்கோபுடைய வாழ்வில் வரவில்லை, யாக்கோபும் லாபானிடம் போனதில்லை என தெரிகிறது. ஜெபிப்போம். 

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார். 

-தொடர்ச்சி நாளை.