யாக்கோபின்சிறையிருப்பை திருப்புதல்:-

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Jun 06, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 43: 1

இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும் இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.      அல்லேலூயா

யாக்கோபின்சிறையிருப்பை   திருப்புதல்:-

கர்த்தருக்குள் பிரியமானவர்களே, நாம் முந்தின நாளில்  தியானித்த வேத வசனங்களை நாம் பார்க்கும் போது சபைகளில் இரண்டு வித சந்ததிகள் எழும்புகிறதை பார்க்கிறோம். அதைத்தான் தேவன் யாக்கோபை வைத்து தேவன் திருஷ்டாந்தபடுத்துகிறார் என்பது தெரியவருகிறது. ஆனால் தேவனுடைய வாக்குத்தத்தத்தின் படி ஒரே சந்ததி அது கிறிஸ்து என்பதையும் அதைத்தான் தேவன் ஆபிரகாமிடத்தில் கூறுகிறார். ஈசாக்கின் மக்களாகிய ஏசா,யாக்கோபை தேவன் மாம்சத்துக்கும், ஆவிக்கும் திருஷ்டாந்தப்படுத்தி மேலும் யாக்கோபிடத்தில் சத்துரு கொண்டு போடுகிற களைகளால் மாம்ச ஜனனம் உருவாகிறது என்பதும் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களிடத்தில் ஆவிக்குரிய உற்பத்தி வெளிப்படுகிறதையும், மேலும் ஏசாவை ஏதோம் என்றும் அவன் மேல் வைத்த நுகம் முறிக்கும் நாட்கள் வரும் என்றும் எப்படியாயினும் ஒரே சந்ததி கிறிஸ்துவால் தேசம் அனைத்திலும் ஆத்துமாக்கள் பலுகி திரளாய் வர்த்திக்கச் செய்வார் என்பது தெரியவருகிறது.

மேலும்,யாக்கோபின் கடைசி குமாரன் பென்யமீன். இவன் எப்போது ராகேலை பெற்றெடுக்கிறாள் என்றால்,

ஆதியாகமம் 35: 9-10

யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின்பு தேவன் அவனுக்கு மறுபடியும் தரிசனமாகி, அவனை ஆசிர்வதித்து;

இப்பொழுது உன் பேர் யாக்கோபு, இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல் என்று பேரிட்டார்.

இந்த காரியம் தேவன் செய்வது எப்போது என்றால்,

ஆதியாகமம் 35:1-4

தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார்.

அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள்.

நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான்.

அப்பொழுது அவர்கள் தங்கள் கையிலிருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின் கீழே புதைத்துப்போட்டான்.

பின்பு பிரயாணம் புறப்பட்டார்கள் அதன் பின்பு தான் எல்லாவற்றையும் புதைத்த பிறகு தான் தேவன் யாக்கோபை இஸ்ரவேல் என்று பெயரிட்டு அழைக்கிறார்.

இதிலிருந்து நாம் இஸ்ரவேலனாக தேவனுக்கு முன்பாக காணப்பட வேண்டுமானால் நம்மிடத்தில் இருந்த எல்லா பாவ வழக்கங்கள், விக்கிரகங்கள் எல்லாம் அடக்கப்பண்ண பட்டால் மாத்திரமே, ஒரே சந்ததியாகிய கிறிஸ்து நம் உள்ளத்தில் வெளிபடுவார். அப்போது தான் நாம் இஸ்ரவேல் என்றழைக்கப்படுவோம்.

யாக்கோபு லாபானின் வீட்டுக்கு போக தாயாகிய ரெபெக்காள் அவனை அனுப்பி விடுகிறதை பார்க்கிறோம். அவன் வருகிற வழியில் தேவன் அவனுக்கு தரிசனமாகிறார் .ஆனால் எப்போது ராகேலை கண்டு மற்றும் லாபான் வீட்டுக்குள் போனானோ அப்போதே அவன் மாம்சத்துக்கு அடிமையாகி விடுகிறான். அவ்விதமான மாம்ச சிந்தைகள் நம்மிடத்தில் வருமானால் நமக்கு இரட்சிப்பு வேண்டும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து யாக்கோபை மீட்டு எடுக்கும் படியாகவே வந்தார்.

அதைத்தான் ,

ஏசாயா 41: 8-14

என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதன் ஆபிரகாமின் சந்ததியே,

நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து, நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்.

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலச்சையடைவார்கள்; உன்னோடே வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள்.

உன்னோடே போராடினவர்களைத்தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்.

உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.

யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.

எப்படியெனில் ,லாபான் வீட்டில் சிறைப்பட்டிருந்த யாக்கோபை தேவன் மீட்டு எடுக்கிறார். அது போல நம்மை தேவன் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்டு எடுத்தால் பின்பு நாம் நடந்த பழைய பாவ பழக்கவழக்கங்கள், மாம்ச கிரியைகள், உலக வழிபாடுகள், ஜீவனத்தின் பெருமைகள் இவ்விதமான தேவனுக்கு பிரியமில்லாத மற்றும் அனைத்து காரியங்களும் நம்மை விட்டு மாறிப்போகும். நாம் அதை தேடினாலும் காண மாட்டோம் என்பதைத்தான் முந்தின வேதப் பகுதிகளில் எழுதப்பட்டிருக்கிறது. என்னவென்றால்,

ஆதியாகமம் 31: 11-13

அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில் யாக்கோபே என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன்.

அப்பொழுது அவர்: உன் கண்களை ஏறெடுத்துப்பார்; ஆடுகளோடே பொலியும் கடாக்களெல்லாம் கலப்புநிறமும் புள்ளியும் வரியுமுள்ளவைகளாய் இருக்கிறது; லாபான் உனக்குச் செய்கிற யாவையும் கண்டேன்.

நீ தூணுக்கு அபிஷேகம் செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே; இப்பொழுது நீ எழுந்து, இந்தத் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான். ஜெபிப்போம்.


கர்த்தர் ஆசீர்வதிப்பார்.      

-தொடர்ச்சி நாளை.