Jun 03, 2020

தேவனுக்கு மகிமையுண்டாவதாக

 மல்கியா 1:4-5  ஏதோமியர்: நாம் எளிமைப்பட்டோம்: ஆனாலும் பாழானவைகளைத் திரும்பக் கட்டுவோம் என்று சொல்லுகிறார்கள்; அதற்குக் கர்த்தர்: அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன். அவர்கள் துன்மார்க்கத்தின் எல்லையென்றும், கர்த்தர் என்றைக்கும் சினம்வைக்கிற ஜனமென்றும் சொல்லப்படுவார்கள் என்கிறார்.

இதை உங்கள் கண்கள் காணும். அப்பொழுது நீங்கள்: கர்த்தர் இஸ்ரவேலுடைய எல்லை துவக்கி மகிமைப்படுத்தப்படுவார் என்பீர்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென், 

அல்லேலூயா

ஏசாவின் மேல் வைத்த நுகம் முறியும் விதம்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே யாக்கோபை தேவனுடைய வீடாக தேவன் ஆசீர்வதிக்கிறதை நாம் பார்க்கிறோம். அவன் நிறுத்தின கல் என்பது

சீயோனில் வைக்கப்பட்ட

மூலைக்கல்.  எண்ணைய் வார்க்கிறது தேவன் மூலைக் கல்லாகிய கிறிஸ்துவை அபிஷேகம் பண்ணுகிறார். என்பதை எல்லாம் தேவன் முன் அடையாளமாக  திருஷ்டாந்தப் படுத்துகிறார்.

அதைத்தான் சங்கீதம் 20:6

கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய ஜெபத்தைக் கேட்பார்.

கர்த்தர் ஆபிரகாமிடத்திலும்,  ஈசாக்கிடத்திலும் , யாக்கோபிடத்தில் ஒரே வாக்குத்தத்தத்தை கொடுக்கிறார். அது என்னவென்றால் உன் சந்ததி, அந்த சந்ததி கிறிஸ்து என்பதை இங்கு விளக்கி காட்டி உன் சந்ததி பூமியின் தூளை போலிருக்கும் எல்லா இடங்களிலும் பரம்புவாய் என்றும் உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்கிறார். அது தலைமுறை தலைமுறையாக நம்மோடும் நமக்குள்ளும் விளங்குகிறது.

ஆனால் ஈசாக்கு ஏசாவினிடத்தில் உன் வாசஸ்தலம் பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும் இருக்கும், உன் பட்டயத்தினாலே நீ பிழைத்து உன் சகோதரனை சேவிப்பாய்: நீ மேற்கொள்ளும் காலம் வரும்போதோ உன் கழுத்தில் இருக்கிற அவனுடைய நுகத்தடியை முறித்து போடுவாய் என்று சொல்ல காரணம் ஏதோம் வம்சத்தார் பூமியில் சாரத்தோடு அவர்கள் வாழ்க்கை இருந்தாலும் தேவனுடைய வசனம் வானத்திலிருந்து பனியை போல் இறங்கும்போது, வசனமாகிய பட்டயத்தினால் ஏசாவின் மாம்ச கறைகள் அகற்றப்பட்டு, மென் மேலும் வசனத்தால் வளர்ந்து வரும்போது நாம் மாம்ச உலக சிந்தனைகளை மேற் கொள்ளும் காலம் வரும் அப்பொழுது யாக்கோபு வைத்தை நுகத்தடியை முறித்துவிட்டு, ஏதோமியரும் தேவனை ஆவியில் ஆராதிப்பார்கள்.

இவ்விதமாக நாம் எல்லோரும் சிந்திக்கும்போது ஏசாவுக்கு கிடைத்த ஆசீர்வாதம் தான் நமக்கு இருந்தது என்பதும் நாம் தேவனுடைய வார்த்தையினால் நம்மேல் அபிஷேகத்திற்கு மாறாக இருந்த நுகத்தடியை முறியடித்து ஜெயம் பெறுகிறோம். அதனால் நாம் யாவரும் மாம்ச சிந்தனை மாற்றி ஆவிக்குரிய சிந்தையோடு வாழவேண்டும். தேவனுடைய வார்த்தை என்ன சொல்கிறது என்றால்  தேவன் நம் சிந்தனைகளை சிதறடித்து, நம்மை கைவிட்டு நம்  மேல் கோபமாயிருந்தாரானால், நாம் தேவனிடத்தில் ஜெபிக்க வேண்டிய விதமாவது:-

சங்கீதம் 60: 1-5

தேவனே நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், எங்கள்மேல் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடமாய்த் திரும்பியருளும்.

பூமியை அதிரப்பண்ணி, அதை வெடிப்பாக்கினீர்; அதின் வெடிப்புகளைப் பொருந்தப்பண்ணும்; அது அசைகின்றது.

உம்முடைய ஜனங்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்; தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.

சத்தியத்தினிமித்தம் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுத்தீர். (சேலா.)

உமது பிரியர் விடுவிக்கப்படும்படி, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எனக்குச் செவிகொடுத்தருளும்.

இவ்விதமாக இப்போதும் நாம் நம்முடைய மாம்ச சிந்தை,  உலக ஆசை இவைகளை விட்டு தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுவதற்கு நாம் ஜெபிப்போமானால் நம்மை  தேவன் மாம்ச கிரியைகளாகிய நம் ஜென்ம சுபாவங்கள் அனைத்துமாகிய நுகத்தடி களை முறித்து தேவனோடு ஐக்கியப்படுத்துவார்.

அதைத்தான் சங்கீதம் 60: 6 -12 

தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.

கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது, எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன்.

மோவாப் என் பாதபாத்திரம், ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிந்துபோடுவேன்; பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள்.

அரணான பட்டணத்திற்கு என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார்? ஏதோம் மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவர் யார்?

எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீர் அல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவோ?

இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா.

தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.

இதிலிருந்து நமக்கு என்ன தெரிய வருகிறது என்றால் கர்த்தர் எல்லா நாளிலும் நம்மை தள்ளிவிடுகிறவரல்ல. நமக்கு விரோதமாக இருந்த எல்லா சத்துகளையும் ( குறிப்பாக நம் உள்ளத்தில் தேவ ஆவிக்கு விரோதமாக இருந்த எல்லா செயல்களையும்)  தேவன் அவருடைய பராக்கிரமத்தினால் மிதித்து போட்டு நாம் எல்லோரையும் தேவ ஆவியினால் நிறைய பண்ணுவார்என்பதில் மாற்றமில்லை.

நம்முடைய தேவனாகிய கர்த்தர் தம்மிடத்தில் வருகிற யாரையும் வெறுத்து தள்ளமாட்டார். நாம் தாழ்மையோடு கீழ்ப்படிதலோடு அவருடைய சத்தம் கேட்டு செய்வோமானால் நம்மை அவர் ராஜ்யத்தில் பங்கை அவர்களுக்கு கொடுக்கிறார்.

யாக்கோபிடத்திலும் மாம்ச கிரியைகள் உள்ளதை தேவன் வேத வசனம் மூலம் நமக்கு காட்டுகிறார். அதனால் 87 -ம் சங்கீதம் நாம் வாசிக்கும்போது நமக்கு தியானிக்க முடிகிறது.

சங்கீதம் 87 :1-3

அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது.

கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார்.

தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும். (சேலா.)

யாக்கோபை தேவன் மகிமைக்கு முன்னாக திருஷ்டாந்தபடுத்தியதே தவிர மகிமையின் சபையாகிய சீயோனை கர்த்தர் கட்டி எழுப்புகிறார் .


ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.