கர்த்தர் யாக்கோபை நடத்துகிற விதம்:

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Jun 01, 2020

தேவனுக்கு மகிமையுண்டாவதாக


 ஏசாயா 43 :19 -21

இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.

நான் தெரிந்துகொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், கோட்டான் குஞ்சுகளும் என்னைக் கனம்பண்ணும்.

இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியை சொல்லிவருவார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங் கூட இருப்பதாக. ஆமென் .

                                                     அல்லேலூயா.

                                                                                                                 கர்த்தர் யாக்கோபை  நடத்துகிற விதம்:

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ,தேவனால் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வதை குறித்து கடந்த நாட்களில் நாம் தியானித்தோம். பரிசுத்த ஊழியமாக இருக்க வேண்டும்; மேலும் பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் பெற்று மகிமையடைந்து மகிமையின் ஊழியம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்குள் இருந்து செய்தால் நாம் எல்லாவற்றிலும் எல்லா நேரங்களிலும் ஆசீர்வாதமாக இருப்போம். என்பதில் எந்தவித மாற்றமில்லை அதெப்படியெனில் அன்பு என்பது பரிசுத்தத்தை காட்டுகிறது. அன்பு இல்லை என்றால் நம் வாழ்க்கை சூனியமும் வெறுமையுமாயிருக்கும். என்பதை நாம் சிந்திக்க வேண்டும் அன்பில் பரிசுத்தம் விளங்குகிறது.

 எபேசியர் 1:4-8

தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,

பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக,

தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்.

அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.

அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார்.

இதிலிருந்து நமக்கு தெரியவருவது, யாக்கோபுக்கு ஒரு மீட்பு உண்டு அதென்னவென்றால் பாவமன்னிப்பாகிய மீட்பு அது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மாத்திரமே நமக்கு கிடைக்கிறது. நாம் யாக்கோபாக, சபையாக காட்டுகிறார்.

 ஏசாயா 43: 1-5

 இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும் இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.

நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.

நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர்; உன்னை மீட்கும்பொருளாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபாவையும் கொடுத்தேன்.

நீ என் பார்வைக்கு அருமையானபடியினால், கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன்.

பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன்.

தேவன் நம் ஒவ்வொருவருக்கும் பாவமன்னிப்பாகிய மீட்பு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் தமக்கு   சுவிகாரபுத்திரராகும்படி தருகிறார்.

 ஏசாயா 41 :8 -13

என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதன் ஆபிரகாமின் சந்ததியே,

நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து, நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்.

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலச்சையடைவார்கள்; உன்னோடே வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள்.

உன்னோடே போராடினவர்களைத்தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்.

உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.

 நம்முடைய மீட்பு எவ்வளவு அருமையானது என்பதும் அவர் நம்மை அழைத்த தேவன் அனுதினம் நம்மை அவர் எவ்விதத்தில் எல்லாம் நடந்து செல்கிறார் என்பதும், எந்த  தீமைக்கும் நம்மை ஒப்புக்கொடுக்காதபடி பாதுகாப்பார் என்பதும், நமக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் வெட்கப்பட்டு இலச்சையடைந்து போவார்கள் என்றும் கர்த்தர் நம்மை நீதியின் வலதுகரத்தினால் தாங்குவார் என்பதையும்  நமக்குள்ளாக ஒரு புதுமையை சிருஷ்டித்து   அந்த சிருஷ்டிப்பினால்  அநேகரை அவரண்டையில் வந்து சேர பண்ணுவார் என்பதும் அதனால் சபைகள் திரளாய் வர்த்தித்து பெருகபண்ணுகிறார் என்பதும் தெரியவருகிறது .

ஆனால் தேவன் யாக்கோபை குறித்து இவ்விதமாக சொல்லும்போது நாம் யாக்கோபோ இல்லை ஏசா என்று சிந்தித்துக் கொள்ள வேண்டும்.

ஏசா நான் இளைத்து இருக்கிறேன் என்று சொன்னதால் அவனுக்கு ஏதோம் என்ற பெயர் உண்டாயிற்று. மேலும் ஏசா கானானியருடைய குமாரத்திகள் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பார்வைக்கு ஆகாதவர்கள் என்பதை ஏசா அறிந்ததினாலும் ஏசாவுடைய ஐக்கியம் எல்லாம் இஸ்மவேலுடைய மக்களுமாயிருந்தார்கள். அவனுடைய ஐக்கியம் எல்லாம் தேவனால் துரத்தி தனியே விடப்பட்ட மாம்ச சந்ததிகளுமாயிருந்து அவனுக்குள் எந்த மன மாற்றமும் வரவில்லை.

நம்முடைய அனுதின ஜீவிதத்தில் மிகவும் ஜாக்கிரதையோடு நாம் காணப்படவேண்டும். என்னவென்றால் அநேகர் தங்கள் வாழ்க்கையில் தேவனால் மீண்டெடுக்கப்பட்டவர்கள், முழுமையான மீட்பை பெற்றுக் கொள்ளாமல் இருக்கிறதினால் விவாகம் ஆனாலும் சரி மற்றும் எந்த காரியங்களானாலும் சரி மாம்சீக சிந்தை உள்ளவர்களிடத்தில் ஐக்கியத்தையாக காணப்படுவார்கள். அவர்களில் ஆத்மாவின் இரட்சிப்பு இல்லை என்பது நமக்குத் தெரிகிறது. ஒருபோதும் நாம் அப்படியிருந்து விடக்கூடாது எப்படிப்பட்ட சோதனை வந்தாலும் நாம் கிறிஸ்துவினால் ஜெயிக்க வேண்டும். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எல்லாவற்றிலும் வெற்றி சிறந்தார்.

மேலும் ஏசா சேஷ்ட புத்திர பாகத்தை விற்றுபோட்டதினால் பிற்பாடு அவர் ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொள்ள விரும்பியும் ஆகாதவன் என்று தள்ளப்பட்டதை பார்க்கிறோம். பின்பு அவன் கண்ணீர் விட்டு, கவலையோடு தேடியும் மனம் மாறுதலை காணாமற் போனான் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆதலால் நாம் நாட்கள் பொல்லாதவைகளாய் இருப்பதால் காலத்தை பிரயோஜனபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஏசாவுக்கு தன் தகப்பனிடத்திலிருந்து இரண்டாவது ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள முடியவில்லை. முதல் ஆசீர்வாதம் தான் இழந்து விட்டதால் இரண்டாவதை தேவன் எடுத்து மாற்றி விட்டார். அதுபோல நாமும் எல்லாவற்றிலும் கருத்துள்ளவர்களாய் இருந்தோமானால் மாத்திரமே நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குவார்.         

ஜெபிப்போம் .

 கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.


                                                                                                                                                                                                                                                                     - தொடர்ச்சி நாளை