தேவனுக்கே மகிமையுண்டாவதாக                                                                                                                      

யோவான் 6:37

 பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை  உங்களனைவரோடுங் கூட இருப்பாதாக.   ஆமென். 

                                                அல்லேலூயா. 


                              பரிசுத்த ஊழியத்தின் விளக்கம்: திருஷ்டாந்தம்

                                  (மகிமையின் ஊழியம் செய்தல்)

                கர்த்தருக்குள் பிரியமானவர்களே,  முந்தின நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் யாக்கோபு என்னும் சந்ததி என்ன என்பதை நாம் தியானித்தோம். யாக்கோபு சபை  அது ஒரே சபை         கிறிஸ்து என்பதற்கு திருஷ்டாந்தபடுத்தப்படுகிறது. மேலும் ,யாக்கோபை ஈசாக்கு ஆசீர்வதிப்பதற்கு  முன்பாக என் மகனே நீ கிட்ட வந்து என்னை முத்தஞ் செய் என்று சொல்ல அவன்கிட்ட போய் தகப்பனை முத்தஞ் செய்கிறான். அந்த முத்தத்தில் அவன் வாசனை கர்த்தர் ஆசிர்வதித்த வயல் வெளியின்  வாசனையாக இருக்கிறது என்று சொல்லி  யாக்கோபை அவன் தகப்பன் ஆசிர்வதிக்கிறான்.

 நாம் கர்த்தருக்கு பயப்படுவோமானால் கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கிறான்.

 ஏசாயா 11:3

கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்;

 மேலும், 

சங்கீதம் 2:11-12

பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.

குமாரன் கோபங்கொள்ளாமலும் நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.

 நாம் குமாரனை முத்தஞ் செய்யவேண்டும் என்று தேவ வசனத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அவரை முத்தஞ் செய்யாவிட்டால் குமாரன் கோபங் கொள்வார் என்று எழுதப்பட்டிருக்கிறது.   குமாரன் தான் சபை என்பதை யாக்கோபை வைத்து தேவன் நமக்கு திருஷ்டாந்தபடுத்துகிறார். நாம் அவரை முத்தஞ்செய்வது என்றால் சபையாம் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் சகோதரர், சகோதரரும் ,சகோதரிகள், சகோதரிகளும் முத்தஞ் செய்வது சபையின் வழக்கமாக இருக்க வேண்டும். இவ்வாறு முத்தஞ்செய்தால் தேவன் நம்மை ஆசீர்வதிப்பார். இல்லாவிட்டால் நாம் விசுவாச ஓட்டத்தின் வழியில் அழிந்துபோவோம். நாம் வழியில் அழியாமல் பாதுகாக்க வேண்டும்.

குமாரனே முத்தஞ் செய்வது என்றால் சபையில் உள்ள சகோதரர்கள் ஒருவருக்கொருவர் அன்பாயிருக்கவேண்டும் என்பதை காட்டுகிறது.

 1 யோவான் 4:21

தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.

 அதை தான் சபை நிருபங்களில் எழுதப்பட்டிருக்கிறதை பார்க்கிறோம். 

1தெசலோனிக்கேயர் 5:26,27

சகோதரரெல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.

இந்த நிருபம் பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்யவேண்டுமென்று கர்த்தர்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்.

அதனால்,  நம் முத்தம் வஞ்சனையான முத்தமாக இருக்கக்கூடாது ஒருவருக்கொருவர் தேவ அன்பால் நிறையப்பட்டு சகோதரர் அன்பு காட்ட வேண்டும்.

அல்லாமலும், யூதாஸ்காரியோத்து இருதயத்தில் வஞ்சனை வைத்து கிறிஸ்துவை முத்தம் செய்தான். அவனுடைய நிலைமை பரிதாபமாக முடிந்தது.  நாம் கிறிஸ்துவினிடத்தில் உண்மையாக அன்பு கூறுவோமென்றால் நாம் அவருடைய கற்பனைகளை எல்லாம் கைக்கொள்ளுவோம். தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

வேத புஸ்தகத்தில் இளைய  மகன் தகப்பனிடத்திலிருந்து எல்லா ஆஸ்திகளையும்  வாங்கிக்கொண்டு தூரதேசத்துக்கு புறப்பட்டு போய்  அங்கே  துன்மார்க்கமாய் ஜீவனம் பண்ணி தன் ஆஸ்தியை அழித்து போட்டான் . ஆஸ்தியை அழித்துப் போட்ட பிறகு மீண்டும் தன் தகப்பனிடத்தில் திரும்ப வருவதற்கு அவன் யோசித்து, 

 லூக்கா 15: 18- 24

நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.

இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;

எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.

குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.

அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.

கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். 

என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.

இந்த காரியம் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொல்வது எதற்காக வென்றால் யாராவது சபையை விட்டு, தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட ஆசிர்வாதத்தினில் தாங்கள் உலகபிரகாரம் வாழ வேண்டும் என நினைத்து சத்தியத்தை விட்டு பின்மாறி சத்தியம் அல்லாத சபைகளில் போய் சேர்ந்து, அங்கு ஆத்துமாவுக்கு உள்ள ஆகாரம் கிடைக்காமல் இருந்து ஆத்துமாவில் இளைப்பாறுதல்  இல்லாமல் இருந்ததால் மீண்டும் விட்டு வந்த தந்தையிடத்திற்கு போவோம் என்று நினைத்து  தந்தையாகிய பிதாவினிடத்தில் வந்து தான் செய்த தவறுகளை உணர்ந்து பாவமன்னிப்பு எடுத்து தன்னை தாழ்த்தி ஒப்புக் கொடுத்தால் நம்முடைய தேவன் நம்மை அணைத்து சேர்த்துக் கொள்வார். சபையின் சகோதரர்கள் இப்படி பின்மாறி  போனவர்களை கட்டி அனணத்து தேவனுடைய அன்பை வெளிப்படுத்த வேண்டும். யாரும் வைராக்கியமாகவோ, வெறுப்பாகவோ இருக்கக்கூடாது என்பதை இது காட்டுகிறது.

அதனால் தேவன், 

  வெளிப்படுத்தின விசேஷம் 21: 7

ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.

 அதனால், 

எரேமியா 3:1

ஒரு புருஷன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போய் அந்நியபுருஷனுக்கு மனைவியானால், அவன் அவளிடத்தில் இனித் திரும்பப்போவானோ? அந்த தேசம் மிகவும் தீட்டுப்படுமல்லவோ என்று மனுஷர் சொல்லுவார்கள்; நீயோவென்றால் அநேக நேசரோடே வேசித்தனம்பண்ணினாய்; ஆகிலும் என்னிடத்திற்குத் திரும்பிவா என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இந்த வார்த்தைகளை நாம் வாசிக்கும்போது நமக்கு என்ன தெரியவருகிறது நம்முடைய தேவனாகிய கர்த்தர் எப்பொழுதும் நம்மை சேர்த்துக் கொள்வார்.

ஆனால், நாம் பின்மாறி போய் தேவனிடத்தில் திரும்பி வந்தால் நமக்கு நம் தந்தையினிடத்தில் முழு சுதந்திரம் கிடையாது என்பதை மூத்த குமாரனுடைய காரியத்தில் தேவன் நமக்கு எடுத்துக் காட்டுகிறார்.

இளையகுமாரன் திருப்பி வந்ததை கண்ட சந்தோஷப்பட்டு அவன் தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தை கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி ,இவன் கைக்கு மோதிரத்தையும் , கால்களுக்கு பாதரட்சைகளையும் போடுங்கள்.

 லூக்கா 15:23

கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.

என்று சொல்லி என் குமாரன் மரித்தான் மீண்டும் உயிர்த்தான் காணாமற் போனான் திரும்பவும் காணப்பட்டான் என்றான்  இப்படி சொல்லி எல்லோரும் சந்தோஷமாய் இருக்கிறதை மூத்த குமாரன் வயலிலிருந்து வரும்போது என்ன காரியம் என்று கேட்டு அறிந்து தன் தகப்பனை நோக்கி இதோ இத்தனை வருஷ காலம் நான் உமக்கு ஊழியஞ் செய்து ஒருபோதும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும் என் சிநேகிதருடனே கூட நான் சந்தோஷமாய் இருக்கும் படி ஒரு போதும் நீர் ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.

லூக்கா 15 :30 -32

வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.

அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.

உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமே என்று சொன்னான் என்றார்.

இதிலிருந்து நமக்கு தெரியவருவது என்னவென்றால் தேவனுடைய கற்பனைகளை விட்டு ஒருபோதும் தவறிப் போகாமல் எப்போதும் தேவனுடைய சபையில் உண்மையாய் நிற்கிறவர்களுக்கு தேவன் எல்லா சுதந்திரமும் கொடுக்கிறதை நாம் புரிய முடிகிறது.

 அதுபோல நாம் எந்த கஷ்டம் வந்தாலும்  தேவனுடைய அன்பை விட்டு பிரிந்து போகக் கூடாது .

                                                                 ஜெபிப்போம்.

                                                    கர்த்தர் ஆர்சீவதிப்பார்.


                                                                                                                                                                                                                                                            -தொடர்ச்சி நாளை.