மகிமையின் சபைக்கு திரிஷ்டாந்தம்:

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
May 29, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக


சங்கீதம் 24:3-7

யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? 

கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து; தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே. 

அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான். 

இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா.) 

வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்;அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக. ஆமென். 

அல்லேலூயா.


மகிமையின் சபைக்கு திரிஷ்டாந்தம்:

 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,  

நாம் முந்தின நாளில் தியானித்ததான வேத பகுதிகள் எல்லாம் உங்கள் வாழ்க்கையில் பிரயோஜனமாயிருக்கும் என கர்த்தருக்குள் நம்புகிறேன். என்னவென்றால் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து,  நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்று என்று   தன்னை வெளிப்படுத்தி யது நாம் நம்முடைய வாழ்க்கையில் அனுதினம் ஜீவ தண்ணீராகிய தேவ வசனம் நம் உள்ளத்திலிருந்து பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியினால்  வெளிப்படுகிறது என்பதை நமக்கு விளக்கிக் காட்டுகிறார். எப்படி என்றால், 

யோவான் 3:34-36

தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்;தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். 

பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். 

குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். 

இதிலிருந்து நாம் மிகவும் தெரிந்து கொள்ள வேண்டிய காரியம் என்னவென்றால், நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்ததால்,  நம் வாழ்க்கையில் விசுவாசம் கிரியையில்  இருக்குமானால் தேவன் நம் உள்ளத்தில் இந்த ஊற்றாகிய மணவாட்டியின்  அபிஷேகத்தை தேவன் நமக்கு தருகிறார் (சபையின் அனுபவம்).

மேலும் ஈசாக்கின் மகனாகிய ஏசா தன் சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுப்  போட்டதின் காரணமாக அவனுக்குள் மாம்ச சிந்தை  வெளிப்படுகிறதை பார்க்கிறோம். அதனால் அவன் ஏத்தியனான பேயேரின் குமாரத்தியாகிய யூதித்தையும்,  ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம் பண்ணினான்.

 இவர்கள் ஈசாக்குக்கும்,  ரெபேக்காளுக்கும் மன நோவாயிருந்தார்கள்.

இதிலிருந்து நாம் தெரிய வருவது  என்னவென்றால் தேவனுடைய சபையில் தேவ ஆவி  பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறவர்கள் மாம்ச கிரியைகளில் செயல்படுவார்கள்,  இவர்களுக்குள் இருக்கிற குணங்கள் என்னவென்றால்

கலாத்தியர் 5:19-21

மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், 

விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், 

பொறாமைகள், கொலைகள், குடிவெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான்  சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன். 

இவ்விதமான சுபாவங்கள் உள்ளவர்கள் எப்பொழுதும் தேவனுடைய சபைக்குள்  மனநோவாயிருந்து சபைக்குள் கலக்கம் உண்டாக்கி கொண்டிருப்பார்கள். இந்த விஷயங்களில் நம் உள்ளம் மாம்ச சிந்தைகள் வராதபடிக்கு ஜாக்கிரதையாகயி ருக்க வேண்டும்.

யூதா 1:12, 13

இவர்கள் உங்கள் அன்பின் விருந்துகளில் கறைகளாயிருந்து, பயமின்றிக் கூட விருந்துண்டு, தங்களைத் தாங்களே மேய்த்துக்கொள்கிறார்கள்;இவர்கள் காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களும், இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ் செத்து வேரற்றுப்போன மரங்களும், 

தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருள் வைக்கப்பட்டிருக்கிறது. 

யூதா 1:19

இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே. 

இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய ஆவியைப் பெற்றுக் கொள்ளாமல் இருக்கிறதினால்  இவர்களுடைய ஜென்ம சுபாவம் இவர்களை விட்டு மாறிப் போகவில்லை.  இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ள முடியாது. 

இதனால் நாம் தேவனுடைய சபைக்கு கீழ்ப்படிந்து சபை ஆராதனைகளில் பங்குப்பெற்று தேவனால் அருளப்படுகிற  ஆவியை பெற்றால் மாத்திரமே நம்முடைய ஜென்ம சுபாவம் மாற்றப்படும்.  ஜென்ம சுபாவம் மாற்றப்பட்டு நாம் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டும்.  அப்படியானால் நாம் புதிதான ஆவி உள்ளவர்களாகி கிறிஸ்துவோடு ஐக்கியப்பட்டிருக்க முடியும்.  

இவ்விதமாக தேவனுடைய சபையில் ஐக்கியப்பட்டிருந்தால் மாத்திரமே  நம்முடைய நித்தியஜீவனை பெற்றுக்கொண்டு ஆசீர்வாதமாக இருக்க முடியும். இல்லாவிட்டால், ஏசா எல்லா சுதந்தரத்தையும் இழந்து விட்டதுபோல் நாமும் இழந்து விடுவோம் காரணமென்னவென்றால் தன்னுடைய கூடாரத்தை விட்டு வெளியே வேலையை செய்கிறான்.  ஆனால் யாக்கோபே அதை சுதந்தரிகிறான், அவன் கூடாரவாசி ஆக காணப்படுகிறான். 

இதனை நம்முடைய தேவனாகிய கர்த்தர் எடுத்துக்காட்டி திருஷ்டாந்தப்படுத்துகிறது எப்படியெனில், ஈசாக்கு முதிர்வயதானபோது கண்கள் இருளடைந்தது, ஈசாக்கு பார்வையற்று போன போது, தான் மூத்தமகனாகிய ஏசாவை என் மகனே என்று கூப்பிடும்போது, அவன் இதோ இருக்கிறேன் என்றான். 

ஈசாக்கு,  நான் முதிர்வயதானேன் என் மரணம் எந்த நாளில் என்று தெரியாது, ஆதலால் நீ உன் ஆயுதங்களாகிய உன் அம்பறாத்தூணியையும் உன் வில்லையும் எடுத்துக் கொண்டு வனத்துக்குபோய் வேட்டையாடி எனக்கு பிரயமாயிருக்கிற ருசியுள்ள பதார்த்தங்களாக சமைத்து நான்புசிக்கவும் நான் மரணமடையுமுன்னே நான் உன்னை ஆசீர்வதிக்கும்படி என்னிடத்தில் கொண்டு வா என்றான். அப்போது ஏசா வேட்டையாடிகொண்டு வரும்படி வனத்துக்கு போனான். 

அப்போது ரெபெக்காள் தன் இளையமகனாகிய யாக்கோபை அழைத்து, ஈசாக்கு ஏசாவிடத்தில் சொன்ன காரியத்தை எல்லாம் யாக்கோபிடத்தில் சொல்லி 

ஆதியாகமம் 27:8, 9

ஆகையால், என்மகனே, என் சொல்லைக்கேட்டு, நான் உனக்குக் கற்பிக்கிறபடிசெய். 

நீ ஆட்டுமந்தைக்குப்போய், இரண்டு நல்ல  வெள்ளாட்டுக்குட்டிகளைக் கொண்டுவா. நான் அவைகளை உன் தகப்பனுக்குப் பிரியமான ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைப்பேன். 

நீ அதை கொண்டு உன் தகப்பன் உன்னை ஆசீர்வதிக்கும்படி அவரிடத்தில் கொண்டுபோக வேண்டும் என்று சொன்னபோது அவன் என் சகோதரன் ரோமம் மிகுந்தவன் நான் ரோமமில்லாதவன். என் தகப்பன் ஒருவேளை என்னை தடவிப்பார்த்தால், அவருக்கு நான் எத்தனாய் காணப்பட்டு, என் மேல் ஆசீர்வாதத்தையல்ல, சாபத்தை வரபண்ணிக்கொள்வேன் என்றான்.

அப்பொழுது அவள் அந்த சாபம் என்மேல் வரட்டும் என்று சொல்லி நீ போய் நான் சொல்லியபடி என்னிடத்தில் கொண்டு வா என்றாள்.

அவன் போய் அவைகளை தாயினிடத்தில் கொண்டு வந்தான். அவள் ருசியுள்ள பதார்த்தங்களாக சமைத்து, இளைய மகனுக்கு ஏசாவின் நல்ல வஸ்திரங்களை எடுத்து இளைய மகனாகிய யாக்கோபுக்கு உடுத்தி

ஆதியாகமம் 27:16, 17

வெள்ளாட்டுக்குட்டிகளின் தோலை அவன் கைகளிலேயும் ரோமமில்லாத அவன் கழுத்திலேயும் போட்டு, 

தான்    சமைத்த ருசியுள்ள பதார்த்தங்களையும் அப்பங்களையும் தன் குமாரனாகிய யாக்கோபின் கையிலே கொடுத்தாள். 

அவன் ஈசாக்கினிடத்தில் அதை கொண்டு போகும்போது, என் மகனே இத்தனை சீக்கிரத்தில் இது உனக்கு கிடைத்ததா?  என்று கேட்டு, என் மகனாகிய ஏசா தானோ என்று நான் உன்னை தடவிபார்க்கும்படிநீ என் கிட்டவா என்று சொல்ல அவன் கிட்டப்போனான். அவன் கிட்டப்போன போது தகப்பனாகிய ஈசாக்கு தடவிபார்த்து சத்தம் யாக்கோபின் சத்தம் போலவும்,  கைகள் ஏசாவின் கைகளாகவும் இருக்கிறது என்று சொல்லி, 

ஆதியாகமம் 27:23

அவனுடைய கைகள் அவன் சகோதரனாகிய ஏசாவின் கைகளைப்போல ரோமமுள்ளவைகளா யிருந்தபடியினாலே, இன்னான் என்று அறியாமல், அவனை ஆசீர்வதித்து, 

தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குதத்தத்தில் ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று சொன்னது நிறைவேறுகிறது.

இதனை வாசித்து தியானிக்கிற அன்பான தெய்வ ஜனமே தேவன் யாக்கோபை முன் குறித்ததால் இவ்விதமான காரியங்கள் நடக்கிறதை பார்க்கிறோம். யாக்கோபு இளைய மகனாக இருந்தாலும் சேஷ்டபுத்திரபாகத்தை பெற்றுக்கொள்கிறான். ஏனென்றால் முந்தினோர் பிந்தினோராகவும் பிந்தினார் முந்தினோராகவும் இருப்பார்கள் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தை இங்கு விளங்குகிறது.  மேலும் தேவனுடைய சபைக்குள் நிற்கிறவர்களால் மாத்திரமே தேவனுடைய ஆசீர்வாதம் சுதந்தரிக்கமுடியும் என்பதையும் இது திருஷ்டாந்தப்படுத்துகிறது.  அல்லாமலும் எருசலேமில் தேற்றபடுவார்கள் என்பதையும் இது காட்டுகிறது.  எருசலேம் என்பது தாயாக தேவன் காட்டுகிறார்.  சபை என்பது நமக்கு போதிக்கப்படுகிறது.  சபையில் தான் தேவன் ஆசீர்வதிக்கிறார் என்பது விளங்குகிறது.  மேலும் தேவன் வெளியில் வேலை செய்ய அனுப்புகிறார்,  ஆத்துமாக்களை வேட்டையாட வேண்டும் என்றும் வேட்டையாடினால் ஏற்ற வேளையில் தேவ சித்தமான நேரத்தில் நாம் முந்தி தேவ பாதத்தில் அந்த ஆத்மாக்களை  பக்குவப்படுத்தி தேவனிடத்தில் ஒப்புக் கொடுக்க வேண்டும் என்றும் தேவன் நமக்கு திருஷ்டாந்தம் படுத்தி  காட்டுகிறார். ஏசா சபையில் பங்கு பெறாததால் அவன் அதை இழந்துவிடுகிறான்.  மேலும் சபையின் ஆடுகள் தேவ வசனத்தால் ஒருக்கப்பட்டால்  தேவன் ஆத்துமாக்களை (ஆடுகளை) ஏற்றுக்கொண்டு  ஆத்துமாக்கள் (ஆடுகள்) ஈன்றெடுக்கிறவர்களை அவர் ஆசீர்வதிப்பார் என்பது தெரியவருகிறது.  இந்த காரியத்தில் சபையின் பங்கை யாக்கோபு பெற்றுக் கொள்கிறான்.  ஏனென்றால் யாக்கோபு குணசாலியும்  கூடாரவாசியுமாயிருந்தான்.  அதனால் தேவனுடைய சத்திய சபையாகிய மணவாட்டி சபையை  யாக்கோபு மூலம் தேவன் பெருகபண்ணுகிறார்.  அந்த யாக்கோபுக்குள் மகிமையின் ராஜா உட்பிரவேசிக்க வேண்டும்.  அப்போது அது மகிமையின் சபையாக வெளிப்படுகிறது.  சபையை எல்லா தேசங்களிலும் தேவன் பெருக பண்ணுகிறார். 

ஜெபிக்கவும்

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.


-தொடர்ச்சி நாளை