தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோவான் 3:16

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக.  ஆமென்.                                   

அல்லேலூயா!

நித்திய ஜீவ ஊற்று  அடைபட்டு போகாதபடி பாதுகாத்தல்- திருஷ்டாந்தமாக கற்பித்தல்:

கர்த்தருக்குள் பிரியமானவர்களே,

 முந்தின நாட்களில் நாம் தேவனுடைய வசனம் தியானிக்கும் போது நாம் பரிசுத்தமாக வாழ்ந்தால்  பரிசுத்த அபிஷேகம் நமக்கு கிடைக்கும் என்று பார்த்தோம். இல்லாவிட்டால் பரியாச  உதடை தேவன் நமக்குத் தந்து இது தான் இளைப்பாறுதல் என்று சொல்லி தேவன் நம்மை ஏமாற்றி விடுவார். அவ்விதம் தேவன் நம்மை நியாயந்தீர்த்தால் நாம் மரணத்தோடும்பாதாளத்தோடும் எடுத்த உடன்படிக்கை  விருதாவாகி விடும் என்பதை நாம் மிகவும் முக்கியமாக அறிந்துக் கொள்ள வேண்டும்.

நாம் ஒருபோதும் அசுத்த ஜீவியத்திற்கு போகக்கூடாதுமேலும் விட்டுவிட்ட கிரியைகளை நாம் மீண்டும் செய்வோமானால் நம்முடைய நித்திய ஜீவன் கெட்டுப்போகும். ஏனென்றால்தேவன் சொல்லுகிற வார்த்தை,

ஆதியாகமம் 26:1-6

ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான்.

 கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு.

இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்;நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.

ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால்,

நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.

ஈசாக்கு கேராரிலே குடியிருந்தான்.

கர்த்தர்  ஈசாக்கினிடத்தில்எகிப்துக்கு போகாமல் கோரரிலே குடியிரு  என்று சொல்வது என்ன என்றால், நம்மை தேவன் அழைத்து எடுத்தப்பிறகு, தேவன்; நாம் விட்டுவிட்ட பாவங்களை மீண்டும் நாம் செய்யாதபடி; ஈசாக்கினிடத்தில், நீ  எகிப்துக்கு போகாதபடி நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு  என்று சொல்லி நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறதை நாம் பார்க்கிறோம்.

            அவ்விடத்து மனிதர்களிடத்தில் ரெபெக்காளை  சகோதரி என்று சொல்லுகிறான் காரணம் அவள் பார்வைக்கு அழகுள்ளவளாயிருந்தபடியால் அவள் நிமித்தம் அவ்விடத்து மனிதர்கள் அவனை கொல்லுவார்கள் என்று பயந்து அவ்விதம் சொல்லுகிறான்.

            பார்வைக்கு அழகுள்ளவள்  என்று தேவன் நமக்கு ரெபெக்காளை  திருஷ்டாந்தப்படுத்துவது, மனைவியாகிய  மணவாட்டி சபை எவ்வளவு அழகும்இன்பமுமாயிருப்பாள் என்று தேவன்  திருஷ்டாந்தப்படுத்துகிறார்.

 ஏனென்றால் உலக விதமான புற அழகை  தேவன்,

நீதிமொழிகள் 31:30, 31

சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.

அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது.

            இவ்விதமாக ரெபெக்காள்  கர்த்தருக்கு பயப்படுகிற ஒரு ஸ்திரீயாக காணப்பட்டாள். எப்படியென்றால் ஆபிரகாமின் ஊழியக்காரன் ஒட்டகங்களோடு  துரவண்டையில் நின்று தண்ணீர் கேட்டபோதுஊழியக்காரனுக்கு  தண்ணீர் கொடுத்ததுமல்லாமல்அந்த துரவில் இறங்கி எல்லா ஒட்டகங்களுக்கும் தண்ணீர் வார்த்துக் கொடுக்கிறதை பார்க்கிறோம்.  அது மட்டுமல்லாமல் அந்த ஊழியக்காரன் அழைத்தவுடன் வீட்டாரிடத்தில் எந்த ஆலோசனையும் கேட்காமல் தேவனுடைய சித்தம் அறிந்தவளாக அந்த ஆபிரகாமின் ஊழியக்காரனோடு போகிறேன் என்று சொல்லுகிறதைப் பார்க்கிறோம்.

மேலும் போகிற வழியில் ஈசாக்கை கண்டு, இது யார் என்று அந்த ஊழியக்காரனிடம் கேட்டவுடனே அவன் உண்மையை எடுத்துச் சொல்லும்போது ஒட்டகத்திலிருந்து இறங்கி முக்காடிட்டு கொள்கிறதை  பார்க்கிறோம். இவ்விதமாக ரெபெக்காள்  கர்த்தருக்கு பயப்படுகிற ஒரு ஸ்திரீயாக   காணப்படுகிறாள்.  இவ்விதமான ஒரு மணவாட்டி ஈசாக்குக்கு தேவன் அமைக்கிறார் என்பதால் ஆபிரகாமிடத்தில் தேவன் வாக்குத்தத்தம் கொடுக்கிறார்ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்றுஅந்த சந்ததி கிறிஸ்து என்பதை எடுத்துக்காட்டுகிறார்.

 அதனால் தான், ஈசாக்கு விதைத்த வித்துக்கள் நூறுமடங்கு பலன் கொடுத்தது.

ஆதியாகமம் 26:12-16

ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;

அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.

அவனுக்கு ஆட்டுமந்தையும், மாட்டுமந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமைகொண்டு,

அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரார் வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப்போட்டார்கள்.

அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு. எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான்.

            அபிமெலேக்கு ஈசாக்கினிடத்தில் எங்களை விட்டுப் போய்விடு என்று சொல்ல காரணமென்னவென்றால் ஈசாக்கு விதைத்தது ஒன்றும் நஷ்ட படவில்லைஎல்லாம் பலன் அடைந்து கொண்டிருந்தது இதற்கு காரணம் என்னவென்றால் மனைவியாகிய மணவாட்டியின்  தூய உள்ளத்தை காட்டுகிறார் தேவன். அதனால், சபைகள் வளர்ந்து கொண்டிருந்தது அதை கண்ட  பெலிஸ்தராகிய,   விருத்தசேதனம் இல்லாதவர்கள் அந்தத் துரவுகளை மண்ணினால் நிரப்புகிறார்கள்அதுமட்டுமல்ல துரத்துவதற்காக முன்வருகிறார்கள்.

            இப்படி தான் நம்முடைய வாழ்விலும் தேவனுடைய உண்மையானதேவனுடைய சபைசபை ஊழியக்காரர்கள், சபை  ஜனங்கள் இவர்களுக்கு  விரோதமாக விருத்தசேதனம் இல்லாத  பெலிஸ்தர்களும் எழும்புவார்கள் என்று நாம் நிச்சயமாக அறிந்துக் கொண்டுபரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியின்  அபிஷேகம் பெற்று அனுதினம் புதுப்பித்து தங்கள் வாழ்க்கையை சீர் திருத்திகிறிஸ்துவின் கிருபையினால் நாம் நிரப்பப்பட்டிருபோமானால் நாம் சத்தியத்தில் வாழ முடியும், நம்முடைய ஆத்துமா மண்ணோடு மண்ணால்  ஒட்டி போகாதபடிபெலிஸ்தருடைய  கிரியைகளுக்கு தேவன் ஒப்புக்கொடுக்காதப்படி பாதுகாத்துக் கொள்வார்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும்  ஆசீர்வதிப்பார்.

 

 

 

- தொடர்ச்சி நாளை.