தேவனுக்கே
மகிமையுண்டாவதாக
தீத்து 3:5-7
நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம்
அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த
ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.
தமது கிருபையினாலே நாம்
நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக,
அவர் நமது இரட்சகராகிய
இயேசுகிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்.
கர்த்தராகிய
இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக. ஆமென்.
அல்லேலூயா.
கர்த்தருக்குள் பிரியமான
உங்கள்
தாழ்மையான சகோதரி,
பி. கிறிஸ்டோபர் வாசினி.
ஓசன்னா ஊழியங்கள்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
நாம் முந்தின
நாட்களில் தியானித்த வேதப் பகுதிகளில் சுத்தமான ஆவியினால் நாம் அபிஷேகம் பண்ண படாவிட்டால்
கர்த்தருடைய கோபத்தின் நாளிலே நாம் நிலை நிற்க
முடியாது, என்பதை குறித்து தியானித்து கொண்டிருந்தோம். சுத்தமான நதி நம்முடைய கர்த்தராகிய
இயேசு கிறிஸ்து அதை தான்,
ஆதியாகமம் 2:11, 12
முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும்
சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும்.
அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக்கல்லும்
உண்டு , என்று எழுதப்பட்டிருக்கிறது.
மேலும் யோவானுக்கு பத்மு தீவில் தேவன் வெளிப்படுத்தினது என்னவென்றால்,
வெளி 22:1-5
பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும்
ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக்
காண்பித்தான்.
நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான
கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த
விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.
இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம்
அதிலிருக்கும்.
அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்;
அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு
வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும்
அரசாளுவார்கள்.
இவ்விதமான சுத்தமான அபிஷேகம் தான் பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டி சபையாக
நாம் இருக்க வேண்டும் என்பது தான் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
பிரியமானவர்களே, உண்மையான சத்தியம்
இல்லாத கர்த்தருடைய ஊழியக்காரர்களை குறித்து
தேவன் சொல்லுகிறது.
செப்பனியா 3:1-4
இடுக்கண் செய்து,ஊத்தையும் அழுக்குமாயிருக்கிற நகரத்துக்கு ஐயோ!
அது சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை;அது கடிந்து கொள்ளுதலை ஏற்றுக்கொள்ளவில்லை;அது
கர்த்தரை நம்பவில்லை; அது தன் தேவனிடத்தில் சேரவில்லை.
அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்;அதின்
நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும்
மீதியாக வைக்காததுமான ஓநாய்கள்.
அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ளவர்கள்; அதின் ஆசாரியர்கள்
பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்துக்கு அநியாயஞ் செய்தார்கள்.
இவ்விதமாக வேதத்துக்கு அநியாயம் செய்ததால் ஜாதிகளை சங்கரித்தேன், அவர்கள் துருகங்கள் பாழாயின என்று எழுதப்பட்டிருக்கிறது.
ஆகையால், செப்பனியா 3:7
உன் வாசஸ்தலம் நிர்மூலமாகாதபடிக்கு நீ எனக்குப் பயந்து, கடிந்து கொள்ளுதலை
ஏற்றுக்கொள் என்றேன்; நான் அவர்களை எப்படித் தண்டித்தாலும், அவர்கள் அதிகாலையில் எழுந்து
தங்கள் கிரிகைகளை யெல்லாம் கேடாக்கினார்கள்.
அதனால் எல்லா ஜனங்களும் தேவனிடத்தில் வந்து தேவ ஆவியினால் போதிக்கப்படவும்
வேண்டுமென்று நினைத்து தேவன் சொல்லுகிறார் செப்பனியா 3:8 ஆகையால் நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக்
காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். என் சினமாகிய உக்கிர கோபத்தையெல்லாம் அவர்கள்மேல்
சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும், ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்பண்ணினேன்.
பூமியெல்லாம் என் எரிச்சலின் அக்கினியினாலே அழியும்.
அப்பொழுது ஜனங்களெல்லாம் கர்த்தருடைய நாமத்தை தொழுதுக் கொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும் படிக்கு,
நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.
இதனை வாசித்து தியானிக்கிற அன்பான தேவ ஜனமே, இந்நாட்களில் இவ்வித ஒரு
கொள்ளை நோய் தேசத்தை சூறையாடுகிறது என்றால் (குறிப்பாக தேவனை அறிந்தவர்கள் இருக்கிற
தேசம் ) அதற்கு காரணம் தேவனுடைய சுத்தமான ஜனங்கள் இல்லாத காரணத்தால் என்று நாம் ஒவ்வொருவரும்
சிந்திக்கலாம். ஏனென்றால் இடுக்கண் செய்து, ஊத்தையான நகரத்துக்கு ஐயோ! என்று கர்த்தர்
சொல்லுகிறார். மேலும் பூமியெல்லாம் என் எரிச்சலின் அக்கினியால் எரியும் என்றும் தேவனுடைய
வார்த்தை எழுதப்பட்டிருக்கிறது.
ஏனென்றால் தேசத்தில் தேவனுடைய சுத்தமான அபிஷேகம், ஊழியக்காரர்கள் மேலும்
ஜனங்கள் மேலும் இல்லாமல், அநேகர் தங்கள் பலிபீடமெல்லாம்
வாந்தியினாலும், அசுத்தத்தினாலும் நிறைந்திருப்பதால்
(மாயையை பின்பற்றி) மாயமான வாழ்வில், தந்திரத்தால்,
பரிதானங்களுக்காக ஜனங்களை ஏமாற்றி கொண்டு, தேவனுடைய வேலையை ஆதாய தொழில் என்று எண்ணிக்கொண்டிருப்பதால்
கர்த்தருடைய ஊழியக்காரருடைய கண்களை கர்த்தர் குருடாக்கி இருக்கிறார். சத்திய ஆவி என்ன
என்றும், கிருபை என்ன என்றும் தெளிவாக தெரியாமல் இருக்கிறதால் ஜனங்களை எல்லாம் மோசம்
போய்க் கொண்டு இருக்கிறார்கள்.
யாத்திராகமம் 23:8
பரிதானம் வாங்காதிருப்பாயாக. பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி
நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும்.
பிரயமானவர்களே, இந்த நாட்களில் நம் எல்லாருடைய வாழ்விலும் ஒரு புது
உணர்வு நம்முடைய தேவன் தருவதற்காக நாம் எல்லாரும் தேவனிடத்தில் நம்மை முழுமையாக ஒப்புக்கொடுப்போம்.
எப்படியெனில், மத்தேயு 5:3-10
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், பரலோகராஜ்யம் அவர்களுடையது.
துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் ஆறுதலடைவார்கள்.
சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் திருப்தியடைவார்கள்.
இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்,
அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், பரலோகராஜ்யம்
அவர்களுடையது.
மேலும் மேற்கூறப்பட்டுள்ள இந்த எட்டு அடிப்படை கருத்துக்களும் நம் வாழ்க்கையின்
அஸ்திபாரமாகிய கிறிஸ்து என்பதை நாம் அறிந்து கொண்டு, இந்த அஸ்திபாரத்தின் மேல் நான் கட்டப்படுவோமானால், நாம் ஒருபோதும் அசைந்து போகமாட்டோம். இவற்றிலிருந்து
ஜீவ வசனமாகிய ஊற்று நமக்கு பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியின் அபிஷேகம்.
இவ்விதமாக நாம் இருப்போமானால் நம்மை எல்லா தீமையினின்று நம்மை விடுவித்து
இரட்சிப்பார். ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.
-தொடர்ச்சி நாளை