கிறிஸ்துவுக்குள்
பிரியமானவர்களே!
முந்தின நாளில் நாம் தியானித்த
வேதப் பகுதிகளை நாம் பார்க்கும் போது நம்மளில் யாரும் இளைத்துப் போகாதபடிக்கு அவருடைய
நித்திய சுதந்தரமான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை, சீயோனில் வைக்கப்பட்ட கல்லாக, அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றது மான திட அஸ்திபாரமுள்ள மூலை கல்லாயிருக்கும். அந்த கல்லை சீயோனில் வைக்கிறேன்
என்று நம்முடைய தேவனாகிய கர்த்தர் கூறுகிறதை பார்க்கிறோம். அந்த கல்லின் மேல் விசுவாசமாயிருக்கிறவன்
பதறான் என்று எழுதப்பட்டிருக்கிறது.
ஏனென்றால் எருசலேமை ஆளுகிற நிந்தனைக்காரர்கள் சொல்கிறது
என்னவென்றால் நாங்கள் பாதாளத்தோடே உடன்படிக்கை பண்ணினோம் ; வாதை பெரு வெள்ளமாய் புரண்டு வந்தாலும் எங்களை அணுகாது, நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி; மாயையின் மறைவில் வந்து அடைந்தோம் என்கிறார்கள். ஆனால் அவர்கள்
எந்தவிதமான வாதைகள் வந்தாலும் அவர்கள் தப்பவில்லை. தேவன் அனுப்பின வாதைகள் அவர்களை அழித்து விடுகிறதைப் பார்க்கிறோம்.
அதனால் கர்த்தர்
சொல்லுகிறார்,
ஏசாயா 28:17-20
நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்கு நூலுமாக வைப்பேன்; பொய் என்னும்
அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை ஜலப்பிரவாகம் அடித்துக்கொண்டு போகும்.
நீங்கள் மரணத்தோடு செய்த உடன்படிக்கை விருதாவாகி, நீங்கள் பாதாளத்தோடு
செய்த ஒப்பந்தம் நிற்காதேபோம்; வாதை புரண்டுவரும்போது அதின்கீழ் மிதிக்கப்படுவீர்கள்.
அது புரண்டுவந்தமாத்திரத்தில் உங்களை அடித்துக்கொண்டுபோகும்; அது நாள்தோறும்
இரவும்பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிப் பிறக்குஞ் செய்தியைக் கேட்பதும் சஞ்சலத்தை
உண்டாக்கும்.
கால் நீட்டப் படுக்கையின் நீளம்போதாது; மூடிக்கொள்ளப் போர்வையின்
அகலமும் போதாது.
கிறிஸ்துவுக்குள்
பிரியமானவர்களே!
மேற்கூறிய தேவனுடைய வசனங்களை
நாம் நன்றாக தியானித்து நம்முடைய வாழ்க்கையில் இதுவரை மாயையான காரியங்களை பின்பற்றி மாயைக்கு முக்கிய ஸ்தானம்
கொடுத்து, மாயையை தேவனுக்கு ஒப்பாக்கி அதின்
மறைவில் வாசித்து விடலாம் என்று நினைத்தோம்,
எப்படியும் தன் மனம் போன போக்கில் வாழ்ந்து, நினைப்பதை எல்லாம் சரி என்று நினைத்து; நம் இருதயத
சிந்தைகளை செய்து மனம் போன போக்கில் வாழ்ந்து,
கர்த்தருடைய வேலைக்காரர்களும், ஊழியகாரர்களும்
அவ்விதம் மனம் போன போக்கில் மாயையை பற்றிக்
கொண்டு, அதற்குப் பின் தொடர்ந்து நடத்தையும், நாமும் அவர்கள், வழி தவறிப் போன பாதையை நோக்கி போனதுண்டானால் இந்த
நாளிலே நாம் நன்றாக சிந்தித்து கர்த்தர் கூறின வார்த்தைகள் ஒன்றும் தவறாமல் நடக்கிறதை நாம் நினைத்து; இப்போது தேவன் உலகிலே அனுப்பியிருக்கிற, வாதை, கொள்ளைநோய்
இவற்றிலிருந்து அநேகர் தேவனை தெரிந்தவர்களுக்கு
தப்ப முடியவில்லை என்றால், அது என்ன காரணம்
என்பதை ஆராய்ந்து அறிந்து மாயையின் மறைவில்
அடைக்கலம் உண்டு என்று நினைத்தவர்கள் கல் மழையாகிய வாதை மேலும் மறைவிடத்தை பெருவெள்ளம்
அடித்துக் கொண்டு போகிறதை நாம் நினைத்து நம்மை மிகவும் தேவனுக்காய் அர்ப்பணித்து நம்மை
விட்டு மாயையை மாற்றி, திட அஸ்திபாரமாகிய மூலை கல்லாகிய இயேசு கிறிஸ்துவை மட்டும் விசுவாசித்து
அவருடைய வார்த்தைகளில் நிலைத்திருப்போமானால் நமக்கு ஒரு தீங்கும் அணுகாது.
மேலும் அந்த
தேவனுடைய வார்த்தைகள் என்னவென்றால்,
ஏசாயா 28:21
கர்த்தர் தமது கிரியையாகிய அபூர்வமான கிரியையைச் செய்யவும், தமது வேலையாகிய
அபூர்வமான வேலையை நிறைவேற்றவும், அவர் பெராத்சீம் மலையிலே எழும்பினதுபோல எழும்பி,
கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல கோபங்கொள்வார்.
மேலும் தேவஜனமே,
இத்தனை தேவனுடைய வார்த்தைகளை
தியானித்து நிர்விசாரத்தோடு இருந்துவிடாதீர்கள். நாம் மனம் திரும்பி தேவனோடு சேர்ந்துக் கொள்வதற்கு நமக்கு தருணம் தந்திருக்கிறார் என்றால் நம்மேல் தேவன் வைத்திருக்கிற நீடிய பொறுமை தான் காரணம்,
மேலும் கர்த்தருடைய வார்த்தை
ஏசாயா 28:22-23
இப்பொழுதும் உங்கள் கட்டுகள் பலத்துப்போகாதபடிக்குப் பரியாசம்பண்ணாதிருங்கள்;
தேசம் அனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட சங்காரத்தின் செய்தியைச் சேனைகளின் கர்த்தராகிய
ஆண்டவராலே கேள்விப்பட்டிருக்கிறேன்.
செவிகொடுத்து என் சத்தத்தைக் கேளுங்கள்; நான் சொல்வதைக் கவனித்துக்
கேளுங்கள்.
தேவன் ஏசாயா தீர்க்கதரிசியோடு
இந்தக் காரியங்களை எல்லாம் தரிசனத்தால் வெளிப்படுத்தி நம்மோடு பேசுகிறான் என்றால் நாம் எவ்விதத்தில் நம்மை இந்த நாட்களில் மாற்றிக்கொண்டு
பரிசுத்தம் பெற்றுக் கொள்ளவேண்டும்.
பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலு
ம் இந்த ஜனத்தோடோ பேசுவார் என்று ஏசாயா 28:11-ல் கூறப்பட்டுள்ள தேவனுடைய வசனம், மாயமாக வாழ்கிறவர்களுக்கு தேவன் கொடுக்கிற ஆறுதல்
என்று அதிகமாக தெரிந்துக் கொள்ளவேண்டும்.
நம்முடைய தேவன் பரியாச
உதடுகளினால் அந்நியபாஷையை ஒருபோதும் விரும்புகிற
தேவனல்ல.
நீதிமொழிகள் 14:6
பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்; புத்தியுள்ளவனுக்கோ
அறிவு லேசாய் வரும்.
இதிலிருந்து தெரிய வருவது
ஞானம் கிறிஸ்து பரியாசக்காரன் கிறிஸ்துவை தரித்தவன் அல்ல. புத்தி என்பது மணவாட்டி, ஞானம் பெற்றவன் புத்தியை அடைவான். புத்தியுள்ளவனுக்கோ தேவனுடைய அறிவு லேசாய்
வரும்.
நீதிமொழிகள் 21:11
பரிகாசக்காரனைத் தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்; ஞானவான் போதிக்கப்படும்போது
அறிவடைவான்.
பேதை என்று நம்முடைய ஞானம் இல்லாத ஆத்துமாவைக் குறித்து
தேவன் சொல்கிறார். அந்த ஆத்துமா தண்டிக்கப்படும் போது ஞானமடையும், ஞானம் (தேவ ஞானம் )பெற்றால் அவன் தேவனுடைய போதகம்
கேட்கும்போது அறிவடைவான்.
அதனால்தான்,
சங்கீதம் 1:1
துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும்,
பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், என்று எழுதப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து துன்மார்க்கர்கள்
என்று சொன்னால் உலக விதமான இச்சைகளின்படி,
மாயையை பின்பற்றி வாழுகிற கிறிஸ்தவர்கள் என்று சொல்லுகிறவர்களும், கர்த்தருடைய வேலையை செய்கிறவர்களும் தான், என்பதை உணரவேண்டும்.
அதைத்தான்
யூதா 1:18, 19
கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர்
தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.
இவர்கள் பிரிந்து போகிறவர்களும்,
ஜென்மசுபாவத்தாரும், ஆவி இல்லாதவர்களுமாமே.
இவர்களை தேவன் பரியாசக்காரர்
என்று சொல்லுகிறார். இவ்விதமான மக்களோடு தான்
தேவன் பரியாச உதடுகளினாலும், அந்நியபாஷையினாலும்
பேசுவார்.
ஆனால், பெந்தேகொஸ்தே
என்னும் நாள் வந்தபோது தேவனுக்காக காத்திருந்தவர்கள் மேல் பரிசுத்த ஆவியானவர்
இறங்கினார். எல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு வெவ்வேறு பாஷைகளிலே பேசினார்கள். யாரும் பரியாச
உதடுகளினால் பேசவில்லை என்பது தெரியவருகிறது.
மணவாட்டி சபையானால் மாத்திரமே எந்த வாதை, எவ்விதமான ஜலபிரவாகம் வந்தாலும் அவர்களைச்
சேதப்படுத்தாது. இல்லை என்றால் மரணத்தோடு எடுத்த உடன்படிக்கை விருதாவாகி, பாதாளத்தோடு
செய்த ஒப்பந்தம் நிற்காதே போகும்.
இவை தான் இந்த நாட்களில்
சம்பவித்திருப்பது. அதனால் பிரியமானவர்களே நாம் எப்போது தேவனுடைய சத்தியத்தில் நிற்பதற்கு
ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்க வேண்டும். திட அஸ்திபாரமாகிய மூலைகல்லாகிய கிறிஸ்துவின்
மேல் கட்டப்பட்டு வரவேண்டும்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.
- தொடர்ச்சி நாளை.