கர்த்தருக்குள்  பிரியமானவர்களே!

 ஈசாக்குக்கு இரண்டு பிள்ளைகளை ரெபெக்காள்  பெற்றெடுத்து அவர்கள் வளர்ந்து பெரியவர்களான போது, ஏசா தன் சேஷ்டபுத்திர பாகத்தை ஒரு வேளை போஜனத்திற்காக விற்று போடுகிறதை பார்க்கிறோம். சேஷ்டபுத்திரபாகம் மிகவும் முக்கியமான நம்முடைய பிதாக்களின் பங்காக பழைய ஏற்பாட்டின் பகுதியில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் புதிய ஏற்பாடு ஆகும்போது சேஷ்புத்திரபாகம் என்பது மணவாட்டி சபையை காட்டுகிறது. பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு நாம் மணவாட்டி அலங்காரத்தோடு தேவனை தொழுது கொள்ளும்படியான ஒரு முக்கியமான வாழ்க்கையே நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அப்படியானால் நாம் எல்லோரும் எப்போதும் தேவ ஆலோசனை தான் நடப்போம் என்பதில் மாற்றமில்லை.இது அனுதினம் தேவசபைகுள்ளாக (பரிசுத்த சபைகுள்ளாக) பங்குள்ளவர்கள்தான் இதை காத்துக்கொள்ள முடியும். நாம் அங்குமிங்கும் போய் ஏசாவைப் போல் நடப்போமானால் இது நம்மைவிட்டு எடுத்து போடப்படும். ஆகையால் நாம் யாவரும் சேஷ்டபுத்திர பாகத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்விதமாக தேவனுடைய அபிஷேகத்தை பெற நம்மளில் எந்த கசப்பான வேர்களும் முளைக்க கூடாது. மட்டுமல்லாமல் அவ்விதம் கசப்பான வேர் முளைத்தால் சபைக்குள்ளாக கலகம் உண்டாகும். மேலும் நம்முலம்  அநேகர் தீட்டுபடுவதற்கு காரணமாகும்.

            இவற்றை நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமானால்,                                      

மத்தேயு 13:44

அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.

இதை போல் சேஷ்டபுத்திர பாகமாகிய பரிசுத்த ஆவியானவருடைய அபிஷேகம் நம் உள்ளத்தில் காத்துக் கொள்ள வேண்டுமானால்  மற்ற எல்லாவற்றையும் விட்டு விட வேண்டும். இப்படி இருக்க மணவாட்டி சபையை தான் இயேசுகிறிஸ்து அவரோடு சேர்த்துக் கொள்வார். இவையெல்லாம் தேவனுடைய சபைக்குள்ளாக நடக்குமேயொழிய வேறெங்கும் நடைபெறாது.

ஆனால் ஏசாவைப்போல் சபையை விட்டு வெளியே இஷ்டபிரகாரம் நாம் திரிந்தால் நாம் ஆத்துமா இளைத்துப் போகும், மட்டுமல்லாமல் சேஷ்டபுத்திரபாகத்தை இழந்துவிடுவோம் இளைத்தவனுடைய பெயர் ஏதோம் எனப்பட்டது.

ஆனால் யாக்கோபைப் போல் சேஷ்டபுத்திர பாகமாகிய பாக்கியத்தை பெற்றுக்கொள்ள முந்திக் கொள்ள வேண்டும்.

இளைத்து போகிறவன் யார்?

தேவனுடைய உபதேசம் சரியாக கேட்டு ஏற்றுக்கொள்ளாதவர்கள்.

ஏசாயா 28 :7-9

ஆனாலும் இவர்களும் திராட்சரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழிதப்பிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய் நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள்,

போஜனபீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை.

அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே.

முந்தின தேவ வசனங்கள் நாம் தியானிக்கும் போது தேவ ஜனங்கள் தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை செய்கிறதினால் அவர்களுடைய இருதயம் அசுத்தத்தாலும் வாந்தியினாலும் நிறைந்திருக்கிறதாகவும் சுத்தமான இருதயம் அவர்களில் இல்லையென்றும் சுத்தமில்லாத இருதயம் உள்ளவர்களுக்கு அறிவை போதிக்க முடியாது என்பதை எடுத்துக்காட்டுகிறார்.

ஆனால் யாருக்கு அறிவை உணர்த்த முடியும் என்றால் தேவ வசனமாகிய பால் குடித்தவர்களும், மேலும் பாலாகிய தேவ வசனத்தை குடித்து திருப்தியானவர்களுக்கும் தான் தேவனுடய உபதேசத்தை உணர்த்த முடியும் என்கிறார்.

ஆனால் எருசலேமை, தேவனுடைய வார்த்தைகளை கொடுத்து நடத்துகிற தேவ ஊழியங்களை குறித்து தேவன் சொல்லுவது என்னவென்றால்,

 ஏசாயா 28: 10 -11

கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள்.

பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்.

இதனை  நாம் வாசிக்கும்போது நமக்கு தெரிய வருகிறது என்னவென்றால்,  வேத வசனங்களை கர்த்தருடைய ஊழியக்காரன் எடுத்து விளக்கி காட்டாத படி கொஞ்சம் இங்கும் கொஞ்சம் அங்கும் என்று  சொல்லி தெளிவு படுத்தாத காரணத்தால் அந்த ஜனங்களுடைய  போஜனபீடங்கள் வாந்தியினாலும், அசுத்தத்தாலும் நிறைந்திருப்பதால் தேவன் அவர்கள் மேல் கோபம் கொண்டு பரியாச உதடுகளின் அந்நியபாஷையினால் அந்த ஜனத்தோடே பேசுகிறார். ஆனால்  இதுவே இளைத்தவனை இளைப்பாற பண்ணுகிற இளைப்பாறுதல் என்று தேவன் அவர்களை ஏமாற்றுகிறார். அவர்களுக்கு இளைப்பாறுதல் அவற்றில் கிடைக்காததால் அவர்கள் அதை நம்பவும் இல்லை.

பிரியமானவர்களே நீங்கள் யாவரும் இதனை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். நாம்   ஏமாந்து விடக்கூடாது. நம்மிடத்தில் சுத்தம் இல்லாவிட்டால் தேவன் நமக்கு பரிகாச உதடுகளின் அந்நிய பாஷையாக பேசுவார் நாம் மிகவும் எச்சரிப்போடு. இருக்கவேண்டும்.

இந்நாட்களில் அநேகம் பேருடைய வாழ்க்கையில் அந்நிய பாஷையில் பேசுவார்கள்; ஆனால் வாழ்க்கையில் ஒரு சமாதானமும் காணப்படாது, இளைப்பாறுதல் இராது. நாம்  நன்கு கவனிக்க வேண்டும் இதற்கு காரணம் தேவனுடைய சத்தியத்தை சரியாக ஏற்றுக்கொண்டு  நம்மை சுத்தம் செய்யாததால் தேவ கோபம் நம்மிடத்தில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

 

அதைத்தான்,

ஏசாயா 28 :12 -16

இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.

ஆதலால் அவர்கள் போய் பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும் கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும் கற்பனையின்மேல் கற்பனையும் பிரமாணத்தின்மேல் பிரமாணமும் பிரமாணத்தின்மேல் பிரமாணமும் இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும்.

ஆகையால் எருசலேமிலுள்ள இந்த ஜனத்தை ஆளுகிற நிந்தனைக்காரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

நீங்கள்: மரணத்தோடே உடன்படிக்கையும் பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம்; வாதை பெருவெள்ளமாய்ப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோமென்கிறீர்களே.

ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும் விசுவாசிக்கிறவன் பதறான்.

ஜெபிப்போம்

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்

 

-தொடர்ச்சி நாளை