தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 59:1,2

என் தேவனே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும்.

அக்கிரமக்காரருக்கு என்னைத் தப்புவித்து, இரத்தப்பிரியரான மனுஷருக்கு என்னை விலக்கி இரட்சியும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் அனுதினம், பரிசுத்த ஆவியினாலும், பரிசுத்த அக்கினியினாலும் சுத்திகரிக்கப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபைகளாகிய நம்முடைய உள்ளத்தில் அந்நிய ஸ்திரிகளின் கிரியைகள் அழிக்கப்பட வேண்டும் என்று தியானித்தோம். எப்படியெனில் பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டி நம் உள்ளத்தில் எப்பொழுதும் நற்கிரியைகளை, கிறிஸ்துவுக்குள் செய்துக் கொண்டிருந்தால் நம்முடைய தேவன் நம்மளில் மகிமைப்பட்டுக்கொண்டிருப்பார்.  

அல்லாமலும் நாம் அடுத்ததாக தியானிப்பது என்னவென்றால் 

எண்ணாகமம் 31:14-21  

அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரம்பேருக்குத் தலைவரும், நூறுபேருக்குத் தலைவருமாகிய சேனாபதிகள்மேல் கோபங்கொண்டு,

அவர்களை நோக்கி: ஸ்திரீகள் எல்லாரையும் உயிரோடே விட்டுவிட்டீர்களா?

பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே.

ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷசம்யோகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்றுபோடுங்கள்.

ஸ்திரீகளில் புருஷசம்யோகத்தை அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடே வையுங்கள்.

பின்பு நீங்கள் ஏழுநாள் பாளயத்திற்குப் புறம்பே தங்குங்கள்; நரஜீவனைக் கொன்றவர்களும், வெட்டுண்டவர்ளைத் தொட்டவர்களுமாகிய நீங்கள் யாவரும் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் உங்களையும் உங்களால் சிறைபிடிக்கப்பட்டவர்களையும் சுத்திகரித்து,

அந்தப்படியே எல்லா வஸ்திரத்தையும், தோலால் செய்த கருவிகளையும், வெள்ளாட்டுமயிரினால் நெய்தவைகளையும், மரச்சாமான்களையும் சுத்திகரிக்கக்கடவீர்கள் என்றான்.

ஆசாரியனாகிய எலெயாசாரும் யுத்தத்திற்குப் போய்வந்த படைவீரரை நோக்கி: கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட விதிப்பிரமாணம் என்னவென்றால்:

மேற்க்கூறப்பட்டிருக்கிற வசனங்களை நாம் தியானிக்கும் போது, இஸ்ரவேல் புத்திரராகிய சபையில் யுத்தத்துக்காக தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் மீதியானியரோடு யுத்தம் பண்ணி, அங்குள்ள ஸ்திரீகளையும், குழந்தைகளையும், சிறைபிடித்து, அவர்களுடைய மிருக ஜீவன்களாகிய ஆடு மாடுகள் யாவற்றையும், ஆஸ்திகள் யாவையும், நர ஜீவன்கள் யாவையும் அழிக்காதபடி பாளயத்துக்கு புறம்பே கொண்டு வந்தார்கள். ஆனால் கர்த்தர் எல்லாவற்றையும் அழிக்கும்படி சொல்லியிருந்தார்.  இது எதற்கு திருஷ்டாந்தம் என்னவென்றால் நாம் ஒவ்வொருவரும் நம் உள்ளத்தில் அந்நிய ஸ்திரீகளின் வேசித்தனத்தை அழிக்கும்படியாக, இஸ்ரவேல் புத்திரரில் யுத்த சன்னதனராக  தெரிந்தெடுக்கப்பட்டவர்களை   வைத்து மீதியானியரின் சகல காரியங்களை அழிக்கும்படியாக கர்த்தர் சொல்லி அனுப்புகிறதை பார்க்கிறோம்.  

ஆனால் அவர்கள் திரும்பி வந்ததை பார்க்கச் சென்ற மோசே, யுத்தத்திலிருந்து வந்த ஆயிரம் பேருக்கு தலைவரும், நூறு பேருக்கு தலைவருமாகிய சேனாபதிகள் மேல் கோபம் கொண்டு, ஸ்திரீகள் எல்லோரையும் உயிரோடே விட்டீகர்களா?  என்னவென்றால் பேயோரின் சங்கத்திலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாக துரோகம் பண்ண காரணமாயிருந்தவர்கள். ஆதலால்  கர்த்தரின் சபையில் வாதை நேரிடுவதற்கு காரணமானவர்கள் மீதியானியர் என்று மோசே சொல்லி விட்டு, அவன் சொல்வது குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷ சம்யோகத்தை அறிந்த எல்லா ஸ்திரிகளை கொன்றுப் போடவும், புருஷ சம்யோகத்தை  அறியாத எல்லா ஸ்திரிகளையும் உயிரோடே வையுங்கள் என்றும், அதன் பின்பு ஏழுநாள் பாளயத்துக்கு புறம்பே தங்குங்கள் என்று சொல்கிறான்.  

இதற்கு காரணமென்னவென்றால் அவர்கள் நரஜீவன்களை தொட்டவர்கள் தீட்டுப்பட்டவர்களும், வெட்டுண்டவர்களைத் தொட்டவர்கள் யாவரும் தீட்டுப்பட்டவர்களும், ஆதலால் எல்லாரும் மூன்றாம் நாளிலும், ஏழாம் நாளிலும், மற்றும் சிறைபிடித்துக்கொண்டு வந்தவர்களையும் சுத்திகரிக்க வேண்டும்.  அந்தபடியே எல்லா வஸ்திரத்தையும், தோலால் செய்த கருவிகளையும், வெள்ளாட்டுமயிரினால் நெய்தவைகளையும், மரச்சாமான்களையும் சுத்திகரிக்கக்கடவீர்கள் என்றான்.  

பிரியமானவர்களே நாம் நம்மை சுத்தம் செய்து பரிசுத்தப்படுத்துவோமானால், நாம் தொடுகிற அத்தனைப்பொருட்களும், சுத்தமாக்கப்பட்டு, பரிசுத்தமாயிருக்கும்.  எப்படியென்றால் பரிசுத்தர் நமக்குள்ளில் இருப்பதால் மட்டும் இப்படி நடக்கும். அல்லாமலும் ஆசாரியனாகிய எலெயாசார் யுத்தத்திற்கு போய் வந்த படைவீரரை நோக்கி,கர்த்தர் மோசே மூலம் கொடுத்த விதி பிரமாணம் 

எண்ணாகமம் 31:22-24 

அக்கினிக்கு நிற்கத்தக்கவைகளாகிய பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகிய இவைகளெல்லாம் சுத்தமாகும்படிக்கு,

அவைகளை அக்கினியிலே போட்டெடுக்கக்கடவீர்கள்; தீட்டுக்கழிக்கும் தண்ணீராலும் அவைகள் சுத்திகரிக்கப்படவேண்டும்; அக்கினிக்கு நிற்கத்தகாதவைகளையெல்லாம் தண்ணீரினால் சுத்தம்பண்ணக்கடவீர்கள்.

ஏழாம் நாளில் உங்கள் வஸ்திரங்களைத் தோய்க்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாயிருப்பீர்கள்; பின்பு நீங்கள் பாளயத்திற்குள் வரலாம் என்றான்.

மேற்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது அக்கினிக்கு நிற்க தக்கவைகளாகிய சகலத்தையும் சுத்திகரிக்க வேண்டும்.  அக்கினிக்கு நிற்க தகாதவைகளெல்லாம் தண்ணீரினால் சுத்தம் பண்ண கடவர்கள். இவை எதற்கு திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால் நம்முடைய அழுக்குகள், அருவருப்புகள், நாம் தீட்டாக நடந்த காரணத்தால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நம்மை சுத்திகரிக்கும்ப் பொருட்டாக, ஜலத்தினால் ஞானஸ்நானம் பெற்று பாவங்களற சுத்தமாக சொல்கிறார்.  ஆனால் அதற்கு பிறகு ஆவியினாலும், அக்கினியினாலும் ஞானஸ்நானம் பெறும்படி சொல்கிறார் என்றால் நாம் அதில் நிலைத்திருக்க முடியும் என்பதை திருஷ்டாந்தப்படுத்தி காட்டுகிறார்.  

நாம் எந்த ஒரு காரணத்தால் தீட்டுப்பட்டாலும் நம்முடைய ஆத்துமா தீட்டாகும். அதனைக் குறித்து தேவ வசனம் 

லூக்கா 3:16,17  

யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும், நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார்.

தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.

ஆதலால் அனுதினம், நம்முடைய இரட்சிப்பாகிய வஸ்திரத்தை புதிதாக்கிக் கொண்டவர்களாக தேவ சமூகத்தில் வந்து தேவனை ஆராதிக்க வேண்டும்.  அப்போது தேவன் நம்மில் மகிமைப்பட்டுக் கொண்டிருப்பார்.  இவ்விதம் நாம் அனுதினம்  பரிசுத்த ஆவியினாலும், பரிசுத்த அக்கினியாலும் சுத்திகரிக்கும் படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.