தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ரோமர் 7: 22    

உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் சந்நிதியில் எடுக்கிற பொருத்தனையும், நிபந்தனையும் நிறைவேற்றுதல்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு உகந்ததான விசேஷித்த ஆசரிப்பு செய்கிறவர்களாக இருக்க வேண்டும் என்றும், ஆனால் அந்த ஆசரிப்பு தேவனுடைய கட்டளைக்கேற்ப இருக்க வேண்டும் என்றும், அதின் விதிமுறைகளை பற்றியும் தியானித்தோம்.  

ஆனால் அடுத்ததாக தியானிப்பது என்னவென்றால் 

எண்ணாகமம்  30:1-16  

மோசே இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் தலைவரை நோக்கி: கர்த்தர் கட்டளையிடுவது என்னவென்றால்:

ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும், அவன் சொல்தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யக்கடவன்.

தன் தகப்பன் வீட்டிலிருக்கிற ஒரு பெண்பிள்ளை தன் சிறுவயதிலே கர்த்தருக்குப் பொருத்தனைபண்ணி யாதொரு காரியத்தைச் செய்யும்படி தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டால்,

அவள் செய்த பொருத்தனையையும், அவள் பண்ணிக்கொண்ட நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்டும் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருப்பானானால், அவள் செய்த எல்லாப் பொருத்தனைகளும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் நிறைவேறவேண்டும்.

அவள் செய்த பொருத்தனைகளையும், அவள் செய்யும்படி தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்கிற நாளில் அவன் வேண்டாம் என்று தடுத்தால், அது நிறைவேறவேண்டியதில்லை; அவளுடைய தகப்பன் வேண்டாம் என்று தடுத்தபடியால், கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்.

அவள் பொருத்தனை பண்ணும்போதும், தன் உதடுகளைத் திறந்து தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொள்ளும்போதும், அவளுக்குப் புருஷன் இருந்தால்,

அப்பொழுது அவளுடைய புருஷன் அதைக் கேட்டிருந்தும், அதைக் கேள்விப்படுகிற நாளில் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருந்தால், அவளுடைய பொருத்தனைகளும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின நிபந்தனையும் நிறைவேறவேண்டும்.

அவளுடைய புருஷன் அதைக் கேட்கிற நாளில் அவன் வேண்டாம் என்று தடுத்து, அவள் செய்த பொருத்தனையும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் செல்லாதபடி செய்தானேயானால், அப்பொழுது கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்.

ஒரு விதவையாவது, தள்ளப்பட்டுப்போன ஒரு ஸ்திரீயாவது தன் ஆத்துமாவை எந்த நிபந்தனைக்குட்படுத்திக்கொள்ளுகிறாளோ அந்த நிபந்தனை நிறைவேறவேண்டும்.

அவள் தன் புருஷனுடைய வீட்டில் யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும்,

அவளுடைய புருஷன் அதைக் கேட்டும் அவளுக்கு அதை வேண்டாமென்று தடுக்காமல் மவுனமாயிருந்தால், அவள் செய்த எல்லாப் பொருத்தனைகளும், அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின எல்லா நிபந்தனைகளும் நிறைவேறவேண்டும்.

அவளுடைய புருஷன் அவைகளைக்கேட்ட நாளில் அவைகளைச் செல்லாதபடி பண்ணினால், அப்பொழுது அவள் செய்த பொருத்தனைகளும், அவள் தன் ஆத்துமாவையுட்படுத்தின நிபந்தனையைக்குறித்து அவள் வாயிலிருந்து புறப்பட்டதொன்றும் நிறைவேறவேண்டியதில்லை; அவளுடைய புருஷன் அவைகளைச் செல்லாதபடி பண்ணினதினாலே கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்.

எந்தப் பொருத்தனையையும், ஆத்துமாவைத் தாழ்மைப்படுத்தும்படி செய்யப்பட்ட எந்த ஆணையையும், அவளுடைய புருஷன் ஸ்திரப்படுத்தவுங்கூடும், செல்லாதபடி பண்ணவும் கூடும்.

அவளுடைய புருஷன் ஒருநாளும் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருந்தானாகில், அவன் அவளுடைய எல்லாப் பொருத்தனைகளையும், அவள்பேரிலிருக்கிற அவளுடைய எல்லா நிபந்தனைகளையும் ஸ்திரப்படுத்துகிறான்; அவன் அதைக் கேட்ட நாளிலே அவளுக்கு ஒன்றும் சொல்லாமற் போனதினால், அவைகளை ஸ்திரப்படுத்துகிறான்.

அவன் அவைகளைக் கேட்டபின்பு செல்லாதபடி பண்ணினால், அவளுடைய அக்கிரமத்தை அவன் சுமப்பான் என்றார்.

புருஷனையும் ஸ்திரீயையும், தகப்பனையும் தகப்பனுடைய வீட்டில் சிறுவயதில் இருக்கிற அவன் குமாரத்தியையும் குறித்து, கர்த்தர் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே.

மேற்க்கூறப்பட்ட வசனங்களின் படி, மோசே இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் தலைவரை நோக்கி கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால், ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தை செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக் கொண்டாலும், அவன் சொல் தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யக்கடவன். பொருத்தனையை குறித்து 

நீதிமொழிகள் 20:25 

பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்.

மேற்க்கூறப்பட்ட வசன பிரகாரம் ஒரு போதும் பொருத்தனை மீறாதபடி ஜாக்கிரதையாக காணப்பட வேண்டும்.  மேலும்  தன் தகப்பன் வீட்டிலிருக்கிற ஒரு பெண்பிள்ளை தன் சிறுவயதில் கர்த்தருக்கு பொருத்தனைபண்ணி யாதொரு காரியத்தை செய்யும்படி தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக் கொண்டால், அவள் செய்த பொருத்தனையை தகப்பன் கேட்டும் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருப்பானானால் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக் கொண்ட நிபந்தனையும் நிறைவேற்ற வேண்டும்.  அவள் செய்த பொருத்தனைகளையும், அவள் செய்வேன் என்று தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின நிபந்தனையையும், அவளுடைய தகப்பன் வேண்டாம் என்று தடுத்தால், அது நிறைவேறவேண்டியதில்லை.  அவளுடைய தகப்பன் வேண்டாம் என்று தடுத்தபடியால் கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்.  

அல்லாமலும்  தன் உதடுகளை திறந்து, தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக் கொள்ளும் போது, அவள் புருஷன் அதனை கேட்டும், அதனை கேட்ட நாளில் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருந்தால், அவளுடைய பொருத்தனையும், அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின நிபந்தனையும் நிறைவேற்ற வேண்டும்.  அல்லாமலும் அவளுடைய புருஷன் அதை கேட்கிற நாளில் வேண்டாம் என்று தடுத்து, அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின  நிபந்தனை செல்லாதபடி அவன் செய்வானாகில் அது அவளுக்கு மன்னிக்கப்படும். ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தை செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக் கொண்டாலும், அவன் சொல் தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யக்கடவன்.  

அல்லாமலும் ஒரு விதவையயாவது, தள்ளப்பட்டுபோன ஒரு ஸ்திரீயாவது தன் ஆத்துமாவை எந்த நிபந்தனைக்குட்படுத்தி கொள்ளுகிறாளோ அந்த நிபந்தனை நிறைவேற வேண்டும்.  அவள் ஏற்கனவே புருஷனுடைய வீட்டில் யாதொரு பொருத்தனை பண்ணினாலும், யாதொரு காரியத்தை செய்யும்படி தன் ஆத்துமாவை நிபந்தனைப்படுத்திக் கொண்டாலும், அவளுடைய புருஷன் அதனை கேட்டும் அது வேண்டாம் என்று தடுக்காமல் இருந்தால் அவள் செய்த எல்லா பொருத்தனைகளும், அவள் தன் ஆத்துமாவை  நிபந்தனைக்குட்படுத்தின எல்ல நிபந்நனைகளும் நிறைவேற வேண்டும்.  அவளுடைய புருஷன் அவள் எடுத்த நிபந்தனைகளை  செல்லாதபடி தடுத்தால், அது நிறைவேற வேண்டியதில்லை.  அவளுடைய புருஷன் அதை தடுத்தபடியினாலே அவளுக்கு கர்த்தர் மன்னிப்பார்.  எந்த பொருத்தனையையும், ஆத்துமாவை தாழ்மைப்படுத்தும் படி செய்யப்பட்ட எந்த ஆணையையும்,  அவளுடைய புருஷன் ஸ்திரபடுத்தவும் கூடும், செல்லாதபடி பண்ணவும் கூடும்.   

மேற்க்கூறப்பட்ட வசனங்கள் நமக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய வாழ்க்கையில், தகப்பனாகவும், புருஷனாகவும் வந்து  நம்மை ஸ்திரப்படுத்துகிறவராகவும், எடுக்கிற நிபந்தனையை செல்லாதபடி பண்ணுகிறவராகவும் இருப்பார் என்பது   திருஷ்டாந்தம்.  அல்லாமலும் நாம் எடுக்கிற நிபந்தனையை செல்லாதபடி செய்கிறாரென்றால்  நம்முடைய  அக்கிரமத்தை கர்த்தர் சுமந்து தீர்க்கிறார் என்பது திருஷ்டாந்தத்தில் கூட விளங்குகிறது.  எப்படியென்றால் புருஷனையும், ஸ்திரீயையும், தகப்பனையும், தகப்பனுடைய வீட்டில் சிறு வயதில் இருக்கிற அவன் குமாரத்தியையும் குறித்து கர்த்தர் மோசே மூலம் தந்த நியாயபிரமாணத்தின் கட்டளைகள் ஆகும்.  

ஆதலால் பிரியமானவர்களே நம்முடைய வாழ்க்கையில் நியாயபிரமாணத்தை அழிப்பதற்கு அல்ல நிறைவேற்றும்படியாகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் உள்ளத்தில்  வெளிப்படுகிறார்.  ஆதலால் உள்ளான மனுஷனுடைய பரிசுத்தம் நியாயபிரமாணத்தில் விளங்குகிறது என்பது 

ரோமர் 8:12  

ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல.

ஆதலால் பிரியமானவர்களே எழுதப்பட்டிருக்கிற தேவ வசனங்களை யாவரும் நன்றாக தியானித்து, நம்முடைய ஒவ்வொரு செயல்பாடுகளை கர்த்தரின் சந்நிதியில் சீர்திருத்தி ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.