தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 132: 14

இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினபடியால், இங்கே வாசம்பண்ணுவேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நித்தமும் கர்த்தரை முழு உள்ளத்தோடு, முழு மனதோடு, முழு ஆத்துமாவோடு மனமகிழ்ச்சியாக ஆராதிக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் கர்த்தருக்கு ஆராதனை செலுத்த வேண்டும் என்று தியானித்தோம்.  

அடுத்தபடியாக  நாம் தியானிப்பது என்னவென்றால்  

எண்ணாகமம் 28: 8 - 10  

காலையின் போஜனபலிக்கும் அதின் பானபலிக்கும் ஒப்பாகவே மாலையில் மற்ற ஆட்டுக்குட்டியையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள்.

ஓய்வுநாளிலோ போஜனபலிக்காக ஒருவயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், அதின் பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.

நித்தமும் செலுத்தும் சர்வாங்க தகனபலியும் அதின் பானபலியும் அன்றி ஒவ்வொரு ஓய்வுநாளிலும் இந்தச் சர்வாங்க தகனபலியும் செலுத்தப்படவேண்டும்.

மேற்கூறிய வசனங்கள் நாம் தியானிக்கும் போது காலை ஆராதனை யாகிய போஜனபலிக்கும் அதின் பானபலிக்கும் ஒப்பாகவே மாலையில் மற்ற ஆட்டுக்குட்டியையும் கர்த்தருக்கு சுகந்த வாசனையான தகனபலியாகச் செலுத்தகடவீர்கள்.  நாம் காலையில் ஆராதிப்பது போலவே, மாலையிலும் ஆராதிக்க வேண்டும் என்பது கர்த்தரின் கட்டளையாகயிருக்கிறது.  அடுத்தது ஓய்வு நாள் போஜனபலி எழுதப்பட்டிருக்கிறது.  அதெப்படியெனில்  மற்ற நாட்கள் கர்த்தரின் பாதம் தரித்திருப்பதை பார்க்கிலும் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும் அதின் பானபலியையும் செலுத்த கடவர்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.  

ஆனால் பிரியமானவர்களே ஓய்வு நாளில் கர்த்தர் ஏதேன் தோட்டத்தில் ஓய்ந்திருந்து  ஏழாம் நாளை ஆசீர்வதித்து அதனை பரிசுத்தப்படுத்தினார் என்று பார்க்கிறோம்.   ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்தராக நம் உள்ளத்தில் என்றென்றைக்கும் தங்கியிருக்கும் படியாக அவருடைய ஆவியினால் நம்மை நிரப்புகிறார்.  அல்லாமலும் கிறிஸ்து தான் நாளாக  நம்மெல்லோருக்கும் உள்ளத்தில் வெளிப்படுகிறார்.  மற்றும் ஓய்வு நாள் கிறிஸ்து அநேக அற்புதங்கள் செய்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஓய்வு நாளுக்கும் ஆண்டவராயிருக்கிறார்.  

லூக்கா 6:1-5  

பஸ்கா பண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, அவர் பயிர்வழியே நடந்துபோகையில், அவருடைய சீஷர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித் தின்றார்கள்.

பரிசேயரில் சிலர் அவர்களை நோக்கி: ஓய்வுநாளில் செய்யத்தகாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்மாத்திரமே தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைக்கேட்டு வாங்கி,

தான் புசித்ததுமன்றி, தன்னுடனேகூட இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்று சொன்னார்.

மேலும் மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது  பஸ்கா பண்டிகையின் இரண்டாம் நாளைக்கு பின் வந்த முதலாம் ஓய்வு நாளிலே, அவர் பயிர் வழியே நடந்து போகையில், அவருடைய சீஷர்கள் கதிர்களை கொய்து, கைகளினால் நிமிட்டித் தின்றார்கள்.  அப்போது பரிசேயரில் சிலர் அவர்களை நோக்கி ஓய்வு நாளில் செய்யதகாததை ஏன் செய்கிறீர்கள் என்று கேட்க,  இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக தாவீதும், அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்த போது தேவனுடைய வீட்டில் பிரவேசித்து,ஆசாரியர் மாத்திரம் தவிர வேறொருவரும் புசிக்கதகாத தேவ சமூகத்து அப்பங்களைக் கேட்டு வாங்கி தான் புசித்ததுமன்றி, தன்னுடனே கூட இருந்தவர்களும் கொடுத்தானே என்று இயேசு சொல்லி மனுஷ குமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராயிருக்கிறார் என்றார்.  

அல்லாமலும் வேறொரு ஓய்வு நாளிலே, அவர் ஜெப ஆலயத்தில் பிரவேசித்து உபதேசித்தார்.  அங்கே சூம்பின கையையுடைய ஒரு மனுஷன் இருந்தான்.  அப்போது வேதபாரகரும், பரிசேயரும் அவரிடத்தில் குற்றம் பிடிக்கும்படி, ஓய்வு நாளில் சொஸ்தமாக்குவாரோ என்று அவர் மேல் நோக்கமாயிருந்தார்கள்.  அப்போது இயேசு அவர்களை நோக்கி; ஓய்வு நாளில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனை காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம் என்று கேட்டு, அவர்களெல்லாரையும் சுற்றிப்பார்த்து அந்த மனுஷனிடம் உன் கையை நீட்டு என்றார்.  அப்படியே அவன் தன் கையை நீட்டும் போது,அது மறு கையை போல சொஸ்தமாயிற்று. அது வேதபாதகருக்கும், பரிசேயருக்கும் விருப்பமில்லாமற் போனது. 

பிரியமானவர்களே நாம் கர்த்தருக்கு செலுத்துகிற ஆராதனை ஓய்வு நாள் ஆராதனை என்று சொல்லக்கூடாது.  கிறிஸ்து இவ்விதமாக ஓய்வு நாளை கர்த்தருடைய பரிசுத்த நாள் என்கிறார். அவ்விதம் நித்தமும் கர்த்தருக்கு ஆராதனை செலுத்த வேண்டும்.  அல்லாமலும் 

ஏசாயா 58:13,14  

என் பரிசுத்த நாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,

அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய், பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்டி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.

மேற்க்கூறப்பட்ட  வசனங்களை நாம் தியானிக்கும் போது ஓய்வு நாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும்,கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்;  அப்படியானால் கர்த்தரில் மனமகிழ்சசியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி யாக்கோபுடைய சுதந்தரத்தால் போஷிப்பேன் என்று கர்த்தரின் வாய் இதை சொல்கிறது. 

ஆதலால் பிரியமானவர்களே நாம் ஓய்வு நாளை மனமகிழ்ச்சியின் ஆராதனையாக கர்த்தரை ஆராதிக்க வேண்டும். மேலும் தினந்தோறும் தேவனுக்கு நாம் முழு ஆத்தமாவோடும், முழு பெலத்தோடும், முழு மனதோடும். கர்த்தருக்கு ஆராதனை செய்கிறவர்களாகுவோம் என்று ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.