தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மத்தேயு 24: 13

முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் முடிவுபரியந்தம் இரட்சிப்பை காத்துக்கொள்ள வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் உடன் சுதந்தரராயிக்க வேண்டும் என்றும், அவருடைய சுதந்தராகுவது எப்படி என்பது குறித்து தியானித்தோம்.  

அது மட்டுமல்ல கர்த்தர் மோசேயிடம் 

எண்ணாகமம் 27:12-23  

பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இந்த அபாரீம் மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்தைப் பார்.

நீ அதைப் பார்த்தபின்பு, உன் சகோதரனாகிய ஆரோன் சேர்க்கப்பட்டது போல, நீயும் உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய்;

சபையார் வாக்குவாதம்பண்ணின சீன் வனாந்தரத்தில் தண்ணீருக்கடுத்த விஷயத்தில் அவர்கள் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணவேண்டிய நீங்கள் என் கட்டளையை மீறினீர்களே என்றார். இது சீன் வனாந்தரத்தில் காதேஸ் ஊர் அருகே உண்டான மேரிபாவின் தண்ணீருக்கடுத்த காரியமே.

அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி:

கர்த்தருடைய சபை மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போல் இராதபடிக்கு,

அந்தச் சபைக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாய் இருக்கும்படிக்கும், அவர்களைப் போகவும் வரவும் பண்ணும்படிக்கும், மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனாகிய கர்த்தர் ஒரு புருஷனை அவர்கள்மேல் அதிகாரியாக ஏற்படுத்தவேண்டும் என்றான்.

கர்த்தர் மோசேயை நோக்கி: ஆவியைப் பெற்றிருக்கிற புருஷனாகிய யோசுவா என்னும் நூனின் குமாரனை நீ தெரிந்துகொண்டு, அவன்மேல் உன் கையை வைத்து,

அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி, அவர்கள் கண்களுக்கு முன்பாக அவனுக்குக் கட்டளைகொடுத்து,

இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படியும்படிக்கு, உன் கனத்தில் கொஞ்சம் அவனுக்குக் கொடு.

அவன் ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கக்கடவன்; அவனிமித்தம் அந்த ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கக்கடவன்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது என்றார்.

மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே யோசுவாவை அழைத்துக்கொண்டுபோய், அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி,

அவன் மேல் தன் கைகளை வைத்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே அவனுக்குக் கட்டளைகொடுத்தான்.

மேற்க்கூறிய வார்த்தைகள் பிரகாரம் நீ அபாரீம் மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் புத்திரருக்கு  கொடுத்த தேசத்தை பார் என்றும், பார்த்தபின்பு உன் சகோதரனாகிய ஆரோன் சேர்க்கப்பட்டது போல, நீயும் உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய் என்றார்.  என்னவென்றால் இஸ்ரவேல் புத்திரர் மேரிபாவின் தண்ணீர்கடுத்த விஷயத்தில் விசுவாசியாமல் வாக்குவாதம் பண்ணினப்படியால் கர்த்தர் மோசேயிடம் இவ்விதம் சொல்கிறார். எப்படியெனில் பரிசுத்தம் பண்ண வேண்டியவர்கள் கர்த்தரின் கட்டளையை மீறினார்கள். 

இந்த காரியம் சீன் வனாந்தரத்தில் காதேஸ் ஊர் அருகே இந்த காரியம் நடந்தது. இதன் காரணம் என்னவென்றால் தண்ணீர்  கிடைக்காவிட்டால் நாம் செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால்,  நம் இருதயத்தில் கர்த்தரை பரிசுத்தம் பண்ணினால் நம் உள்ளத்தில் ஜீவ தண்ணீர் உறவு துறக்கும்.  ஆனால் மோசே கர்த்தரிடம் சபை மேய்ப்பன் இல்லாத மந்தையை போலிராதபடிக்கு, அந்த சபைக்கு முன்பாக போக்கும், வரத்துமாய் இருக்கும் படிக்கும்,அவர்களை போகவும், வரவும் பண்ணும்படிக்கும், மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனாகிய கர்த்தர் ஒரு புருஷனை அவர்கள் மேல் அதிகாரியாக ஏற்படுத்த வேண்டும் என்றான்.  

அப்போது கர்த்தர் மோசேயிடம் ஆவியை பெற்றிருக்கிற  புருஷனாகிய யோசுவா என்னும் நூனின் குமாரனை தெரிந்துக்கொண்டு அவன் மேல் கையை வைத்து  அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி, அவர்கள் கண்களுக்கு  முன்பாக அவனுக்கு கட்டளைக் கொடுத்து, இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கீழ்படியும் படிக்கு, உன் கனத்தில் கொஞ்சம் அவனுக்கு கொடு என்றும் அவன் ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கக்  அவனிமித்தம்  அந்த ஆசாரியன் கர்த்தரின் சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்ககடவன்.  அவருடைய கட்டளையின் படியே அவனும் அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது என்றார்.  அப்படியே மோசே கர்த்தருடைய கட்டளையின் படியே வரவும் வேண்டியது என்றார். 

பிரியமானவர்களே கர்த்தர் மோசேயிடம், இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் யாவரும் அவனுக்கு கீழ்படியும்படியாய் உன் கனத்தில் கொஞ்சம் கொடு என்று சொல்கிறதையும், அதேப்போல் மோசே செய்கிறதையும் பார்க்கிறோம்.  மேலும் நாம் சிந்திக்க வேண்டிய காரியம் என்னவென்றால் கர்த்தர் இஸ்ரவேலரை வைத்து திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால், கர்த்தரே மோசேயை குறித்து சாட்சிக் கொடுத்தவராயிருந்தார்.  அப்படியிருந்தும் மேரிபாவின் தண்ணீர் விஷயத்தில் விசுவாசியாமற் போனபடியால், இஸ்ரவேல் புத்திரருக்கு கொடுக்கிற தேசத்தை பார் என்று சொல்கிறதை பார்க்கிறோம்.  ஆனால் தேசத்தை பார்ப்பாய், அதில் பிரவேசிக்க மாட்டாய் என்று சொல்கிறார்.  அது மட்டுமல்ல உன் கனத்தில் கொஞ்சம் யோசுவாவுக்கு கொடு என்று சொல்கிறார். 

பிரியமானவர்களே, நாம் கர்த்தரின் வார்த்தைகளை கேட்டு கீழ்படிந்து விசுவாசியாமற் போனால் கர்த்தர் நமக்கு தந்த தாலந்தை மற்றவர்களுக்கு கொடுத்து கனம்பண்ணுகிறவர். இவ்விதமாகவே மோசேயை கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்தி காட்டுகிறார். அப்படியாக கர்த்தர் கட்டளைபடியே  யோசுவாவை அழைத்துக் கொண்டுபோய் அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி அவன் மேல் கைகளை வைத்து கர்த்தர் தனக்குச் சொன்னபடியே அவனுக்கு கட்டளைக்கொடுத்தான்.  

ஆதலால் பிரியமானவர்களே நாம் ஒருபோதும் கர்த்தரின் வார்த்தைகளை அசட்டை பண்ணாதபடி காத்துக்கொண்டு கர்த்தரின் கிருபைகளை பெற்றுக்கொண்டவர்களாக இருக்கும்படியாக  ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.