தேவனுக்கே மகிமையுண்டாவதாக

கலாத்தியர் 4: 7

ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் உடன் சுதந்தரராயிருப்போம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம், நம்முடைய உள்ளம் அந்நிய அக்கினியால் கிரியைச்செய்யாதபடி, பரிசுத்த அக்கினியால் நிரப்பப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்றும், அந்நிய அக்கினியை தேவ சமூகத்தில் கொண்டு வந்தவர்கள் செத்துப்போனார்கள் என்று தியானித்தோம்.  

அடுத்ததாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எண்ணாகமம் 27:1-12  

யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் குடும்பங்களில், மனாசேயின் குமாரனாகிய மாகீரின் மகனான கிலெயாத்துக்குப் பிறந்த ஏபேருக்குப் புத்திரனாயிருந்த செலோப்பியாத்தின் குமாரத்திகளாகிய மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவர்கள் வந்து,

ஆசரிப்புக் கூடாரவாசலிலே மோசேக்கும், ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், பிரபுக்களுக்கும், சபையனைத்திற்கும் முன்பாக நின்று:

எங்கள் தகப்பன் வனாந்தரத்தில் மரணமடைந்தார்; அவர் கர்த்தருக்கு விரோதமாகக் கூடின கோராகின் கூட்டத்தாரில் சேர்ந்தவர் அல்ல, தம்முடைய பாவத்தினாலே மரித்தார்; அவருக்குக் குமாரர் இல்லை.

எங்கள் தகப்பனுக்குக் குமாரன் இல்லாததினாலே, அவருடைய பேர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப்போகலாமா? எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்குக் காணியாட்சி கொடுக்கவேண்டும் என்றார்கள்.

மோசே அவர்களுடைய நியாயத்தைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுபோனான்.

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:

செலோப்பியாத்தின் குமாரத்திகள் சொல்லுகிறது சரிதான்; அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே சுதந்தரம் கொடுக்கவேண்டும்; அவர்கள் தகப்பன் பின்வைத்த சுதந்தரத்தை அவர்களுக்குக் கிடைக்கும்படி செய்வாயாக.

மேலும் நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: ஒருவன் குமாரன் இல்லாமல் மரித்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் குமாரத்திக்குக் கொடுக்கவேண்டும்.

அவனுக்குக் குமாரத்தியும் இல்லாதிருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் சகோதரருக்குக் கொடுக்கவேண்டும்.

அவனுக்குச் சகோதரரும் இல்லாதிருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் தகப்பனுடைய சகோதரருக்குக் கொடுக்கவேண்டும்.

அவன் தகப்பனுக்குச் சகோதரர் இல்லாதிருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் வம்சத்திலே அவனுக்குக் கிட்டின உறவின்முறையானுக்குக் சுதந்தரமாகக் கொடுக்கவேண்டும்; இது, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் புத்திரருக்கு நியாயவிதிப்பிரமாணமாய் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.

பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இந்த அபாரீம் மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்தைப் பார்.

மேற்க்கூறிய வார்த்தைகள் தியானிக்கும் போது யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் குடும்பங்களில் நான்காம் தலைமுறையாகிய குமாரத்திகளாகிய மக்லாள், ஒக்லாள், நோவாள்,மில்காள், திர்சாள் என்பவர்கள் வந்து ஆசரிப்புக்கூடார வாசலிலே மோசேக்கும், ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், பிரபுக்களுக்கும், சபையனைத்திற்குப் முன்பாக வந்து நின்று எங்கள் தகப்பன் வனாந்தரத்திலே மரணமடைந்தார்; அவர் கோராகின் கூட்டத்தாரை சேர்ந்தவரல்ல  தம்முடைய பாவத்தினால் தான் மரித்தார்; அவருக்கு குமாரர் இல்லை; அதினாலே அவருடைய பேர் வம்சத்தில் அற்றுப்போகாதபடி எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்கு காணியாட்சிக் கொடுக்க வேண்டும் என்றார்கள். 

அவர்களுடைய நியாயத்தை மோசே கர்த்தரின் சந்நிதியில் கொண்டு வந்தான்.  அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: செலோப்பியாத்தின் குமாரத்திகள் சொல்வது சரிதான்; அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே சுதந்தரம் கொடுக்க வேண்டும்.  அப்படி அவர்கள் தகப்பன் பின் வைத்த சுதந்தரம் கிடைக்கும்படி செய்வாயாக என்றாரர். மேலும் கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு நியாயவிதி பிரமாணமான கட்டளையை சொல்கிறார்.  அதென்னவென்றால் இஸ்ரவேல் புத்திரரில் ஒருவன் குமாரன் இல்லாமல் மரித்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் குமாரத்திக்கு கொடுக்க வேண்டும்.  அவனுக்கு குமாரத்தியும் இல்லாதிருந்தால், அந்த சுதந்தரத்தை அவன் சகோதரருக்குக் கொடுக்க வேண்டும்.   அவனுக்கு சகோதரரும் இல்லாதிருந்தால் அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் தகப்பனுடைய சகோதரருக்குக் கொடுக்க வேண்டும். அவன் தகப்பனுக்கு சகோதரர் இல்லாதிருந்தால் அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் வம்சத்திலே அவனுடைய உறவின் முறையாரிடத்தில் கொடுக்க வேண்டுமென்பது கர்த்தர் இட்ட கட்டளை.  

இந்த கட்டளைகளெல்லாம் கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்னப்பிறகு; நீ இந்த அபாரீம் மலையில் ஏறி நான் இஸ்ரவேல் புத்திரருக்கு கொடுத்த தேசத்தை பார்.  நீ அதை பாரத்த பின்பு, உன் சகோதரனாகிய ஆரோன் சேர்க்கப்பட்டது போல, நீயும் உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய் என்றார்.  மேலும் குமாரத்திகளுக்கு கர்த்தர் சுதந்தரம் உண்டு என்பதனை விளக்கி காட்டுகிறார்.  எப்படியெனில் இதனை குறித்து கர்த்தர் சொல்கிறது என்னவென்றால் 

கலாத்தியர் 3:26-29  

நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.

ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.

யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.

நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்.

மேற்க்கூறிய வசனங்களை  நாம் தியானிக்கும் போது  கிறிஸ்துவை தரித்தவர்கள் எல்லாரும்  ஒன்றாகயிருப்பார்கள் என்றும், அங்கு எந்த வித ஜாதி, மத, இன வித்தியாசம் இல்லாதபடியும், ஆணென்றும், பெண்ணென்றும் இல்லாதபடியும் எல்லாரும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாகயிருப்போம் என்றும் கர்த்தர் சொல்கிறார். ஏனென்றால் நாம் எல்லோரும் கிறிஸ்துவுக்குள் சுதந்தரராயிருக்கிறோம்.  இதனை திருஷ்டாந்தபடுத்தி கர்த்தர் மோசே மூலம் செலோப்பியாத்தின் குமாரத்திகளை குறித்துக் கூறியிருக்கிறார்.  

அதனால் பெண்களுக்கு (குமாரத்திகளுக்கு) சுதந்தரம் சபையில் ஊழியம் இல்லை என்று அநேகர் சொல்லுவது தவறான கருத்துக்கள்.  காரணம் என்னவென்றால் நம் எல்லாருடைய உள்ளத்திலும் கிறிஸ்து தான் எழும்பி கர்த்தரின் வேலையை செய்கிறாரேயல்லாமல் நாமல்ல என்பதினை நினைத்துக்கொள்ள வேண்டும்.  ஆனால் பழைய ஏற்பாட்டில் புருஷர்கள் என்று எழுதப்பட்டது,  திருஷ்டாந்தம்.  எப்படியென்றால் ஆண்களாயிருந்தாலும், பெண்களாயிருந்தாலும் பூரண புருஷராகுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.  

ஆதலால் பிரியமானவர்களே நாமெல்லாரும் கிறிஸ்துவின் உடன் சுதந்தரராக ஆகும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.